ஒரே நாளில் அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த ஐந்து கொலைகள்!

Posted By:
Subscribe to Boldsky

அந்த அப்பார்ட்மெண்ட்டுக்கு செல்லும் வரை மனது திக் திக்கென்று அடித்துக் கொண்டேயிருந்தது. ஆள் நடமாட்டமே இல்லாத சந்தில் இருந்தது அந்த அப்பார்ட்மெண்ட் கத்தி கூப்பாடு போட்டாலும் கூட என்னவென்று கேட்க நாதியில்லை எல்லாரும் கதவை இருக்க அடைத்துக் கொண்டு வீட்டிற்குள் கிடந்தார்கள்.

மன்னிக்க. வீட்டிற்குள் ஆள் இருக்கிறார்களா? இல்லையா என்பது தெரியாது ஆனால் இருப்பார்கள் என்ற நம்பிக்கை தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நட்புக்கும் காதலுக்கும் போட்டி :

நட்புக்கும் காதலுக்கும் போட்டி :

இந்த முறை அவன் எப்படியாவது போன் காலை அட்டெண்ட் செய்திட வேண்டும் என்ற வேண்டுதலுடன் நடுநடுங்க கால் செய்தாள்... அட்டெண்ட் செய்யப்பட்டது.

எரிச்சல் கலந்த குரலில்.... "என்ன அவசரம் ஏன் இவ்ளோவாட்டி போன் பண்ணிட்டு இருக்க? "

"டேய் கன்ஃபார்ம்டா " என்று சொல்லி முடிப்பதற்கு அழுகை வந்தது அவளுக்கு

எரிச்சல்காரன் இப்போது பதட்டத்துடன் "என்னடி.. நிஜமாவா! செத்தோம் நம்ம "

நட்புக்கும் காமத்திற்கும் இடையில் நடந்த போட்டியில் காமம் வென்றதன் பரிசாக அவள் கருத்தரிந்தாள்.

ஸ்கேன் ரிப்போர்ட் :

ஸ்கேன் ரிப்போர்ட் :

சரி.. விடு நமக்கு கொடுத்து வச்சது அவ்ளோ தான். அந்த குழந்த பிறந்த நம்ம கண்ணு முன்னாடி கஷ்ட்டப்படுறதுக்கு பிறக்குறதுக்கு முன்னாடியே அழிச்சிடலாம்.

தேவையில்லாம எதையும் நினைக்காத... சித்தி ஆறுதலாய் பேசினாலும் அவளுக்கு மாமியாரை நினைத்தால் தான் உதறித்தள்ளியது. திருமணமாகி மூன்றாண்டுகள் கழித்து கருத்தரித்திருக்கிறாள். ஆனால் கரு வளர்ச்சி சரியில்லை என்கிறது ஸ்கேன் ரிப்போர்ட் .

இதெல்லாம் பெரிய பிரச்சனையில்ல ஆனா கன்ஃபார்மா எதுவும் சொல்லமுடியாதுன்னு டாக்டர் கைவிரித்தபடியாள் குடும்பத்தினரின் ப்ரைன் வாஷ் கச்சிதமாக நடந்து கொண்டிருந்தது.

கரியர் முக்கியம் :

கரியர் முக்கியம் :

ஆஸ்திரேலியாவில் இருக்கும் கணவனுடன் ஸ்கைப்பில் பேசிக் கொண்டிருந்தாள்....இன்னும் எனக்கு ரெண்டு வருஷம் படிப்பு இருக்கு அதுக்கப்பறம் ஒரு வருஷம் சர்வீஸ் எக்ஸாம் அது இதுன்னு முடியவே மூணு வருஷமாகிடும். இதுக்கு நடுவுல குழந்தைய எல்லாம் என்னால பாத்துக்க முடியாது. "

" குழந்தைய அபார்ட் பண்றதுல நிறைய காம்ளிகேஷன்ஸ் இருக்கு... வீ ஆர் மேரீட் அது நியாபகம் இருக்குல்ல. குழந்த பெத்துக்குறதுல எந்த தப்பும் இல்லையே..".

"அந்த பர்டன எல்லாம் என்னால சுமக்க முடியாது, என் கரியர்லயே ஒரு ப்ரேக் விழுந்துரும். சொன்னா புரிஞ்சுக்கோ. இந்தக் குழந்தைய நான் அபார்ட் பண்ணப்போறேன். "

பொண்ணா இருந்தா வேணாம் :

பொண்ணா இருந்தா வேணாம் :

அந்த மருத்துவமனைக்கு பின்புறமாக அவள் நின்றிந்தாள். கையில் நீண்ட துடைப்பம் இருந்தது. நீல நிறத்தில் மருத்துவமனையின் துப்புறவு பணியாளர் என்பதற்கான சீருடையில் டார்க் பிரவுன் நிற அங்கி அணிந்திருந்தாள்.

எட்டி எட்டி பார்த்தப்படி மருத்துவமனையின் பக்கவாட்டு வழியாக வந்து கொண்டிருந்த ஒருவனை கைகாட்டி" யோவ்.. சீக்கிரம் வாய்யா" என்று கையசைத்து பரபரத்தாள்.

அவனோ தரையில் செருப்பைத் தேய்த்து தேய்த்து ஊருக்கே கேட்கும்படி வந்து கொண்டிருந்தான்.

கொண்டா? என்று கையை நீட்ட

அவன் சட்டையின் உள்பாக்கெட்டிலிருந்து ரெண்டு ஐநூறு ரூபாய் தாளை நீட்டினான் அதை வாங்கி மேல் அங்கியில் வைத்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தப்படி பொண்ணு என்று மருத்துவமனைக்கு உள்ளே சென்ற எத்தனித்தாள்.

சற்று யோசித்தவன்.... "அப்போ முடிச்சிருங்க "! என்றான்.

தேதி தள்ளிப்போச்சு :

தேதி தள்ளிப்போச்சு :

காலையில் எழுந்து தேதி கிழிக்கும் போது தான் மாதவிடாய் தள்ளிப்போய் ஒரு வாரம் ஆகிவிட்டிருந்தது தெரிந்தது. கணவரிடம் சொல்லலாமா வேணாமா என்று யோசித்தபடியே குப்புற படுத்திருந்தவனை எக்கி பார்த்தால் இன்னமும் போதை குறையாமல் ஆழந்து படுத்திருந்தான்.

யோசனையுடனே இவளாகவே மருத்துவமனைக்குச் சென்று ப்ரெக்னசி கிட் வாங்கி வந்து சிறுநீர் பரிசோதனை செய்துப் பார்த்தாள். பயந்தது போலவே இரட்டை சிகப்பு கோட்டினை காண்பித்து பல்லைக் காட்டியது.

கருமம் சம்பாதிக்க துப்பில்லாம என் காச பிடுங்கிட்டு போய் குடிச்சுட்டு நாசமாப்போறான்னா இது வேற ஒண்ணு...

கொடுக்கல் வாங்கலில் ஆரம்பித்து, எல்லாவற்றிற்கும் உறுதுணையாய் இருக்கும் அதே சமயம் தன் மீது இறக்கப்படும் மேல் வீட்டு அக்காவிடம் சென்றாள்...

"அக்கா.. தேதி தள்ளிப்போச்சுக்கா "

அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை ... என்னடி? என்று ஆரம்பித்து முடிக்கத்தெரியாமல் நிறுத்திக் கொண்டார்.

"இருக்குறதுகளுக்கே சோறு போட வழியக்காணோம். இதுல இது வேற வந்தா அவ்ளோ தான். ஆஸ்பத்திரிக்கு போய்ருவோமாக்கா... "

கொலைக்கூடம் :

கொலைக்கூடம் :

ஆள் நடமாற்ற அந்த அப்பார்ட்மெண்ட்டுக்கு விளம்பரமே இல்லாது ஆட்கள் வருவதும் போவதுமாய் இருந்தது.

முன் அறை இருட்டாக இருந்தது. உள்ளே ஆட்கள் இருப்பது தெரியாவண்ணம் எப்படி எல்லாம் மறைக்க முடியுமோ அத்தனையிலும் கவனம் செலுத்தியிருந்தார்கள். வருகிறவர்களுக்கு வீடு தான் என்று நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக கிட்ச்சனில் இருந்து முன்னரை சோஃபா வரை அத்தனையும் கனக்கச்சிதம்.

யார் யாரோ வழிகாட்டியதன் படி ஐவரும் இங்கே வந்து சேர்ந்தார்கள்.

மேடம் இன்னக்கி அஞ்சு....

அந்த மருத்துவப் பெண்மணியிடம் கூறினாள் உதவியாளர்.

"கார்டு எல்லாம் அக்சப்ட் பண்ண முடியாது. ஹேண்ட் கேஷ்ன்னு சொல்லிட்டல்ல"..

"ம்ம் ஆமா மேடம் !! அப்பாயின்மெண்ட் கொடுக்கும் போதே சொல்லிட்டேன். "

சத்தமின்றி அங்கே ஐந்து படுகொலைகள் நடத்தப்படவிருக்கின்றன. வெவ்வேறு காரணங்களால் நடத்தப்படும் இந்த கொலைகளுக்கு ஒருவரை மட்டுமே குற்றவாளியாய் பார்ப்பதும் குற்றம் என்று உணரும் நாளில் நல்ல விடியல் தோன்றட்டும்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Story of few women who trying to abort their fetus

Story of few women who trying to abort their fetus
Story first published: Friday, October 6, 2017, 13:39 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter