குழந்தை பெற்றுக் கொண்டால் நீ இறந்து விடுவாய்... ஒரு தாயின் நெகிழ்ச்சிக் கதை!

Posted By:
Subscribe to Boldsky

குழந்தைப் பேறு என்பது மிகவும் உன்னதமான விஷயம், ஒவ்வொருவருக்கும் குழந்தை பிறக்கும் கதை ஒவ்வொருவருக்கும் வித்யாசமான அனுபவங்களாக இருக்கும். இப்படி உங்களை மெய்சிலிர்க்கச் செய்யும் உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் ஒரு பிரசவ கதை இது.

ஸ்டேசி ஹெரால்டு 2 அடி 4 இன்ச் உயரம் மட்டுமே இருக்கும் பெண் தன்னுடைய பாதி உயரத்தில் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் கென்ட்டகியைச் சேர்ந்த இந்தப் பெண்மணி ஒஸ்டேஜெனிசிஸ் இம்பெர்ஃபெக்ட்டா (Osteogenesis Imperfecta) என்ற மரபு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலும்புகளின் வளர்ச்சி தடைபடும், உயரம் மிகவும் குறைவாக இருப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எச்சரித்த மருத்துவர்கள் :

எச்சரித்த மருத்துவர்கள் :

2000 ஆம் ஆண்டு வில் என்பவரை காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்கிறார் ஸ்டேசி வில் சாதரண மனிதர்களை போன்ற உயரம் உண்டு. சுமார் ஐந்தடி ஒன்பது அங்குலம்.

ஸ்டேசி கருத்தரித்தால் அது அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர். ஸ்டேசியின் உள்ளுறுப்புக்கள் எல்லாம் பாதிப்படையும் என்றனர். மேலும் அவரது கால்களின் இடைவேளி 4 இன்ச் மட்டுமே இருப்பதால் குழந்தை நார்மல் டெலிவரியாக வாய்ப்பில்லை என்று கைவிரித்து விட்டனர்.

Image Courtesy

குழந்தை பேறு :

குழந்தை பேறு :

ஆனால் ஸ்டேசி எதற்கும் அசையவில்லை. மருத்துவர்களின் கணிப்பை பொய்யாக்கினார். அதுவும் ஒரு முறையல்ல மூன்று முறை. ஸ்டேசிக்கு கட்ரி,மக்யா,மலாச்சாய் ஆகிய மூன்று குழந்தைகள் தற்போது இருக்கிறார்கள்.

என்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் எனக்கு பாசிட்டி எனர்ஜி கொடுக்கும் படி உற்சாகப்படுத்த மருத்துவர்கள் மட்டும் என்னால் முழுதாக குடும்பம் நடத்த முடியாது, குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று சொன்னது மிகுந்த வருத்தத்தை அளித்தது என்று சொல்லும் ஸ்டேசி தன் குழந்தை பேறு தொடர்பான நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்.

Image Courtesy

முதல் குழந்தை :

முதல் குழந்தை :

முதல் முறை ஸ்டேசி கருத்தரித்திருக்கிறார் என்று அறிந்த போது அவர்களின் குடும்ப மருத்துவர் கடுமையாக எச்சரித்தாராம். இதனால் ஸ்டேசியின் உயிருக்கும் ஆபத்து இருப்பதால்,

குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற உங்களது விருப்பத்தை பரிசீலனை செய்து கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் ஸ்டேசி தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.

ஆரம்பத்தில் எல்லாரும் மகிழ்ந்திருக்க வயிற்றில் இருக்கும் குழந்தை வளரத்துவங்க அதனை ஸ்டேசியால் சமாளிக்க முடியவில்லை. அவரது உயரத்தை விட வயிறு பெரிதாகி தரையில் படுமளவுக்கு வளர ஸ்டேசி மிகவும் சிரமமடைந்திருக்கிறார்.

ஸ்டேசியின் சிரமத்தைப் பார்த்து இந்த குழந்தை வேண்டாம் என்று அவரது அம்மாவே சொல்லும் அளவுக்கு மிகுந்த வேதனைகளை சந்தித்திருக்கிறார்.

எல்லாரும் நீ இறந்து விடுவாய், இந்த குழந்தை நமக்கு வேண்டாம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டிருக்கிறார்கள்.

Image Courtesy

நீடிக்காத மகிழ்ச்சி :

நீடிக்காத மகிழ்ச்சி :

28 வாரங்களில் ஸ்டேசிக்கு மூச்சுத் திணறல் உண்டாகவே சிசேரியன் மூலமாக உள்ளிருக்கும் குழந்தையை உயிருடன் மருத்துவர்கள் எடுத்துவிட்டார்கள். 2006 ஆம் ஆண்டு பிறந்தது கட்ரி என்ற ஸ்டேசியின் முதல் குழந்தை.

மிகுந்த மனமகிழ்வுடன் தான் இறந்து விடுவேன் என்று சொன்னவர்கள் மத்தியில் தன் குழந்தையை காண்பித்து பூரித்துப் போனார் ஸ்டேசி. ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

Image Courtesy

இரண்டாவது குழந்தை :

இரண்டாவது குழந்தை :

ஸ்டேசியின் குழந்தை கட்ரிக்கும் ஸ்டேசிக்கு இருக்கும் அதே மரபணு கோளாறு இருக்கிறது அவரால் உயரமாக வளர முடியாது ஸ்டேசி சந்தித்த அதே பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று அறிந்த கணத்தில் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில் ஸ்டேசி மீண்டும் கர்ப்பமானார். ஒரு முறை பிழைத்ததால் ஒவ்வொரு முறையும் நீ பிழைப்பாய் என்று அர்த்தமன்று, இந்தக் குழந்தைக்கும் மரபணு கோளாறு தொடர்ந்தால் என்ன செய்வாய்? உன் உயிருடன் விளையாடுகிறாய் என்று முன்பு இருந்ததை விட பன்மடங்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

Image Courtesy

எந்த குறையும் இல்லை :

எந்த குறையும் இல்லை :

இரண்டாவது குழந்தையை 34 வாரங்கள் சுமந்தார் ஸ்டேசி. அப்போது தான் ஒரு பீச் பாலுக்கு கையும் காலும் முளைத்தது போல் இருந்தேன் என்று சிரிக்கிறார். மக்யா பிறக்கும் போது 18 அங்குலம் இருந்தாராம். அதாவது தன் அம்மாவின் பாதி உயரத்தில் பிறந்திருக்கிறார். மக்யா எந்த மரபணு குறைபாடும் இன்றி முழு உடல் ஆரோக்கியத்துடன் பிறந்திருக்கிறார்.

Image Courtesy

தன்னம்பிக்கை ஊற்று :

தன்னம்பிக்கை ஊற்று :

ஓடும் வயதில் ஒரு குழந்தை, தவழும் வயதில் ஒரு குழந்தை என வீடே மகிழ்வுடன் இருக்க மகிழ்ச்சியை இன்னும் அதிகரிக்க மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது அந்தக் குழந்தைக்கு மரபணு குறைபாடு இருக்கிறது. பலரும் தன்னால் முடியாது என்று சொன்ன விஷயத்தை.... உயிரே பறிபோகும் என்று எச்சரித்த விஷயத்தை மூன்று முறை செய்து காட்டியிருக்கிறார் ஸ்டேசி.

எத்தைகைய குறைபாடு இருந்தாலும் நானும் சாதரணமாக மற்ற பெண்களைப் போல வாழ்க்கை நடத்த முடியும் என்று காட்டிய ஸ்டேசி ஒரு தன்னம்பிக்கையின் அடையாளம்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

World's shortest mother gave birth her child.

World's shortest mother gave birth her child.
Story first published: Saturday, October 7, 2017, 15:39 [IST]