For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண் குழந்தை பலசாலியா இருக்க நீங்க வைக்க வேண்டிய 50 ஹனுமான் பெயர்கள் இதோ உங்களுக்காக...

பெயர் என்பது ஒரு நபரின் முதல் அடையாளம். ஒரு மனிதனின் பெயர் அவரைப் பற்றி மற்றவருக்கு உரைக்கும். அதனால் பெயர் வைக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் ஒருவருடைய அடையாளமே அதுதான்.

|

பெயர் என்பது ஒரு நபரின் முதல் அடையாளம். ஒரு மனிதனின் பெயர் அவரைப் பற்றி மற்றவருக்கு உரைக்கும். இந்துவோ, கிறிஸ்தவனோ, முஸ்லிமோ, தனது மதம் சார்ந்த பெயரை ஒரு குழந்தைக்கு சூட்டுவதால், அந்த பெயர் கொண்ட நபரின் குணாதிசயத்துடன் அந்த குழந்தை வளரும் என்ற நம்பிக்கை நம்மில் பலருக்கும் உண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மதமும் பெயரும்

மதமும் பெயரும்

பெரும்பாலும் ஒரு மதத்தின் முக்கிய கடவுள் அல்லது பக்தர்களின் பெயரை தங்கள் குழந்தைக்கு பெற்றோர்கள் சூட்டி மகிழ்கின்றனர். இவ்வாறு ஒரு குழந்தைக்கு பெயர் சூட்டுவது எளிதான காரியம் இல்லை. அதற்கு உரிய தக்க காரண காரியங்களை உணர்ந்து கொண்டு பெயர் வைக்க வேண்டும்.

MOST READ: நெஞ்சில் தேங்கியிருக்கிற நாள்பட்ட சளியை உடனடியாக வெளியேற்ற பாட்டி வைத்தியங்கள் இதோ...

சங்கடப்படுத்தும் பெயர்கள்

சங்கடப்படுத்தும் பெயர்கள்

குழந்தை பெரியவனாக வளர்ந்த பின் தன் பெயரை சொல்ல கூச்சப்படும் அளவிற்கான பெயரை சூட்டுவதை பெற்றோர் விரும்புவதில்லை. வாழ்நாள் முழுவதும் ஒரு நபரோடு இருக்கும் பெயர் நல்ல பெயராக இருக்க வேண்டும் என்ற ஆர்வம் எல்லா பெற்றோருக்கும் உண்டு. வாழ்நாள் முழுவதும் ஒருவருடைய அடையாளமே பெயர் தான். அதனால் பெயர் வைக்கும்போது மிகமிக கவனமாக இருக்க வேண்டும்.

ராசியும் பெயரும்

ராசியும் பெயரும்

பொதுவாக இந்து மதத்தில், குழந்தையின் பிறந்த ராசியைப் பொறுத்து அந்த ராசிகேற்ற எழுத்தில் தொடங்கும் பெயரை சூட்டுவது வழக்கம். பெயர் வைக்கும் விழாவில் சூட்டப்படும் பெயரை குழந்தைக்கு சூட்டினாலும் பல வித செல்லப் பெயர்கள் கொண்டு குழந்தையை கூப்பிடுவதும் இந்நாளில் வழக்கமாகி விட்டது.

வித்தியாசமான பெயர்கள்

வித்தியாசமான பெயர்கள்

இன்றைய நாட்களில் தங்கள் குழந்தைகளுக்கு வித்தியாசமான, வேறு யாரும் வைக்காத பெயர்களை வைக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்புகின்றனர். அந்த பெயருக்கு நல்ல அர்த்தம் இருக்க வேண்டும் என்றும், அது தங்கள் கலாச்சாரத்துடன், மதத்துடன், பாரம்பரியத்துடன் தொடர்புள்ளதாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர். இன்றைய நாட்களில் தூய தமிழ் பெயர்களை வைக்க வேண்டும் என்று விரும்புபவர்களும் உண்டு.

MOST READ: 2019 ஆம் ஆண்டுக்கான கேது பெயர்ச்சி எப்போது வருகிறது? அது எந்தெந்த ராசிகளை பாதிக்கும்?

கடவுளின் பெயர்கள்

கடவுளின் பெயர்கள்

வேறு சிலர் தாங்கள் விரும்பி வழிபடும் கடவுளின் பெயரைத் தங்கள் குழந்தைக்கு வைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இந்து மதத்தில் எல்லா கடவுளுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர் உண்டு. ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு விதமான அர்த்தம் உண்டு. அந்த விதத்தில் பல்வேறு நாமங்களைக் கொண்ட ஒரு கடவுள் மற்றும் ராம பக்தர், ஹனுமான். அவருடைய குணம், செயல் மற்றும் சாதனையை போற்றும் விதத்தில் இவர் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

ஏன் ஹனுமான் பெயர் வைக்க வேண்டும்?

ஏன் ஹனுமான் பெயர் வைக்க வேண்டும்?

ஹனுமான் குரங்கு வடிவ கடவுள் ஆவார். கேசரி மற்றும் அஞ்சனா தேவியின் புதல்வனாக இவர் பிறந்தார். வாயு தேவனின் ஆசிர்வாதத்தால் பிறந்த இவர் ஒழுக்கத்தின் உதாரணமாக விளங்குபவர். ஸ்ரீ ராமரிடம் இவருடைய அர்பணிப்பு, பக்தி, விசுவாசம் ஆகியவை எல்லோராலும் அறியப்பட்டது. சக்தி, தைரியம், அறிவு, நம்பிக்கை, புத்திகூர்மை, ஞானம், பயமின்மை, வீரம், இரக்கம், விடாமுயற்சி, சுயநலமின்மை, பணிவு போன்றவை இவருடைய சிறப்பு பொருந்திய குணங்களாகும். இத்தகைய நல்லொழுக்கங்களைக் குறிக்கும் விதமாக இவரின் ஒவ்வொரு பெயரும் அமைந்திருக்கும். இவருடைய பெயரை இடைவிடாமல் ஜெபிப்பதால் எல்லா வித தீய சக்திகளும் நம்மை விட்டு அகலும் என்பது நம்பிக்கை.

ஐம்பது நாமங்கள்

ஐம்பது நாமங்கள்

ஸ்ரீ ராம பக்தர் ஹனுமானுக்கு ஆயிரம் பெயருக்கு மேல் உண்டு என்பது உங்களுக்கு ஆச்சர்யத்தை அளிக்கலாம். இவற்றுள் பல பெயர்கள் மிகவும் நீளமாக, உச்சரிக்க கடினமாக இருப்பவை ஆகும். உங்களுக்கு எளிதில் புரியும் விதத்தில், எளிமையான, கேட்பதற்கு இனிமையான மிகவும் சிறிய பெயர்களை உங்களுக்காக கீழே கொடுத்துள்ளோம். கீழே உள்ள அட்டவணையில் ஹனுமானின் 50 விதமான பெயர்களை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். அதன் அர்த்தம் மற்றும் பெயரின் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

MOST READ: பஸ்ஸில் போகும்போது பிஸ்கட் சாப்பிடக்கூடாது... ஏன்னு தெரியுமா?

பெயரும் விளக்கமும்

பெயரும் விளக்கமும்

ஆண் குழந்தைக்கான பெயர்கள் - ஹனுமானின் பெயர் விளக்கத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1. அப்யந்த் - பயமற்றவன்

2. அக்ஷன்த்ரே - ராவணனின் இளைய மகன் 16 வயதான அக்ஷனை கொலை செய்தவன்

3. அமித் விக்ரம் - எல்லையற்ற மற்றும் மிகைப்படுத்தக் கூடிய வீரம்

4. ஆஞ்சயா - தோல்வியில்லாதவன், முடிவில்லாதவன்

5. ஆஞ்சநேயா - அஞ்சனையின் மைந்தன்

6. அதுலித் - ஒப்பில்லாதவன்

7. பக்தவத்சல் - பக்தர்களைக் காப்பவன், பக்தர்களை நேசிப்பவன்

8. பவிஷ்ய சதுரனா - எதிர்காலத்தை அறிந்தவன்

9. சதுர் பஜன் - நான்கு கைகள் கொண்டவன்

10. சிரஞ்சீவி - இறப்பில்லாதவன் , ஹனுமான் இறப்பில்லாதவர் என்று அறியப்படுபவர்.

11. தீன் பந்தவ் - ஒடுக்கப்பட்டவரின் பாதுகாவலர் மற்றும் காப்பாளர்

12.தீரா - தைரியம் மிக்கவன்

13. தியான் ஆஞ்சநேயா - தியானத்தில் இருப்பவன்

14. குணசாகர் - ஒழுக்கத்தின் கடல்

15. ஞானசாகர் - அறிவு கடல்

16. ஹனுமந்த் - ஹனுமானின் ஒரு பெயர், வடிவமற்ற தாடையை உடையவன்

17. காலனாப் - நேரத்தை நிர்வகிப்பவன், நேரத்தை கட்டுப்படுத்துபவன்

18. காஞ்சனாப் - தங்க நிற உடலை உடையவன்

19. காமரூபின் - நினைத்தவுடன் வடிவத்தை மாற்றிக் கொள்பவன். ஹனுமான் நினைத்த மாத்திரத்தில் தன்னுடைய பெரிய உடலை மிகவும் சிறியதாக மாற்றும் திறன் உள்ளவர்.

20. லோக்பூஜ்யா - பிரபஞ்சத்தால் வழிபடக் கூடியவன்

21. மஹத்யுத்தா - கதிர்வீச்சின் தோற்றம் உடையவன்

22. மஹா தபசி - மிகப்பெரிய முனிவர் மற்றும் தியானம் செய்பவர்

23. மஹா தேஜஸ் - மிகவும் பிரகாசமானவர்

24. மனோஜ்வயா - காற்று போன்ற சக்திவாய்ந்த, விரைவான மற்றும் வலுவான

25. மாருதி - வாயு பகவான் மாருதின் மகன்,

26. பல்குன் சகா - அர்ஜுனனின் நண்பன். ஹனுமான் மகாபாரத இதிகாசத்திலும் இடம்பெறுகிறார். அதில் அவர் பாண்டவர்களை சந்தித்து, அர்ஜுனனின் நண்பராகிறார்.

27. பிங்காக்ஷா - மஞ்சள்- பழுப்பு கண்களைக் கொண்டவன்

28. பிரபாவே - பிரபலமான இறைவன், சிறந்த, புத்திசாலித்தனமான, கம்பீரமானவர்

29. ப்ரஞயா - அறிஞர் அல்லது ஞானம் மிக்கவர்

30. பிரசன்னத்மனே - எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவன்

31. பிரதாப்வதே - போரில் சிறந்தவன், வீரம் மிக்கவன்

32. ராமதூத்யா - ஸ்ரீ ராமரின் தூதுவன்

33. ராமேஷ்தா - ராம பக்தன்

34. ரத்னகுண்டல்யா - இரத்தின கற்கள் பதித்த காதணிகளை அணிந்தவன்

35. ருத்ரான்ஷா - சிவனின் பகுதி

36. ருத்ரையா - சிவனின் பிறப்பு

37. சமீர்தனுஜ் - வாயு பகவானின் புதல்வன்

38. சர்வமந்த்ரா - அனைத்து பாடல்களையும் மந்திரங்களையும் உடையவர்

39. ஷாந்தயா - அமைதியானவன்

40. சூரன் அல்லது சூர்யா - பயமற்றவன் , தைரியசாலி , பலம் நிறைந்தவன்

41. ஸ்படிகபா - தெள்ளத் தெளிவாக

42. சுசையா - தூய்மையான, ஒழுக்கமான, சுத்தமான, அப்பாவி

43. சுரார்ச்சிதா - சொர்க்கத்தில் உள்ளவர்களால் வணங்கப்படுபவர்

44. தேஜஸ் - மிகவும் பிரகாசமானவன்

45. வாக்தீக்ஷா - வாக்கு வன்மை உடையவன்

46. வாகமைன் - சிறந்த பேச்சாளர்

47. வஜ்ரகாயே - கடினமான உலோகம் போன்ற உறுதியான உடலை உடையவன்

48. வாயுநந்தன் - வாயு பகவானின் மகன்

49. விஜிதேந்திரியா - அனைத்து உணர்வுகளையும், அதாவது காம் அல்லது பாலுணர்வு, கோபம், மாயை ஆகிய எல்லாவற்றிலும் முதன்மைப் பெற்றவர்

50. யோகின் - யோகி அல்லது முனிவர்

இப்படி ஹனுமானின் பெயரைத் தங்கள் குழந்தைக்கு சூட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் மேலே கூறிய ஆட்டவனையில் இருந்து எதாவது ஒரு பெயரை சூட்டலாம், இந்த தேர்வுகள் மிகவும் பிரசித்தமானவையாக இருக்கும். இவை தனித்தன்மை பெற்றவையாக இருக்கும். மேலும் இத்தகைய பெயர்கள் அதிக மக்களை கவர்வதாகவும் இருக்கும். உடனே உங்களுக்கு பிடித்த பெயரை தேர்வு செய்யுங்கள்.

ஜெய் ஹனுமான் !

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

50 Popular Lord Hanuman Names for Baby Boys

The name is the first identity of a person. A person’s name tells a lot about the kind of person he or she may be. And choosing the right name is by no means an easy task. You certainly don’t want to give your child a name that will embarrass him when he grows up and even make him a laughing stock or make him want to change his name when he comes of age.
Story first published: Wednesday, January 23, 2019, 12:04 [IST]
Desktop Bottom Promotion