For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரசகுடும்பத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள இத்தனை விதிமுறைகளா?

உலகில் பலர் இளவரசர் ஹேரி மற்றும் மேகன் மார்கள் எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளனர். ஆனால் அரசகுடும்பத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான விதிமுறைகள் அதிர்ச்சியை

|

உலகமே எதிர்பார்த்து காத்திருந்த இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசர் ஹேரி - மேகன் மார்களின் திருமணம் சமீபத்தில் கோலாகலமாக முடிந்தது. இப்பொழுது அனைவரின் கேள்வியும் அவர்கள் எப்பொழுது குழந்தை பெற்றுக்கொண்டு அரசகுடும்பத்தை பெரிதாக்க போகிறார்கள் என்பதுதான்.

Pregnancy

கடந்த வருடம் ஹேரி தாங்கள் இருவரும் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வமாய் இருக்கிறோம் என கூறியிருந்தார். எனவே விரைவில் அரச குடும்பத்திடம் இருந்து மகிழ்ச்சியான செய்தியை எதிர்பார்க்கலாம். இங்கிலாந்து அரசகுடும்பத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கென நிறைய விதிமுறைகள் உள்ளன. மேகன் மார்கள் கர்ப்பமானால் அவரும் இந்த விதிமுறைகளை நிச்சயம் பின்பற்ற வேண்டும். இந்த விதிமுறைகளை கேட்டால் நிச்சயம் உங்களுக்கு தலைசுற்றும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தையின் பாலினம்

குழந்தையின் பாலினம்

கேட் மற்றும் வில் இன்னொரு இளவரசரை பெற்றுக்கொள்ள போகிறார்களா அல்லது இளவரசியையா என்பது மிகப்பெரிய மர்மமாக இருந்தது. சொல்லப்போனால் இதுவரை எந்த இளவரசனையும், இளவரசியையும் அவர்கள் பிறக்கும் முன் அவர்கள் எந்த பாலினம் என்று யாரும் அறிந்ததில்லை. இது அரசகுடும்பத்தில் நிலவும் பொதுவான விதி ஆகும், இதனை யாரும் மீறக்கூடாது. கேட் அண்ட் வில்- உம் இளவரசர் லூயிஸ் பிறக்கும் வரை அவரின் பாலினத்தை அறிந்துகொள்ளவில்லை.

வெளிநாட்டு பயணங்களுக்கு அனுமதியில்லை

வெளிநாட்டு பயணங்களுக்கு அனுமதியில்லை

மற்ற அரச குடும்ப பெண்களை விட அமெரிக்காவில் பிறந்த மேகன் இந்த விதிமுறையால் அதிகம் பாதிக்கப்படலாம். ராஜகும்பங்களின் விதி படி கர்ப்பமாக இருக்கும் அரக்குடும்ப பெண்கள் மிக குறைந்த அளவே வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டும், அதுவும் உச்சகட்ட பாதுகாப்புடன். வெளிநாடு பயணமே போகவில்லை என்றால் இன்னும் நல்லது. அரசக்குடும்ப பெண்கள் பெரும்பாலும் கர்ப்பகாலத்தில் பயணங்கள் செய்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றனர். பொதுவாகவே அவர்களுக்கு "கர்ப்பகால விடுப்பு" என்பது இல்லை. அவர்கள் வீட்டின் அருகிலியே இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டால் உடனடியாக கிடைக்க வசதியாக இருக்கும். இருப்பினும் இளவரசி கேட் இளவரசர் லூயிஸ் வயிற்றில் இருக்கும்போது நார்வே பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்ட்டி

பார்ட்டி

இளவரசர் ஹேரி மற்றும் மேகன் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முன் அரசக்குடும்ப விதிகளின் படி ஒரு பார்ட்டி வைக்க வேண்டும் ( நமது கலாச்சாரத்தின்படி வளைகாப்பு). அரசகுடும்ப நிபுணர் விக்டோரிய ஆர்பிட்டர் கூறும்போது "அரசகுடும்பத்தினர் மிகப்பெரிய செல்வந்தர்கள் ஆவர். எனவே ஊதாரித்தனமான ஒரு பார்ட்டி பொருத்தமானதாக இருக்காது. அவர்கள் வெளியே சென்று அவர்களுக்காக எதுவும் வாங்க இயலாது". 2013 ஆம் ஆண்டு பிபா மிடல்டன் இளவரசர் ஜார்ஜ் பிறப்பதற்கு கேட்டிற்காக கொடுத்த பார்ட்டி இதுபோன்று இல்லை என்று பல அரசக்குடும்ப நிபுணர்கள் கூறினார்கள்.

செவிலியர்கள் எண்ணிக்கையை

செவிலியர்கள் எண்ணிக்கையை

பாரம்பரியமாக அரச குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு வீட்டில்தான் பிரசவம் நடக்க வேண்டும். ஆனால் இந்த விதிமுறை இளவரசி டயானாவை தொடர்ந்து இளவரசி ஆன்னீயாலும் உடைக்கப்பட்டது. இவர் இளவரசர் வில்லியம்சை பேடிங்டனில் உள்ள செயின்ட் மேரி மருத்துவமனையில் பெற்றெடுத்தார். இந்த புதிய பழக்கத்தை தொடர்ந்து இளவரசர் ஜார்ஜ், இளவரசி கரோலெட் மற்றும் இளவரசர் லூயிசும் அதே மருத்துவமனையில்தான் பிறந்தார். அந்த சமயங்களில் அங்கே மருத்துவர்களின் படையும், செவிலியர்களின் படையும் நிறைந்திருந்தது. சொல்லப்போனால் இளவரசி கரோல்ட் பிறந்தபோது கேட்டிற்கு மூன்று செவிலியர்கள் உதவிக்கு இருந்தனர். மேகனுக்கும் அதே அளவு கவனிப்பு இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

ராணிக்கே முதல் தகவல்

ராணிக்கே முதல் தகவல்

மேகன் மார்களும் ஹேரியும் தங்கள் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்த விரும்பினால் முதலில் தெரிவிக்கப்பட வேண்டியது மகாராணிக்குத்தான். அரசகுடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அது முதலில் அவர்களின் மகாராணிக்கே தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதற்கு பிறகுதான் தாத்தா-பாட்டிக்கே குழந்தை பிறந்ததை கூறுவார்கள். ஒருவேளை மேகன் அட்லாண்டிற்கு முதல் போன் செய்ய விரும்பினால் அதற்குமுன் ஹேரி தன் சகோதரரை போல பிரத்யேக தொலைபேசி மூலம் தங்கள் ராணியிடம் கூறிவிட வேண்டும்.

மூன்று அல்லது நான்கு பெயர்கள்

மூன்று அல்லது நான்கு பெயர்கள்

நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஒரு பெயர் வைக்கவே எவ்வளவு சிரமப்படுவீர்கள், ஹேரியும், மேகனும் தங்கள் குழந்தைக்கு நான்கு பெயர் வைக்க வேண்டும் அப்பொழுது அவர்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள். அரசகுடும்பத்தினர் பொதுவாகவே நான்கு பெயர்களை கொண்டிருப்பார்கள். உதாரணத்திற்கு இளவரசர் ஹேரி ஹென்றி சார்லஸ், ஆல்பர்ட் டேவிட், இளவரசி கேட் மற்றும் வில் -ன் குழந்தைகளுக்கு மூன்று பெயர்கள், இளவரசர் ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ், இளவரசி கரோலெட் எலிசபெத் டயானா மற்றும் லூயிஸ் ஆர்தர் சார்லஸ். எனவே மேகன் மற்றும் ஹேரி தங்கள் குழந்தைக்கு குறைந்தது மூன்று பெயராவது வைக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: pregnancy baby
English summary

Megan markle royal pregnancy rules

he whole world is waiting to know for when Prince Harry and Megan Markle is going to get a baby. But the royal pregnancy rules are really shocking
Story first published: Saturday, July 21, 2018, 19:11 [IST]
Desktop Bottom Promotion