For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தையுடன் பயணிக்கும் போது எடுத்துச் செல்ல வேண்டிய வீட்டு உணவுகள்!!!

By Ashok CR
|

பயணம் மேற்கொள்ளும் போது வீட்டில் குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட உணவுகளை எடுத்து செல்வது நீங்கள் நினைப்பதையும் விட பல நன்மைகளை அளிக்கும். அதே நேரம் அதற்கு சில திட்டங்களும் முன் ஏற்பாடுகளும் செய்ய வேண்டி வரும். நீங்கள் எங்கே செல்கிறீர்கள், அங்கே எத்தனை நாள் தங்க போகிறீர்கள், அங்கே கிடைக்க போகும் வசதிகள் என்ன போன்றவற்றை பொறுத்து, குழந்தைக்கு சந்தையில் கிடைக்கும் பொருளை மட்டுமே நம்பக்கூடாது. முகாமிடுதல், விமான பயணம், நாள் பயணம் மற்றும் உணவகத்திற்கு செல்லுதல் போன்றவைகளுக்கு நாங்கள் சில டிப்ஸ்களை அளித்துள்ளோம்.

குழந்தையுடன் பயணிக்கும் போது சுலபமாக இருப்பதற்கு ஒரு நல்ல டிப்ஸ் - வீட்டு உணவோ அல்லது வீட்டில் செய்யாத உணவோ, உணவுகளை அறை வெப்பநிலையில் பரிமாறிடுங்கள். அப்படி அறை வெப்பநிலையில் உள்ள உணவை குழந்தைக்கு கொடுத்தால், சூடு இல்லாத உணவை உண்ண குழந்தை பழகிக் கொள்ளும். அதனால் பயணமாகும் இடத்தில் சூடு இல்லாத உணவை குழந்தை நிராகரிக்கமால் சமத்தாக உண்ணுமல்லவா!

Homemade Food To Carry While Traveling With Baby

வீட்டில் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான உணவு:

வீட்டில் தயாரிக்கபப்டும் உணவை மட்டும் குழந்தைக்கு கொடுத்து பழகினால், அவர்களுக்கு அந்த உணவு மட்டுமே சேரும். அதனால் வெளியே செல்லும் போது வீட்டு உணவுகளை சுமப்பதில் சிரமம் ஏற்படும் என பெற்றோர்கள் கருதுவார்கள். வாழைப்பழம், உணவு அடங்கிய டப்பா மற்றும் கரண்டி போன்ற சுலபமான வீட்டு உணவைப் பற்றி பல பெற்றோர்களும் நினைப்பது கூட இல்லை.

அதனால் சின்ன சின்ன உணவுகள், வாழைப்பழம், கரண்டி போன்றவற்றை ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைக்கு உணவளிக்க வேண்டும் என்றால் வாழைப்பழ தோலை நீக்கி, அதனை அந்த டப்பாவில் போட்டு கரண்டியை வைத்து மசித்தால் குழந்தைக்கு நற்பதமான உணவு தயார். அவகேடோ அல்லது அவித்த சீனிக்கிழங்கு இருந்தாலும் கூட மசித்து கொடுப்பது சுலபமாக இருக்கும்.

தானியங்கள்

பயணிக்கும் போது கொடுக்க தானியங்களும் சிறந்த உணவுகளாகும். அதனை அப்படியே எடுத்துச் செல்லலாம் அல்லது தேவைக்கு சமைத்தும் எடுத்துச் செல்லலாம் அல்லது ஐஸ் கட்டியில் உறைய வைத்த தானியங்களையும் பயன்படுத்தலாம்.

பழங்கள்

சுற்றுலாவிற்கு செல்லும் வேளையில், பழங்களை எடுத்துச் செல்லும் போது சற்று கவனம் தேவை. ஏற்கனவே மசிக்கப்பட்டு உறைய வைக்கப்படாமல் இருந்தால், பழுக்கும் நிலையில் உள்ள பழமாக பார்த்து வாங்க வேண்டும். ஏற்கனவே நன்கு பழுத்த பழங்களை வாங்கினால், அதை பயன்படுத்துவதற்கு முன்பாகவே அவை அழுகி போய் விடலாம்.

காய்கறிகள்

நீங்கள் பயணம் செய்யும் போது எங்காவது தங்கினால் காய்கறிகள் உங்களுக்கு கை கொடுக்கும். வீட்டை விட்டு கிளம்பும் முன் காய்கறிகளின் தோலை உரித்து, சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள். காற்று புகாத டப்பாவில் அவைகளை அடித்து வையுங்கள். முடிந்தால் அந்த டப்பாவில் கொஞ்சம் நீரை தெளித்தால் நற்பதம் நீடித்து நிற்கும். முகாமிடுதல் சுற்றுலாவிற்கு செல்லும் போது இது சிறந்து செயல்படும். மற்றொரு வழியும் உள்ளது. நீங்கள் தங்கும் இடத்தில் நற்பதமான காய்கறிகளை வாங்கி, தேவைக்கேற்ப தயார் செய்து கொள்ளுங்கள்.

பால் பொருட்கள்/முட்டைகள்

இது பவுடர் வகையில் இருக்க வேண்டும்; குறிப்பாக நீங்கள் முகாம் போன்ற சுற்றுலாவிற்கு செல்லும் போது குளிர் சாதன வசதி கிடைக்காத போது இது உதவிடும். நீங்கள் தங்கும் இடத்தில் குளிர் சாதன வசதி இருந்தால் உங்களுக்கு தேவையான பால் பொருட்கள் மற்றும் முட்டைகளை அங்கேயே வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மேற்கூறிய டிப்ஸ் அனைத்தும் அளவுக்கு அதிகமாக தெரிந்தால், குழந்தைக்காக கடையில் விற்கப்படும் உணவுகளை வாங்கிக் கொள்ளுங்கள். முடிந்தால் குழந்தைகளுக்காக கடைகளில் கிடைக்கும் தானியங்களையும் வாங்கிக் கொள்ளலாம். நீங்கள் இந்த வழியை தேர்ந்தெடுத்தால், பயணமாகும் ஒரு வாரத்திற்கே முன்பே அவ்வகை உணவுகளை குழந்தைக்கு கொடுத்து பழக்குங்கள்.

சில குழந்தைகள் கடையில் கிடைக்கும் இவ்வகையான உணவுகளை உண்ண மறுத்தால், குறிப்பாக அவர்கள் அப்படி வளர்க்கப்பட்டால், அவர்களால் வீட்டில் தயாரிக்கப்படும் உணவை மட்டும் தான் அவர்களால் உண்ண முடியும். இந்த மாதிரி நேரத்தில் கடையில் கிடைக்கிற பொருட்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றில்லை. வெறுமனே பழம் அல்லது காய்கறி அல்லது தானியங்களை மட்டும் கூட கொடுக்கலாம்.

English summary

Homemade Food To Carry While Traveling With Baby

A good hint that will help ease traveling with baby - with or without homemade baby food, is to try to serve some meals at room temperature. Serving meals at room temperature will allow your baby to become accustomed to food that is not "hot". You never have to worry about a meal being rejected because it is not heated.
Desktop Bottom Promotion