Latest Updates
-
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா?
உங்க குழந்தை சீக்கிரமா நடக்கணும்னா, நீங்க என்னென்ன செய்யணும்னு தெரியுமா?
குழந்தை பிறந்தவுடன், அவர்கள் வளரும் ஒவ்வொரு கட்டமும் பெற்றோரை ஆச்சரியமடைய வைக்கும். முதலில் தவழுவது, நிற்க முயற்சிப்பது, தங்கள் கால்களை பிடித்து நடப்பது, பிறகு தானாக நடப்பது, ஓடுவது, அம்மா, அப்பா என அழைப்பது என ஒவ்வொரு கட்டமும், எத்தனை பணம் கொடுத்தாலும் கிடைக்க பெறாத மகிழ்ச்சி ஆகும்.
இதில், உங்கள் குழந்தை எந்தெந்த கட்டத்தில், மாதத்தில், உட்காருவார், தவழுவார், நடப்பார், அந்த சமயத்தில் நீங்கள் பெற்றோராக அவர்களுக்கு எப்படி உதவியாக இருக்க வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இனிக் காணலாம்...

ஸ்டேஜ் #1
உட்காருதல்! முதலில் குழந்தைகள் உட்காருவது தான் ஸ்டேஜ் ஒன். இந்த காலத்தில் குழந்தைகளின் தசை வலிமை அதிகரிக்க துவங்கும். பொதுவாக 4-7 மாதத்தில் குழந்தைகள் உட்கார துவங்கிவிடுவார்கள்.
இந்த கட்டத்தில் நீங்கள் குழந்தையுடன் பந்து உருட்டி விளையாடுதல், குவியலிடுதல் (Stacking Games) விளையாட்டுகள் போன்றவற்றில் ஈடுபடலாம்.

ஸ்டேஜ் #2
ஊர்ந்து செல்தல் / தவழும் பருவம்! இந்த பருவத்தில் தான் குழந்தைகள் கைகள் மற்றும் கால்களை பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். இந்த பருவத்தில் தான் நீங்கள் அவர்களுக்கு செயல்பாடுகள் குறித்து கற்றுத்தர ஆரம்பிக்க வேண்டும்.
பொதுவாக 7-10 மாதத்தில் குழந்தைகள் தவழ ஆரம்பித்துவிடுவார்கள். இந்த கட்டத்தில், அவர்கள் தவழ்ந்து செல்ல சௌகரியமாக வீட்டில் இடத்தை ஏற்படுத்தி கொடுங்கள். ஹாலில் இருந்து சமையல் அறை, படுக்கை அறை என அவர்கள் தவழ்ந்து சென்றாமல் தடுக்காமல், உடன் இருந்து பார்த்துக் கொள்ளுங்கள்.

ஸ்டேஜ் #3
நடக்க முயற்சிப்பது! தவழ்ந்து செல்தல் மற்றும் நடப்பதற்கு இடைப்பட்ட கட்டம் தான் இந்த நடக்க முயற்சிக்கும் தருணம். இந்த தருணத்தில் குழந்தைகள் பெரும்பாலும், அம்மா, அப்பா கால்களையே சுற்றி வருவார்கள்.
பொதுவாக 8 மாதத்தில் இருந்து இந்த நடவடிக்கை குழந்தைகள் மத்தியில் காணப்படும். இந்த கட்டத்தில், நீங்கள் உங்கள் கால்கள் மீது அவர்களை நிற்க வைத்து நடக்க பயிற்சி அளிப்பது. கைகளை பிடித்து நடக்க வைப்பது போன்ற பயிற்சிகள் அளிக்க வேண்டும்.

ஸ்டேஜ் #4
நடக்க ஆரம்பித்த ஆரம்பம்! நடக்க ஆரம்பித்தவுடன் குழந்தைகள் வீட்டில் இருப்பதை எல்லாம் நொண்டி கீழே இழுத்து போடுவார்கள். இதை தடுக்க வேண்டாம். இதற்காக அதட்ட வேண்டாம். இந்த கட்டத்தில் தான் அவர்களது மூளை நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கும்.
எனவே, இந்த கட்டத்தில் நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஊக்கமளிக்க வேண்டும். ஆனால், கடினமான, எடை அதிகமான, கண்ணாடி போன்ற பொருட்கள் அவர்கள் எட்டும் வகையில் வைக்க வேண்டாம். இது அவர்களுக்கு ஆபத்தாக அமையலாம்.

ஸ்டேஜ் #5
நிற்பது! வலுவாக, எந்த உதவியும் இல்லாமல் சுயமாக நிற்கும் கட்டம். சில வினாடிகள் நிற்பார்கள், பிறகு விழுந்துவிடுவார்கள் / தடுமாறுவார்கள். இரு வயதை எட்டும் போது பெரும்பாலான குழந்தைகள் இந்த கட்டத்திற்கு வந்துவிடுவார்கள்.
இந்த கட்டத்தில் தான், அவர்கள் நிலையாக நிற்பதற்கு உதவும் விளையாட்டுகளை ஆரம்பிக்க வேண்டும். நடைவண்டி, மூன்று சக்கர சைக்கிள் போன்ற விளையாட்டுகளை உங்கள் குழந்தையிடம் கொடுக்க வேண்டிய காலம் இது.

ஸ்டேஜ் #6
நடப்பது!
12 - 15 மாதத்தில் குழந்தைகள் நடக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த கட்டத்தில் தான் நீங்கள் குழந்தைகள் மீது அதிக கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் நடக்க ஆரம்பித்த ஆர்வத்தில் வெளியே செல்ல ஆரம்பிப்பார்கள். எனவே, அவர்கள் மீது எப்போதும் ஒரு கண்ணை வைத்திருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
