For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக கற்றுத்தர வேண்டிய முக்கிய விஷயங்கள்!

வாழ்க்கை என்பது பெற்றோர்களால் கொடுக்கப்பட்டு, அவர்களால் வழிகாட்டப்பட்ட ஒன்று; இந்த பதிப்பில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக கற்றுக்கொடுக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் பற்றி படிக்கலாம்.

|

வாழ்க்கை என்பது பெற்றோர்களால் கொடுக்கப்பட்டு, அவர்களால் வழி காட்டப்பட்ட ஒன்று; பிள்ளைகளுக்கு வாழ்க்கையை கொடுத்த பெற்றோர்கள், அவர்களுக்கு வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்றும் கற்றுக் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். பெற்றோர்கள் என்ன கற்றுக் கொடுக்கிறார்களோ, எப்படி வளர்கிறார்களோ அதன் படி தான் பிள்ளைகளின் எதிர்கால குணம் அமைகிறது.

Important Life Lessons That You Should Teach Your Kids

பிள்ளைகள் எதிர்காலத்தில் மிகச்சிறந்த குடிமக்களாக, நல்ல மனிதர்களாக பெற்றோர்கள் சரியான வளர்ப்பு முறையை கடைபிடிக்க வேண்டும்; நல்ல விஷயங்களை பிள்ளைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும். இந்த பதிப்பில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக கற்றுக்கொடுக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் பற்றி படிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேர்மை தான் வாழ்க்கை!

நேர்மை தான் வாழ்க்கை!

வாழ்க்கையில் யாரையும் ஏமாற்றாமல், எந்த விஷயத்திலும் ஒளிவு மறைவு இல்லாமல் நாணயமாக நேர்மையாக நடந்து கொண்டால் எல்லாம் நல்ல முறையில் நடக்கும் என்று நேர்மையின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.

மேலும் நேர்மை என்னும் உயரிய குணத்தை கடைபிடிப்பது வாழ்க்கை பாதையில் கடினமாக இருக்கலாம்; ஆனால் நேர்மையினால் இறுதியில் கிடைக்கும் வெற்றி மிகவும் சுவையாக, மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும் என்று பிள்ளைகளுக்கு சொல்லி வளருங்கள்.

நற்பண்புகள் முக்கியம்!

நற்பண்புகள் முக்கியம்!

குழந்தைகளுக்கு நீங்கள் சொல்லும் விஷயங்கள் புரிய ஆரம்பிக்கும் பொழுதே அதாவது குழந்தைகள் கருவில் வளரும் பொழுதே நாம் சொல்லுவதை புரிந்து கொள்வர்; எனவே முடிந்த அளவு கர்ப்ப காலத்தில் இருந்தே குழந்தைகளுக்கு நற்பண்புகள் என்றால் என்ன, அவற்றை ஏன் மேற்கொள்ள வேண்டும் என்று கற்று கொடுத்து வளர்க்க வேண்டும்.

‘கோபப்பட்டு அசிங்கமாக திட்டி விட்டால், அதனால் அவமானப்படுபவர், கோப்பட்டவரே' என்று நீங்கள் கற்று கொடுக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் உதாரணம் காட்டி கற்பிக்க முயலுங்கள்.

ஆரோக்கியம் அத்தியாவசியம்!

ஆரோக்கியம் அத்தியாவசியம்!

‘சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்' என்பது போல, உடல் ஆரோக்கியமானதாக இருந்தால் தான், நம்மால் எதையும் செய்ய முடியும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் உள்ளத்தின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி போன்றவை ஏற்படும். ஆரோக்கியம் தான் வாழ்க்கையின் நிறைவிற்கான அஸ்திவாரம் என்று கூறி குழந்தைகள் ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் மேற்கொண்டு, அவர்கள் ஆரோக்கியமான உணவுகள் உணவு உட்கொள்ள செய்து வளருங்கள்!

மரியாதை வேண்டும்..

மரியாதை வேண்டும்..

நாம் சந்திக்கும் எந்த ஒரு உயிரற்ற மற்றும் உயிருள்ள பொருள்கள் அல்லது மனிதர்கள் மற்றும் விலங்கு - பறவைகள் என எல்லா உயிரினங்களும் அதற்கென உரிய மரியாதையை அளிக்க வேண்டும். ஒருவருக்கு மரியாதை கொடுத்தால் தான் அது நமக்கு திரும்ப கிடைக்கும்; மரியாதையும் அன்பும் காட்டினால் தான் நாய் கூட நன்றியுடன் நமக்கு சேவை செய்யும் என்று மரியாதையின் அவசியத்தை உணர்த்த வேண்டும்.

மேலும் படிக்க: ஆண்களை கச்சிதமான உடல் எடையுடன் வைத்து கொள்ளும் சித்தர்களின் பயிற்சிகள்..!

இழப்பும் நன்மைக்கே!

இழப்பும் நன்மைக்கே!

குழந்தைகளுக்கு நல்ல விஷயங்கள் ஏற்படும் பொழுது மகிழ்ச்சியாக இருக்க கற்று தருவது போல, வாழ்க்கையில் ஏதாவது ஒரு கால கட்டத்தில் எதையாவது இழக்க நேரிட்டால் கூட எந்த சமயங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அதை எப்படி சமாளிக்க வேண்டும் போன்ற விஷயங்களையும் எடுத்துக் கூறி கற்று கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு எது நடந்தாலும் நன்மைக்கே, இழப்பு ஏற்பட்டால் கூட அதனால் ஏதேனும் நன்மை பின்னால் ஏற்படும் என்று கற்று கொடுக்க வேண்டும்.

நேரம் தவறாமை..

நேரம் தவறாமை..

குழந்தைகள் தங்கள் வாழ்வில் எப்பொழுதும், எங்கேயும் நேரம் என்பதை தவறியவர்களாக இருக்க கூடாது; நேரம் தவறாமையை கடை பிடிக்கும் மனிதர்களே வாழ்வில் அதிகம் சாதித்தவர் என்று கூறி வளருங்கள்! குழந்தைகள் நேரம் தவறாமையை கடை பிடித்தால் தான் வாழ்வில் ஒரு தலைவனுக்காக தகுதியை பெற முடியும்; நேரம் தவறாமை தான் தலைமையை ஏற்பதற்கான அடிப்படை தகுதி என்று கூறி வளருங்கள்.

பொறுப்பு பொக்கிஷம்!

பொறுப்பு பொக்கிஷம்!

குழந்தைகள் தாங்கள் வைத்து இருக்கும் பொருட்கள், தங்களுடன் பழகும் நண்பர்கள், தான் வாழும் சமுதாயம், தனக்கு உயிர் கொடுத்த பெற்றோர்கள் என எல்லா விஷயங்களின் மீதும் பொறுப்பு உணர்வை வெளிப்படுத்த வேண்டும். பொறுப்பு எங்கு தேவையோ அங்கு அதை வெளிப்படுத்தி, பிற இடங்களில் அடக்கம் வெளிப்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்று வலியுறுத்துங்கள்.

மன்னிப்போம் மறப்போம்!

மன்னிப்போம் மறப்போம்!

குழந்தைகளுக்கு ஒருவர் தனக்கு தீங்கு விளைவித்தால் அதை மன்னிக்கவும், விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டால் அதை மறக்கவும் கற்று கொடுக்க வேண்டும். நன்மை செய்ப்பவர்களுக்கு நன்மையை மட்டுமே செய்ய வேண்டும், ஒருவர் நமக்கு தீங்கு செய்தாலும் கூட அவருக்கும் நன்மையை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த கருத்தை போதித்து குழந்தையை வளர்த்தல் நல்லது.

மேலும் படிக்க: எந்தெந்த ராசிக்காரர்கள் எப்படி பழிவாங்குவார்கள் தெரியுமா?

கற்றலுக்கு எல்லை இல்லை..

கற்றலுக்கு எல்லை இல்லை..

குழந்தைகளுக்கு பள்ளி படிப்பும், கல்லூரி படிப்பும் தான் படிப்பு என்று கூறாமல், வாழ்வில் கற்பதற்கு எல்லையே இல்லை என்பதை கற்பியுங்கள். ஒவ்வொரு கலையை கற்று கொள்வதும், கற்ற காலையில் வித்தகராவதும் அத்தனை எளிதானது அல்ல; ஆனால் நீ உன் வாழ்நாளில் உன்னால் முயன்ற அளவு பல கலைகளை கற்று அதில் வித்தகனாகி அதை நீ வாழும் சமுதாயத்தில் உள்ள மக்களுக்கு நன்மை செய்யும் விதமாக பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி வளருங்கள்!

பண மேலாண்மை!

பண மேலாண்மை!

குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டிய ம் இக முக்கியமான விஷயம் பண மேலாண்மை; குழந்தைகள் வாழ்வில் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் தன்னுடைய நல்ல குணம் தான் என்றும் நிரந்தரம்; குணம் மட்டுமே வெல்லும் என்ற கருத்தை புரிய வைக்க வேண்டும். பணம் வாழ்க்கைக்கு தேவை தான்; ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை குழந்தைகளுக்கு நன்கு மனதில் பதியும் வண்ணம் கற்பிக்க வேண்டும்.

எப்படி கற்பிப்பது??

எப்படி கற்பிப்பது??

குழந்தைகளுக்கு மேற்கூறிய விஷயங்களை கற்பிக்கும் பொழுது, அவற்றை உதாரணங்கள் மூலமாக, நீதிக் கதைகள் மூலமாக, நிஜத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் மூலமாக கற்று கொடுத்தால் அது அதிகம் பலன் அளிக்கும். குழந்தைகள் வாழ்வில் எல்லா விஷயங்களிலும் வெற்றி பெற்று நிலைத்து நல்ல மனிதனாய் மக்கள் மனதில் இடம் பெற, மேற்கூறிய இந்த விஷயங்களை அவர்தம் மனதில் பதியுமாறு கற்றுக் கொடுத்து வளர்ப்பது மிகவும் அவசியம்!

இந்த விஷயங்களை கற்றுக் கொடுத்து வளர்ப்பது தான் நல்ல பெற்றோர்களுக்கு அழகு மற்றும் அடையாளம்!

மேலும் படிக்க: ஆண்களின் பிறப்புறுப்பை சேதப்படுத்தும் உறவு நிலை எது என்று நீங்கள் அறிவீரா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Important Life Lessons That You Should Teach Your Kids

Important Life Lessons That You Should Teach Your Kids
Desktop Bottom Promotion