தாய்ப்பால் கொடுப்பதால் அம்மாவுக்கு என்ன நன்மை?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு மட்டுமல்ல அம்மாவிற்கும் நல்லது தான். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோய் வராது என்று முந்தைய ஆய்வு ஒன்று கண்டுபிடித்தது.

அதேபோல், நாள்பட்ட நோயான சர்க்கரை வியாதியும் வருவது தடுக்கப்படுகிறது என்று ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.

பால் கொடுக்கும் போது, உடலிலுள்ள வளர்சிதை மாற்றத்தில் வழக்கதை விட மாற்றங்கள் ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

breast feeding keeps gestational diabetes away for lactating mother

மூன்று மாதங்களுக்கும் குறைவாக பால் கொடுப்பவர்களை விட, மூன்று மாதத்திற்கும் மேல் அதிகமாக பால் கொடுப்பவர்களுக்கு வளர்சிதை மாற்றம் மாறுபடுகிறது.

ரத்த பிளாஸ்மாவில் பாஸ்போ லிபிட் மற்றும் குறைந்த சங்கிலி கொண்ட அமினோ அமிலங்கள் குறைவாக உற்பத்தியாகின்றன. இதனால் வாழ் நாள் முழுவதும் சர்க்கரை வியாதி வராமல் தடுக்க முடியும் என்று ஜெர்மனி நாட்டு ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.

breast feeding keeps gestational diabetes away for lactating mother

தாய்ப்பால் கொடுப்பதால் சர்க்கரை வியாதி தொடர்பான வளர்சிதை மாற்றத்தை நடக்கவிடாமல் பாதுகாக்கிறது. அதுவும் மூன்று மாதத்திற்கும் அதிகமாக கொடுப்பவர்களுக்கு சுமார் 15 வருட காலத்திற்கு சர்க்கரை வியாதி வராமல் காக்கும் என்றும் கூறுகின்றனர்.

சர்க்கரை வியாதி உள்ள பெண்கள் 200 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். அதேபோல், சர்க்கரை வியாதி அல்லாதவர்கள் 156 பேரிடமும் ஆய்வு செய்தனர்.

breast feeding keeps gestational diabetes away for lactating mother

இதில் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் 3 மாதத்திற்கும் குறைவாக தாய்ப்பால் கொடுத்தவர்கள் என்று தெரிய வந்தது.

இப்போது இந்த ஆய்வின் நோக்கமே தாய்-சேய் இருவரின் நலனையும் பாதுகாக்க, தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை கொடுக்க வேண்டுமென்பது தான் என்று கூறுகிறார் தலைமை ஆய்வாளர் சேண்ட்ரா ஹெம்மல்.

English summary

breast feeding keeps gestational diabetes away for lactating mother

breast feeding keeps gestational diabetes away for lactating mother
Story first published: Monday, July 25, 2016, 9:20 [IST]
Subscribe Newsletter