For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குறைப்பிரசவத்தில பிறந்த குழந்தையை மருத்துவமனையில் எப்படி பார்த்துக்கணும் தெரிஞ்சுக்கோங்க.

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை தொடுவதற்க்கே சில தாய்மார்கள் பயப்படுகிறார்கள். குறைப்பிரசவத்தில் பிறந்ததால் அந்த குழந்தைகள் எடை குறைவாக மற்றும் மிக சிறியதாக இருப்பார்கள். எனவே குழந்தைகளை தூக்குவதற

|

உங்கள் குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்தாலும் அவர்களின் அன்பு எப்போதும் போல் உங்களுக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்று ஒரு வழிமுறை உள்ளது. எல்லா குழந்தைகளும் பெற்றோரின் வாசனையை நுகரும் பண்பை பெற்று இருக்கிறார்கள்.

How to Bond With Your Preemie at the Hospital

குழந்தைகள் எப்போதும் அம்மாவிடம் இருக்க வேண்டும் என்று தான் ஆசை கொள்கிறார்கள். சில தாய்மார்கள் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை எவ்வாறு தூக்குவது, தொடுவது மற்றும் உணவுகளை கொடுப்பது என்பதில் தயக்கம் கொள்கிறார்கள். உங்கள் தயக்கத்தை தள்ளி வைத்து விட்டு குழந்தைகளை எவ்வாறு கையாளுவது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொடுதல்

தொடுதல்

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை தொடுவதற்கே சில தாய்மார்கள் பயப்படுகிறார்கள். குறைப்பிரசவத்தில் பிறந்ததால் அந்த குழந்தைகள் எடை குறைவாக மற்றும் மிக சிறியதாக இருப்பார்கள். எனவே குழந்தைகளை தூக்குவதற்கு தாய்மார்கள் சற்று தயக்கத்துடன் இருப்பார்கள். உண்மையில், குழந்தைக்கு அம்மாவின் தொடுதலை விட சிறந்த தீர்வு எதுவும் இல்லை. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை எவ்வாறு தூக்க வேண்டும் என்று மருத்துவமனையில் உங்களுக்கு குறிப்புகள் வழங்கப்படும் அந்த வழியில் நீங்கள் குழந்தையை பாதுகாக்கலாம். அல்லது உங்கள் குழந்தையை இன்குபேட்டர்களில் வைத்து இருந்தால் குழந்தைகளை சற்று நேரம் தூக்கி உங்கள் உடலோடு சேர்த்து அனைத்துக் கொள்ளுங்கள். இது குழந்தைகளுக்கு மிக பெரிய பலமாக இருக்கும்.

MOST READ: குழந்தைகள் விளையாடும் போது அவர்களை கவனிக்கிறீங்களா? கவனிக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா?

மசாஜ்

மசாஜ்

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எப்போதும் மசாஜ் செய்யக் கூடாது. இது குழந்தைகளுக்கு பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். எனவே குழந்தைகளை முறையான வகையில் தூக்க மட்டுமே செய்ய வேண்டும் எந்த வித மசாஜும் அவர்களுக்கு இப்போது செய்யக் கூடாது.

உணவு

உணவு

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் அவ்ளோவு விரைவாக தாய்ப்பால் குடிக்க தயாராகமாட்டார்கள். அதற்காக நீங்கள் குழந்தைக்கு இப்போது தாய்ப்பால் தேவையில்லை என்ற அலட்சிய முடிவை எடுக்க வேண்டாம். குழந்தைகள் குடிக்கிறார்களோ இல்லையோ அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க முயற்சி செய்யுங்கள். டப்பா பால் கொடுத்தாலும் அதை தாய்ப்பால் கொடுக்கும் முறை போல் மடியில் வைத்து அனைத்தவாறு கொடுங்கள். இது குழந்தையுடன் நீங்கள் இணைவதற்கான ஒரு வாய்ப்பாகும். குழந்தைகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் போது அவர்கள் மிகவும் பாதுகாப்பாக உணருகிறார்கள்.

கங்காரு பராமரிப்பு

கங்காரு பராமரிப்பு

கங்காரு பராமரிப்பு தான் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் இருக்கும் ஒரு சிறந்த பராமரிப்பு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். கங்காருகள் எப்படி தான் வயிற்றுப் பகுதியில் குட்டிகளை தூக்கி சுமக்கிறதோ அதே போல் உங்கள் குழந்தைகளை தூக்கி சுமப்பது குழந்தைகளை பாதுகாப்பாக உணர வைக்கும். இது குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கும், இன்குபேட்டர்களைச் சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குழந்தைகளை உங்கள் மார்புக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் சுமந்து கொள்ளுவதே கங்காரு பராமரிப்பு ஆகும். குழந்தைகளுக்கு டையப்பர் மட்டும் அணிந்து உங்கள் உடலோடு சேர்த்து அனைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் போர்வைக் கொண்டு போர்த்திக் கொள்ளுவதால் வெப்பநிலையை சமமாக வைக்க முடியும். இந்த பராமரிப்பு குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது குழந்தைகளை 1 மணி நேரம் முதல் ஒரு நாள் முழுவதும் கூட கங்காருகளை போல் தூக்கி சுமக்கலாம். அம்மாக்கள் மட்டும் அல்ல அப்பாக்கள் கூட குழந்தைகளை இவ்வாறு தூக்கி சுமக்கலாம்.

பாடுதல் அல்லது வாசித்தல்

பாடுதல் அல்லது வாசித்தல்

குழந்தைகளுக்கு அம்மாவின் சத்தம் மற்றும் வாசனையை உணரும் திறன் உள்ளது. அவர்கள் எப்போதும் உங்கள் குரலை கேட்க ஆசைப்படுவார்கள். உங்கள் குரல் குழந்தைகளுக்கு மென்மையான ஒன்றாக இருக்கும். எனவே குழந்தைக்கு ஏதாவது கதை புத்தகங்கள் அல்லது நல்ல அர்த்தமுள்ள பாடல்களை பாடிக்காட்டலாம். இல்லையெனில் குழந்தைகளிடம் பேசுங்கள். அவர்கள் உங்களை கூர்ந்து கவனிப்பார்கள். இது குழந்தைகளுக்கு உங்களின் அன்பை வெளிப்படுத்தும் ஒன்றாக தோன்றும்.

MOST READ: பிறந்த குழந்தைகளுக்கு கூட ஒழுக்க முறைகள் இருக்கா? அது என்னது?

குழந்தையை அறிதல்

குழந்தையை அறிதல்

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் அனைவரும் ஒவ்வொரு விதமான நடவடிக்கைகள் கொண்டு இருப்பார்கள். எனவே முதலில் குழந்தைகளைப் பற்றி அறிந்துக்கொள்ளுங்கள். அதாவது சில குழந்தைகள் தாய்ப்பால் பருகி கொண்டு இருக்கும் போது மலம் கழிப்பார்கள். இதற்காக சோர்வு அடையத் தேவையில்லை. குழந்தைகள் என்ன செய்கிறார்கள் அவர்களுக்கு எப்போது என்ன தேவை என்பதை எல்லாம் அறிந்துக் கொண்டு குழந்தைகளை பாதுகாப்பான முறையில் பார்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Bond With Your Preemie at the Hospital

your little one looks so small, so you might be hesitant to even hold him. Don't be. In fact, what baby needs right now more than anything is his parent's touch. A nurse can show you the proper way to hold your preemie. If your baby is in an incubator and you cannot hold him, ask if you can just put your hand or arm inside for a few minutes to give him some skin-to-skin touch.
Story first published: Friday, September 6, 2019, 16:52 [IST]
Desktop Bottom Promotion