For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு 2 வயதானால் ஏற்படும் முக்கிய விஷயங்கள்: டெரிபிள் 2!

குழந்தைகள் என்பவர்கள் மிகவும் அழகான படைப்பு; இந்த பதிப்பில் குழந்தைகளுக்கு 2 வயதானால் பெற்றோர் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் மற்றும் டெரிபிள் 2 குறித்த தகவல்களை பார்க்கலாம்.

|

குழந்தைகள் என்பவர்கள் மிகவும் அழகான படைப்பு; குழந்தைகள் பிறந்து கொஞ்சம் விவரம் தெரியும் பருவத்தில் அவர்களின் உடலின் உள்ளாக அதாவது மன ரீதியாக மற்றும் உடல் ரீதியாக பல மார்ரகள் நிகழும். இந்த மாற்றங்கள் நல்ல வகையிலும் இருக்கலாம்; தீய வழியிலும் இருக்கலாம். மாற்றம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் காலப்போக்கில் மாறி விடலாம்; ஆனால் சில நினைவுகள் பசுமரத்தாணி போல அந்த பிஞ்சு நெஞ்சில் அப்படியே பதிந்து விடவும் செய்யலாம்.

Terrible Twos In Kids: All You Need To Know

இந்த பதிப்பில் குழந்தைகளுக்கு 2 வயதானால் பெற்றோர் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் மற்றும் டெரிபிள் 2 குறித்த தகவல்களை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டெரிபிள் 2 என்றால் என்ன?

டெரிபிள் 2 என்றால் என்ன?

குழந்தைகள் 18 மாத கால வயது அல்லது இரண்டு வயதை எட்டும் பொழுது பற்பல மாற்றங்களை அடைவர்; அவர்களின் உள்ளுணர்வு மற்றும் நடவடிக்கைகள் பெரிதும் மாறுபடும். அவர்கள் பார்க்கும் விஷயங்கள் மற்றும் மனிதர்கள் என அனைத்தையும் தன்னில் பிரதிபலிக்க முயல்வர்; இதனால் ஏற்படும் விளைவு விபரீதமாகவும் கூட அமைந்து விடலாம்.

எதனால் தொடங்கும்?

எதனால் தொடங்கும்?

இது எல்லா குழந்தைகளிலும் இயற்கையான மாற்றமே! நாம் கூட இந்த நிலையை கடந்து தான் வந்து இருப்போம். குழந்தைகள் இந்த இரண்டு கால வயதில் பல விஷயங்களை கற்று கொள்ள ஆரம்பிப்பர்; இந்த காலகட்டம் மிகவும் முக்கியமானது. குழந்தைகள் எந்தெந்த விஷயங்களை கற்று கொள்கிறார்களோ அது அவர்களின் மனதில் ஆழமாக பதிந்து அதுவே அவர்களின் குணநலனாக மாறிவிடும் அபாயம் உண்டு.

புரியவில்லையா?

புரியவில்லையா?

என்ன பெற்றோர்களே! ஒன்றும் புரியவில்லையா? குழந்தைகள் இரண்டு வயது முதல் 3 அல்லது 4 வயது வரை என்ன நல்ல விஷயங்கள் கற்றாலும், அது அவர்களின் பிறவி குணம் என்று கூறுகிறோம் அப்படி மாறி, நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். இதுவே குழந்தைகள் கோபம், பொறாமை, புறம் பேசுதல் போன்ற விஷயங்களை கற்று கொள்ள நேர்ந்தால், விளைவு கூடியதாக அமைந்து, குழந்தையின் எதிர்காலம் ஒரு பொறாமை குணம் நிறைந்தவராக, தீய எண்ணம் கொண்ட குழந்தையாக மாறிவிட அதிக வாய்ப்புகள் உள்ளன.

எப்படி அறிவது?

எப்படி அறிவது?

இந்த டெரிபிள் 2 என்னும் விஷயம் குழந்தையில் ஏற்பட்டுள்ளதை எப்படி அறிவது என்று யோசித்தால், குழந்தைகளின் நடத்தை மூலமாக தன அறிந்து கொள்ள முடியும். இந்த டெரிபிள் 2 சிண்ட்ரோம் குழந்தையில் ஏற்பட தொடங்கி விட்டதை குழந்தைகளின் இந்த செயல்கள் மூலம் அறியலாம். இதை கண்டு கொள்ள பெற்றோர் குழந்தையின் செயல்பாடுகளை நன்கு கூர்ந்து கவனித்து வருதல் அவசியம்.

மேலும் படிக்க: உங்க குழந்தைகள் நீண்ட ஆயுளுடன் இருக்க நீங்கள் இருக்க வேண்டிய "ஜீவ்புத்ரிகா விரதம்"

குழந்தையின் செயல்கள்!

குழந்தையின் செயல்கள்!

டெரிபிள் 2 சிண்ட்ரோமை குழந்தையின் குறிப்பிட்ட செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளின் மூலம் அறியலாம். அவையாவன: குழந்தைகள் நன்கு சிறிது விளையாடி பாசமாக இருக்கும் பொழுது திடீரென கோபமாக மாறி அழுவது, எல்லாவற்றிற்கும் அழுது அடம்பிடிப்பது - கோபப்படுவது, எல்லாரின் கவனத்தையும் எதையாவது செய்து (நல்லதோ கெட்டதோ) ஈர்க்க நினைப்பது, தனது குழந்தை என்னும் நிலைக்கு மாறாக நடந்து கொள்வது போன்றவை தான்.

விளைவு என்ன?

விளைவு என்ன?

இந்த நிகழ்வுகளை பெற்றோர் கவனிக்காமல் அப்படியே விட்டு விட்டால், பின்னாளில் குழந்தைகள் தங்களின் ஆரம்ப வளர்ச்சி கால கட்டமான 2 முதல் 4 வயதில் கற்ற விஷயங்களையே தனது வாழ்நாளில் கடைபிடிக்க தொடங்குவர். இவ்வாறு குழந்தைகள் கற்ற விஷயங்களை பெற்றோர் திருத்த தவறி விட்டால், பிள்ளைகள் அதையே சரி என்று நினைத்து கொள்வர். குழந்தைகள் தீய வழியில் நடக்க, அவர்களின் வாழ்வு கெட பெற்றோர்களே மறைமுகமாக காரணமாகி விடுவார்கள்!

சரியாகி விடுமா?

சரியாகி விடுமா?

இந்த டெரிபிள் 2 சிண்ட்ரோம் குழந்தைகள் 4 வயதை கடக்கையில் தானாக சரியாகும் என்று கூறப்படுகிறது; ஆனால், இந்த வயதிற்கு முன்னதாக குழந்தையின் வாழ்வில் ஏற்படும் சம்பவங்கள் ஆழமான பாதிப்பை குழந்தைகளின் மனதில் ஏற்படுத்தி இருந்தால், கட்டாயம் அவை அழியாமல் அப்படியே அவர்களின் இதயத்தில் நிலைத்து இருக்கும்.

மேலும் படிக்க: தாயின் வயிற்றில் குழந்தையின் நிலை பற்றி உணர்த்தும் ஸ்கேன் புகைப்படத் தொகுப்பு!

எப்பொழுது வெளிப்படும்?

எப்பொழுது வெளிப்படும்?

இது குழந்தைகளின் வளர்ச்சி கால கட்டத்தில் வெளியே தெரியாது; அவர்கள் வளர்ந்து ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சூழலில் அவர்களின் உள்ளே உறங்கி வரும் அந்த ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய விஷயம் வெளிப்பட்டு விடும். மீண்டும் உரைக்கிறேன், குழந்தையின் மனதில் பதிந்தது நல்ல விஷயம் என்றால், விளைவும் நாளளதாகவே இருக்கும்; தீய விஷயம் என்றால் விளைவும் தீயதாகவே இருக்கும்.

பெற்றோர் கடமை!

பெற்றோர் கடமை!

டெரிபிள் 2 சிண்ட்ரோம் விளைவை குழந்தைகளின் வாழ்வில் இருந்து விலக்கி வைக்க, பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என்றால், குழந்தைகள் தங்களது தவறான நடவடிக்கையை வெளிப்படுத்தும் பொழுது, அவர்களுக்கு இந்த நடவடிக்கையால் என்ன நிகழும் என்பதை அவர்கள் குழந்தை மனதிற்கு புரியும் வகையில் எடுத்து சொல்ல வேண்டும். குழந்தைகளின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து, அதை அந்தந்த சமயத்திலேயே திருத்தி சரி செய்ய முயல வேண்டும்.

நீங்கள் குழந்தையை திருத்த மேற்கொள்ளும் எந்த ஒரு முயற்சியும் வன்முறையாக இருக்க கூடாது; குழந்தைகளுக்கு அன்பான முறையில் எடுத்து சொல்லி திருத்த வேண்டியது அவசியம்!

மேலும் படிக்க: இராமருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Terrible Twos In Kids: All You Need To Know

Terrible Twos In Kids: All You Need To Know
Story first published: Thursday, October 4, 2018, 15:28 [IST]
Desktop Bottom Promotion