குழந்தைகளை புகைப்படங்கள் எடுக்க சில சூப்பர் டூப்பர் ஐடியாக்கள்!

புகைப்படங்கள் நினைவுகளை சேகரிக்க உதவும் நினைவு பெட்டகங்கள்; குழந்தைகளை புகைப்படங்கள் எடுக்க சில சூப்பர் டூப்பர் ஐடியாக்கள் பற்றி இந்த பதிப்பில் படித்து அறிவோம்!

பல வருடங்களுக்கு முன் குழந்தைகளாய் இருந்த நாம், இன்று இளைஞர்கள், அப்பாக்கள், நடுத்தர வயதுக்காரர்கள் என்று ஆகி விட்டோம்; நம் குழந்தை பருவம் முதல் இப்பொழுது வரை எத்தனையோ இனிமையான நிகழ்வுகள் நடைபெற்று இருக்கும்; அவை அனைத்தும் இப்பொழுது நமக்கு நினைவு இருப்பது இல்லை.

Must Take Baby Photography Ideas

சில சமயங்களில் நாம் மிகவும் அழகாக இருந்து இருப்போம், மகிழ்ச்சியாக இருந்து இருப்போம்; ஆனால், இப்பொழுது வயது அதிகரிப்பு காரணமாக நம் அழகு காணாமல் போய் இருக்கலாம். ஆனால், அன்றைய நாளின் படங்கள் இருந்தால், மனம் தளர்வு அடையும் பொழுது "அப்பவே அப்படி இருந்த நான் எதுக்கும் கலங்க கூடாது" என்று நம் மனதுக்கு நாம் ஆறுதல் கூறிக் கொள்ளலாம்; மகிழ்ச்சியான படங்களை பார்க்கும் பொழுது நம் முகத்தில் கட்டாயம் புன்னகை குடி கொள்ளும்.

ஒவ்வொருவரும் வாழ்நாளில் கீழ்கண்ட புகைப்படங்களை ஒரு முறையாவது எடுத்திருக்க வேண்டும்; அப்படி உங்கள் வாழ்வில் தவறி போன தருணங்களை உங்கள் குழந்தைகளின் மூலமாக நிறைவேற்றி கொள்ள முயலலாம். நாம் பெறாத இன்பத்தை, மகிழ்ச்சியை நமது குழந்தைகளாவது பெற பெற்றோர்கள் செய்ய வேண்டிய, எடுக்க வேண்டிய சில புகைப்படங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.

அவற்றை பார்த்து, உங்கள் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் சேகரிக்க தொடங்குங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வளரும் குழந்தை!

வளரும் குழந்தை!

ஒவ்வொரு நாளும் உங்கள் குழந்தைகள் வளர்ந்து கொண்டு செல்கிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம் பெற்றோர்களே! ஆகையால், குழந்தையின் ஒவ்வொரு நாள் வளர்ச்சியையும் பதிவு செய்து வந்தால், ஒவ்வொரு கால கட்டத்தில் குழந்தையிடத்திலும், உங்கள் இடத்திலும் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன என்பதை உங்களால் அறிய முடியம்.

கொஞ்சும் குழந்தை!

கொஞ்சும் குழந்தை!

குழந்தை பருவத்தில் கள்ளம் கபடம் அறியாத காலத்தில், குழந்தைகள் அனைவரின் மீதும் தூய அன்பை காட்டுவர்; சிறு சிறு பொருட்களையும், தங்களது செல்ல பிராணிகளையும் கொஞ்சி மகிழ்வர். இந்த நிகழ்வுகள் கண்டிப்பாக சேகரிக்கப்பட வேண்டிய நினைவுகள் ஆகும்.

அழுகாச்சி குழந்தை!

அழுகாச்சி குழந்தை!

குழந்தைகள் என்ன ஏது என்று விவரம் தெரியாத பருவத்தில், பொம்மையை பார்த்தால் கூட கதறி அழும் பழக்கம் கொண்டு இருப்பார்கள்; பின்னாளில் எதற்கு எல்லாம் பயந்தோம் என்று நினைத்து பார்த்து சிரிக்க ஏற்ற நிகழ்வு இது! சேகரித்து வைக்க மறக்க வேண்டாம்!

அதட்டும் குழந்தை!

அதட்டும் குழந்தை!

குழந்தை பருவத்தில் காரணமே இல்லாமல் அல்லது தனக்கு தொல்லை தரும் விஷயத்திற்காக, விளையாட்டிற்காக யார் என்று பார்க்காமல், கொன்னுடுவேன் என்று அதட்டும் குழந்தைகளின் அழகே அழகு தான்! கட்டாயம் இந்த நினைவை சேகரிக்கவும்.

அலங்கரிக்கும் குழந்தை!

அலங்கரிக்கும் குழந்தை!

பொதுவாக பெண் குழந்தைகள் தங்களிடம் இருக்கும் பொம்மைகளை அழகாக அலங்கரிக்கும் குணம் கொண்டு இருப்பர்; அந்த நிகழ்வுகள் நினைவுகளாக்க பட வேண்டியவை! பின்னாளில் தனது திறமையை தானே கண்டு வியக்க அதிக வாய்ப்புகள் உண்டு.

குளிக்கும் குழந்தை!

குளிக்கும் குழந்தை!

குழந்தைகள் குளிக்கும் பொழுது, மிகவும் அழகாக இருப்பார்கள்; அதிலும் நுரைகளை வைத்து விளையாண்டு, அதில் மூழ்கி பனிப்பிரதேசத்தில் இருந்து வந்த தேவதைகளாக ஜொலிக்கும் குழந்தைகளின் அழகுக்கு ஈடு இணையே இல்லை!

நான் எப்படி வந்தேன்?

நான் எப்படி வந்தேன்?

குழந்தைகள் சற்று வளர்ந்த பின், நான் எப்படி வந்தேன் என்று கேட்டு பெற்றோரை சங்கடப்படுத்துவது உண்டு; அந்த சமயத்தில் குழந்தை கூடைக்குள் இருப்பது போன்று எடுத்த புகைப்படம் இருந்தால், உன்னை இப்படி தான் கடையில் இருந்து வாங்கி வந்தேன் என்று கூறி, குழந்தையை தமாஷாக சமாளிக்கலாம்.

ஸ்பைடர் மேன்!

ஸ்பைடர் மேன்!

குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களை போல அவர்களுக்கு வேஷம் இட்டு, அவர்களை மகிழ்விக்க முயலலாம்; அந்த தருணங்களை நினைவு பெட்டகங்கள் ஆக சேகரித்து மகிழலாம்! குழந்தைகளை இவ்வாறு புகைப்படம் எடுத்து வைத்தால், பின்னாளில் அவர்களுக்கு அது அதிக மகிழ்ச்சியை தரும்!

சிங்கிச்சான் சட்டை!

சிங்கிச்சான் சட்டை!

குழந்தைகள் வளர்ந்த பின் அவர்களுக்கு மிகவும் டீசண்டான ஆடைகளை தான் அணிவித்து பார்க்க முடியும்; குழந்தைகளும் அதை தான் அந்த சமயம் விரும்புவர். ஆகையால் குழந்தைகளுக்கு விவரம் தெரியாமல் இருக்கும் பொழுதே, அவர்களுக்கு சிங்கிச்சான் ஆடைகளை அணிவித்து அழகு பார்த்து விடுங்கள்!

சிந்தி சாப்பிடும் குழந்தை!

சிந்தி சாப்பிடும் குழந்தை!

குழந்தைகள் சாப்பிட்டால், வீடே இரணகளம் ஆவதுடன் அவர்கள் அடையும் உணவு கோலத்தையும் அழகாக புகைப்படம் எடுத்து வைத்து கொள்ளுங்கள்! இது பின்னாளில் குழந்தைகளுக்கு காட்டி, அவர்களுடன் பெற்றோரும் சேர்ந்து சிரிக்க நல்ல ஒரு வாய்ப்பை அளிக்கும்!

மிட்டாய் குழந்தை

மிட்டாய் குழந்தை

குழந்தை பருவத்தில் அனைத்து பிள்ளைகளுக்கும் மிட்டாய் சாப்பிடுவதில் ஒரு அலாதி பிரியம் இருக்கும். அது வளர்ந்த பின் சில நபர்களுக்கு மாறாமல் அப்படியே இருக்கும். குழந்தைகள் மிட்டாய் தின்பதை படம் எடுத்து, வளர்ந்த பின்னும் மாறாமல் இருக்கும் பொழுது காட்டும் பொழுது ஏற்படும் சந்தோசம் தனிப்பட்ட சந்தோஷம் ஆகும்.

ஃபிளப்பி சட்டை

ஃபிளப்பி சட்டை

குழந்தைகளுக்கு, முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு தேவதை போன்ற ஃபிளப்பி சட்டை போட்டு அழகு பார்க்க குழந்தை பருவம் உதவும்; வளர்ந்த பின் அதை எல்லாம் போட குழந்தைகள் கூச்சம் அடைவது உண்டு. ஆகையால் குழந்தை பருவத்தில் மறக்காமல் இந்த காஸ்டியூமில் புகைப்படம் எடுத்து விடுங்கள் பெற்றோர்களே!

கடற்கரை வீடு

கடற்கரை வீடு

கடற்கரைக்கு சென்றாலே, கடலை பார்த்தாலே குழந்தைகள் அதிகம் குஷி அடைந்து விடுவது உண்டு; குழந்தைகள் கடற்கரையில் குழந்தையாய் இருக்கும் பொழுது செய்த செயல்களை, கட்டிய வீட்டை புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள்! பின்னாளில் குழந்தையின் திறமையை அவர்களுக்கே உணர்த்த இது உதவும்.

கார்ட்டூன் ஆடை

கார்ட்டூன் ஆடை

குழந்தைகளுக்கு கார்ட்டூன் ஆடைகள், விலங்குகளை போன்ற ஆடைகள் போன்ற ஃபேன்சி ஆடைகள் அணிவித்து அழகு பார்த்து விடுங்கள்! குழந்தைகள் வளர்ந்த பின் அதற்கான சந்தர்ப்பம் இல்லாமல், கிடைக்காமல் போய் விடலாம். ஆதலால் வாய்ப்பை இழந்து விடாதீர்கள்!

படிக்கும் குழந்தை!

படிக்கும் குழந்தை!

குழந்தைகள் சில நேரங்களில் படிப்பது, வரைவது, எழுதுவது போன்ற விஷயங்களில் அதிக ஆர்வம் கட்டுவது உண்டு; அந்த சமயங்களில் அவர்கள் படிக்கும் அழகை நன்கு நிறைய படங்கள் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், வளர்ந்த பின் அந்த ஆர்வம் குறையலாம். ஆதலால், குழந்தைகள் படித்தார்கள் என்பதற்கு ஒரு சான்றாக இருக்கவும், அப்ப படிச்ச இப்ப உனக்கு என்ன கேடு என்று திட்டவும் இந்த புகைப்படம் பெரிதும் உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, September 15, 2018, 13:40 [IST]
Desktop Bottom Promotion