உங்க குழந்தைகிட்ட செல்போன் கொடுக்கும் போது இத மட்டும் செய்ங்க!

Written By:
Subscribe to Boldsky

இன்றைய குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் என்பது சர்வ சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. குழந்தைகள் அடிக்கடி அழுது அடம் பிடிப்பார்கள்... சாப்பிட, குளிக்க என்று எதற்கு எடுத்தாலும் அடம் பிடிப்பார்கள்.. முதலில் எல்லாம் வீட்டில் இருப்பவர்கள் குழந்தையின் கையில் விளையாட்டு பொருட்களை தான் கொடுப்போம்.. ஆனால் இப்போது எல்லாம் அப்படி இல்லை. அழுது கொண்டிருக்கும் குழந்தையிடம் செல்போனில் பொம்மை படங்களையோ, கேம்களையோ போட்டு கொடுத்து விடுகிறோம். இதனால் குழந்தையின் அழுகை நின்றாலும் கூட அதனால் சில பாதிப்புகள் உண்டாகிறது. அதனை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்மார்ட் போன் குழந்தைகள்

ஸ்மார்ட் போன் குழந்தைகள்

இன்றைய காலகட்டத்தில் பலரும் தனிக்குடும்பமாக இருக்கிறார்கள். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிடுகின்றனர். குழந்தையை சமாளிக்க பெரும்பாலும் தங்களது ஸ்மார்ட் போனை கையில் கொடுத்து ஒரு வீடியோ அல்லது விளையாட்டுகளை ஆன் செய்து கையில் கொடுத்துவிடுகின்றனர். இதனால் குழந்தைகளே பல மணி நேரங்கள் ஸ்மார்ட் போன்களை உபயோகப்படுத்த தொடங்கவிட்டன.

அடிமையாகும் குழந்தைகள்

அடிமையாகும் குழந்தைகள்

பெரியவர்கள் தான் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றால் இன்று குழந்தைகளும் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கின்றன. ஒரு வயது குழந்தைக்கு கூட ஸ்மார்ட் போனை பயன்படுத்த தெரிந்து இருக்கிறது.

இது சரியான முறையா?

இது சரியான முறையா?

உங்களது குழந்தைகள் எப்படி ஸ்மார்ட் போனை உபயோகப்படுத்துகின்றனர்? கைகளில் போனை வைத்து கொண்டு குனிந்து, தலையை கீழ் நோக்கி வைத்துக்கொண்டு தானே உபயோகப்படுத்துகின்றனர். இது சரியான முறையில்லை. நீண்ட நேரம் இதே நிலையில் குழந்தைகள் விளையாட்டுகள் அல்லது வீடியோக்களை பார்க்கும் போது அவர்களது கழுத்து பகுதியில் அதிகமான வலி ஏற்படுகிறது.

ஆபத்து!

ஆபத்து!

தொடர்ந்து குனிந்து உட்கார்ந்து போனை பார்த்து கொண்டு இருந்தால் கழுத்து வலி அதிகமாகும். இது முதுகு மற்றும் கழுத்து வலியாக மட்டுமே இருந்துவிடாது. பின்னாளில் இது ஆபத்தான விளைவுகளை உண்டாக்கலாம். இது தோல் பட்டை வலி மற்றும் விரல்களில் வலியை உண்டாக்கும். இதனால் குழந்தைகளின் கையால் எழுதும் திறன் பாதிக்கக்கூடும். தசைப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும். குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போனால் வரும் இந்த ஆபத்துகளில் இருந்து எவ்வாறு விடுபடலாம் என்பதை காணலாம்.

மூளைக்கு ஆபத்து

மூளைக்கு ஆபத்து

குழந்தைகள் நீண்ட நேரம் மொபைலை பயன்படுத்துவதால், மொபைல் கதிரியக்கமானது அவர்களை பாதிக்கிறது. இதனால் அவர்களுக்கு பல பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.

ஏரோ பிளைன் மோட்

ஏரோ பிளைன் மோட்

உங்களது மொபைலை குழந்தைகளிடம் கொடுக்கும் போது அதனை ஏரோ பிளைன் மோடில் போட்டு அவர்களிடம் கொடுக்கலாம். இதனால் அவர்களுக்கு கதிரியக்க பாதிப்பு உண்டாகாமல் தவிர்க்கலாம்.

 உபயோகத்தை குறைக்கவும்

உபயோகத்தை குறைக்கவும்

உங்களால் குழந்தைகள் ஸ்மார்ட் போன் உபயோகிப்பதை தடுக்க முடியவில்லை என்றால், குறைவாக பயன்படுத்த சொல்லுங்கள். ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் இடைவெளி எடுக்க சொல்லுங்கள். வெளியில் சென்று விளையாட சொல்லுங்கள். அல்லது வேறு செயல்களில் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள்.

ஓய்வு

ஓய்வு

ஓய்வு எடுக்க சொல்லுங்கள் குழந்தைகள் அதிகமான ஸ்மார்ட் போன் பயன்பாட்டால் முதுகு தண்டு மற்றும் கழுத்து வலி உண்டாகும் என்பதால் அவர்களை நன்றாக ஓய்வெடுக்க சொல்லுங்கள். எந்த வலியாக இருந்தாலும் நன்றாக ஓவ்வெடுப்பது சிறந்த தீர்வாக அமையும்.

அமரும் நிலை

அமரும் நிலை

குழந்தைகள் போனை பயன்படுத்தும்போதும் நேராக அமர்ந்து இருக்கிறார்களா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தலை குனிந்து போனை பார்ப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. இப்போது குழந்தைகளின் கல்வி சம்பந்தமான ஏராளமான அப்ளிகேஷன்கள் இருக்கின்றன. அது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணத்தில் அதிக நேரத்தை போனிலேயே செலவழிக்க அனுமதிக்கக்கூடாது.

செயல்முறை பாடம்

செயல்முறை பாடம்

அது மூளைக்கு அயர்ச்சியை ஏற்படுத்தி எதிர்விளைவுகளை உண்டாக்கிவிடும். பெற்றோர் தங்கள் கைகளில் போனை வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு பாடம் சம்பந்தமான தகவல்களை சொல்லி கொடுக்கலாம். அப்போதும் செய்முறை மூலமே பாடங்களை பயிற்றுவிப்பது நல்லது. போன் மோகத்தில் இருந்து விடுவிக்க, வெளி விளையாட்டுகள் மீது அவர்களின் கவனத்தை திசை திருப்பி விட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

do not give mobile phone to your kids

do not give mobile phone to your kids
Story first published: Wednesday, November 15, 2017, 11:01 [IST]