Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
ஆண் பெண் இரட்டையர் செல்லங்களுக்கான அழகமுது தமிழ் பெயர்கள்!
இன்றைய காலத்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் அழகான மாடர்னான பெயரை சூட்ட வேண்டும் என்று சில பெற்றோர் விரும்புவர்; சிலரோ தந்தை -தாயின் அல்லது முன்னோரின் பெயரை சூட்ட எண்ணுவர்; வேறு சிலர் தமிழ் பெய
குழந்தைகள் பிறப்பதில், ஆண் குழந்தை பிறப்பு, பெண் குழந்தை பிறத்தல், பெண் இரட்டையர், ஆண் இரட்டையர் என பல வகைகள் இருந்தாலும், விதியின் புதுமையாய் பிறப்பவர்கள் ஆண் - பெண் இரட்டையர்களே! இவ்வாறு ஆண் - பெண் இரட்டையர் வீட்டில் ஜனித்தால், வீட்டிற்கோ, வீட்டில் இருப்பவர்களுக்கோ ஆகாது என்று பழங்காலத்திலிருந்து கூறப்பட்டு வருகிறது; ஆனால், இவ்வாறு பிறந்து வளர்ந்து சாதித்த பல குழந்தைகள் நன்றாகவே உள்ளனர். அவர்தம் குடும்பமும் நலத்துடனேயே இருக்கிறது.
முன்னோர் வாக்குகளை பின்பற்றுவது நல்லது தான்; ஆனால் அதற்காக எதற்கெடுத்தாலும் ஆகாது, நடக்காது என்று சொல்லும் முன்னோர் வாக்கு முடியாது என்று கூறும் போதே அதன் முக்கியத்துவம் இழந்து மதிப்பற்றதாகி விடுகிறது. எனவே, ஆண் - பெண் இரட்டையர்கள் வீட்டில் பிறந்தால், அவர்களை பாரமாக, சாபமாக எண்ணாமல் அவர்கள் உங்களுக்கு கிடைத்த வரமாக எண்ணுங்கள்; கடவுள் தந்த அற்புத பரிசு அவர்கள்.

அப்படிப்பட்ட கடவுள் உங்களுக்கு அளித்த அற்புத பரிசுகளுக்கு அமுதுத் தமிழில் அழகுப் பெயர்கள் சூட்டி, அவர்களை அன்பும் அரவணைப்பும் காட்டி அழகாக வளர்க்க வேண்டும். இந்த பதிப்பில் அந்த அற்புதக் குழந்தைகளுக்கு சூட்டுவதற்கான அமுதுத் தமிழ் பெயர்கள் குறித்து படித்தறிவோம்..!

பெயர் வைக்கும் விதம்
இன்றைய காலத்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் அழகான மாடர்னான பெயரை சூட்ட வேண்டும் என்று சில பெற்றோர் விரும்புவர்; சிலரோ தந்தை -தாயின் அல்லது முன்னோரின் பெயரை சூட்ட எண்ணுவர்; வேறு சிலர் தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று தமிழ் ஆர்வத்தால், ஆசை கொள்வர்; மேலும் பலர் ஸ்டைலான பெயரை, ட்ரெண்டிங்கில் இருக்கும் பெயரை வைக்க நினைப்பர்; மற்ற சிலர் சமஸ்கிருதம், ஜோதிடம் என்று ஆன்மிக வழியில், இலக்கிய வழியில் பெயர் சூட்ட துடிப்பர்.
இப்படிப்பட்ட பலவித பெற்றோர்களில் தமிழ் பெயர் சூட்ட வேண்டும் என்று நினைக்கும் பெற்றோருக்கான பதிப்பு இது! அதிலும் இரட்டையர் என்றாலே ரைமிங் பெயர்களை சரியான டைமிங்கில் வைக்க பெற்றோர் மனது பேராசை கொள்ளும். அந்த ஆசையை பூர்த்தி செய்திட உதவவே இந்த பதிப்பு!
ஆண் பெண் இரட்டைக் குழந்தைகளுக்கான அழகுத் தமிழ் பெயர்கள் என்னென்ன என்று படித்தறியலாம் வாருங்கள்.

இளமுகில் - இளமதி
முகில் என்றால் தமிழில் மேகம் என்று பொருள்; மேலும் மதி என்றால் சந்திரன் என்று பொருள். பிறக்கும் ஆண் - பெண் இரட்டையருக்கு இளமுகில் - இளமதி என்ற தமிழ் பெயரை சூட்டினால், தங்கையாகிய நிலவை கருமேகங்கள் சூழாமல், கடைசி வரை உடனிருந்து காத்து வருவான், வெண்மை மேகமாகிய முகிலன். இள எனும் முன்னெழுத்துக்கள் இந்த முகில் மற்றும் மதியுடன் இணையும் பொழுது அது ஒரு அற்புதமான உச்சரிப்பை தருகிறது; மேலும் இள எனும் இரு எழுத்துக்கள் குழந்தைகள் என்றும் இன்பமயமாய் இளமையுடன் இருக்க உதவுகிறது.

பார்த்திபன் - பார்கவி
பார்த்திபன் என்றால், மகாபாரத அர்ஜுனனின் வேறு பெயர், காவியத்தில் சோழ மகாராஜாக்களில் பலர் இந்த நாமத்துடன் விளங்கி புகழ் பெற்று திகழ்ந்தனர், அமைதி விரும்பி, ஆன்மிகவாதி, அறிவாளி, ஆற்றல் கொண்டவன் என்று பல அர்த்தங்கள் உள்ளன. பார்கவி என்ற பெயர் தேவைகளான, பார்வதி, துர்க்கை இவர்களின் வேறு பெயர் ஆகும்; மேலும் இந்நாமத்தை இரண்டாக பிரித்தால், பார் - உலகம் மற்றும் கவி - பாடல் என்று பொருள் தரும். உலகத்திற்கான கீதமாக உங்கள் மகளும், உலகம் ஆளும் நாயகனாக உங்கள் மகனும் திகழ இந்த பெயரை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டுங்கள்.

கவின் - காவ்யா
கவின் எனும் பெயருக்கு அழகு, தேஜஸ், அற்புதவொளி என்று பொருள்; மேலும் காவ்யா எனும் நாமம் காவியத்தின் பாடல், பாட்டு என்று பொருள் தரும். இந்த பெயர்களை உங்கள் ஆண் - பெண் இரட்டையருக்கு சூட்டினால், அவர்கள் வாழ்வில் அழகும் புகழும் பொங்கும். மேலும் அவர்தம் வாழ்க்கை அழகானதாக, காவியமாக மாறும் என்று கூட கூறலாம். கவின் எனும் நாமம் கொண்ட ஆண் ஆணழகனாக, அற்புத மகனாக திகழ்வான்; மேலும் காவ்யா எனும் பெயர் கொண்ட உங்கள் பெண் உலகம் போற்றும் காவியத் தலைவியாய் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

யஷ் - யஷஸ்வி
யஷ் எனும் பெயருக்கு அரசன், மரியாதைக்குரியவர், வசதி வாய்ப்புகள் வாய்ந்தவர், திறமையானவர், புகழ் பெற்றவர் என்று பல அர்த்தங்கள் உண்டு. மேலும் யஷஸ்வி எனும் பெயர் அழியாத புகழ் கொண்டு திகழ்பவர் எனும் பொருளைத் தருகிறது; யக்ஷஸ் பவ என்று சமஸ்கிருதத்தில் மற்றவர்களை ஆசிர்வதிக்கும் பொழுது கூறப்படும் வார்த்தை இந்த பெயராக தமிழில் தமிழ் குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. இதனால், யஷ் - யஷஸ்வி என்று குழந்தைகளை ஒவ்வொரு முறை அழைக்கும் பொழுதும் அவர்கள் ஆசிர்வாதத்தோடு, புகழோடு வாழ வேண்டும் என்ற வாழ்த்துக்கள் அவர்களைச் சேரும்.



Click it and Unblock the Notifications