For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், சளி மற்றும் இருமலுக்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!!

By Ashok CR
|

ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான கைக்குழந்தைகளும் சிறிய குழந்தைகளும் சளி மற்றும் இருமலால் அவதிப்படுகிறார்கள். அதற்கு முக்கிய காரணமாக இருப்பது அவர்களின் வலுவில்லாத நோயெதிர்ப்பு அமைப்பாகும். சொல்லப்போனால், முதல் வயது முடிவதற்குள்ளேயே முக்கால்வாசி குழந்தைகள் 7 முறை வரை சளியால் அவதிப்பட்டிருப்பார்கள்.

பாதிக்கப்பட்ட நபர்கள் மூலம் அல்லது மாசுப்பட்ட காற்று அல்லது மேற்பரப்புகள் மூலம், தொற்றை ஏற்படுத்தும் பல்வேறு கிருமிகள் குழந்தைகளிடம் பரவுகிறது. நோய்வாய் பட்டிருக்கும் குழந்தையை கையாளுவது பெற்றோராக இருந்தாலும் சரி, அல்லது பராமரிப்பாளராக இருந்தாலும் சரி, மிகவும் கஷ்டமானதே.

அதிலும் 6 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளிக்கான மருந்துகளை கொடுத்தால் அபாயகரமான பக்க விளைவுகள் ஏற்படும் என அமெரிக்கன் அகாடெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அறிவுறுத்துவதால், இயற்கை வழிமுறைகளை பின்பற்றுவதே நல்லது. வீட்டு சிகிச்சைகள் இந்த அறிகுறிகளை குறைத்து, நோய் எதிர்ப்பு அமைப்பை வலு பெறச் செய்யும்.

இருப்பினும், உங்கள் குழந்தைக்கு 3 மாதத்திற்கு குறைவாக இருந்து அதற்கு காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். குழந்தைகளுக்கு இருக்கும் சளி மற்றும் இருமலுக்கான 10 சிறந்த வீட்டு சிகிச்சைகளைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்பாஞ் குளியல்

ஸ்பாஞ் குளியல்

சிறிய குழந்தைகளின் காய்ச்சலை குறைக்க குளிர்ந்த நீரில் குளிக்க வையுங்கள் அல்லது ஸ்பாஞ் குளியல் அளியுங்கள். இது உடலின் உஷ்ணத்தை சீர்படுத்தும். சிறிய குழந்தைகள் என்றால் தினமும் 2 அல்லது 3 முறை ஸ்பாஞ் குளியலில் ஈடுபடுத்துங்கள். சாதாரண நீரில் ஒரு துணியை நனைத்து, அதனை பிழிந்து கொள்ளுங்கள். பின் அக்குள், பாதம், கைகள் மற்றும் இடுப்பு பகுதிகளில் ஒற்றி எடுங்கள். இது உடலின் வெப்பநிலையை குறைக்கும். மற்றொரு வழியும் கூட உள்ளது; குளிர்ந்த ஈர துணியை குழந்தையின் நெற்றியில் வைத்து, அதனை சில நிமிடங்களுக்கு ஒரு முறை மாற்றவும்.

குறிப்பு: மிகவும் குளிர்ந்த நீரை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது உட்புற உடலின் உஷ்ணத்தை அதிகரித்து விடும்.

எலுமிச்சை

எலுமிச்சை

4 எலுமிச்சையின் சாறு மற்றும் தோள்களுடன் 1 தேக்கரண்டி இஞ்சி துண்டுகளை ஒரு வாணலியில் போடவும். அதனை மூடும் அளவிற்கு போதுமான நீரை ஊற்றிக் கொதிக்க வைக்கவும். அதனை மூடி போட்டு மூடி விட்டு ஒரு 10 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பின் நீரை வடிகட்டவும். சரிசமமான அளவில் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி அதனை நீர்மமாக்கவும். சுவைக்காக சற்று தேனையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளவும். இந்த சூடான லெமனேட் பானத்தை உங்கள் குழந்தைக்கு தினமும் சில முறை கொடுக்கவும்.

குறிப்பு: 1 வருடத்திற்கு குறைவான குழந்தைகளுக்கு தேனுக்கு பதில் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும்.

தேன்

தேன்

1 வயது அல்லது மேலே உள்ள குழந்தைகள் பொதுவான சளி அல்லது இருமலால் பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு பாதுகாப்பான சிகிச்சையாக இருப்பது தேன். 2 தேக்கரண்டி தேனை 1 தேக்கரண்டி எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கொள்ளவும். இதை குழந்தைகள் குணமடையும் வரை சில மணிக்கு ஒரு முறை கொடுத்து வரவும். வெதுவெதுப்பான ஒரு டம்ளர் பாலுடன் தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் நீங்கி, நெஞ்சு வலி குறையும்.

குறிப்பு: 1 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தேன் கொடுக்க வேண்டும். அதற்கு காரணம் தேனில் உள்ள பாக்டீரியா குழந்தை பருவத்துக்குரிய கிளாஸ்டிரீயம் நச்சேற்றத்தை உருவாக்கலாம்.

வெதுவெதுப்பான கோழி சூப்

வெதுவெதுப்பான கோழி சூப்

1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வெதுவெதுப்பான கோழி சூப் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். சிறியளவிலான ஊட்டச்சத்து நிறைந்த இந்த உணவு மலச்சிக்கலைப் போக்கும். இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் குணப்படுத்தும் செயல்பாட்டை துரிதப்படுத்தும். குழந்தைகளுக்கு கோழி சூப்பை ஒரு நாளைக்கு 2-3 முறை வரை கொடுக்கலாம்.

ஆரஞ்சு

ஆரஞ்சு

ஆரஞ்சு பழங்களில் உள்ள வைட்டமின் சி, சளியை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து போராடும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். இருமல், தொண்டைப் புண் மற்றும் ஒழுகும் மூக்கு போன்ற அறிகுறிகளைப் போக்க, இது நோய் எதிர்ப்பு சக்தியையும் ஊக்குவிக்கும். 2 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தினமும் 1 முதல் 2 டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் கொடுங்கள். சிறிய குழந்தைகளுக்கு ஆரஞ்சு ஜூஸ் அளவிலான தண்ணீரை கலந்து, சீரான இடைவெளிகளுள் கொடுக்கவும். பெரிய குழந்தைகளுக்கு ஆரஞ்சு பழத்தை அப்படியே உண்ணச் சொல்லலாம். இது வைட்டமின் சி உட்கொள்ளுதலை அதிகரிக்கும்.

இஞ்சி

இஞ்சி

6 கப் தண்ணீர், ½ கப் மெல்லியதாக நறுக்கப்பட்ட இஞ்சி மற்றும் 2 லவங்கப்பட்டையை ஒரு வாணலியில் போடவும். குறைந்த தீயில் அதனை 20 நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும். பின் வடிகட்டவும். அதனுடன் பச்சை தேன் அல்லது சர்க்கரையை கலக்கவும். இதனை உங்கள் குழந்தைக்கு தினமும் பல தடவை கொடுக்கவும். ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இதனுடன் சரிசமமான அளவு தண்ணீர் கலந்து கொடுக்கலாம்.

ஆப்பிள் சீடர் வினீகர்

ஆப்பிள் சீடர் வினீகர்

1 பங்கு வடிகட்டாத பச்சை ஆப்பிள் சீடர் வினீகர் மற்றும் 2 பங்கு குளிர்ந்த நீர் கலக்கப்பட்ட நீரில் 2 துணிகளை ஊற வைக்கவும். துணிகளை நன்றாக பிழிந்து, ஒரு துணியை நெற்றியில் வைக்கவும்; மற்றொன்றை வயிற்றின் மீது வைக்கவும். 10 நிமிடம் கழித்து, வேறு இரு துணிகளைக் கொண்டு இடையே மீண்டும் செய்யவும். காய்ச்சல் குறையும் வரை இதனை தொடரவும்.

தாய்ப்பால்

தாய்ப்பால்

குழந்தைகளுக்கு, குறிப்பாக அவர்கள் நோய்வாய் பட்டிருக்கும் போது, தாய்ப்பால் மிகவும் அவசியமானதாகும். தொற்றுக்களை எதிர்த்து போராடி, சீக்கிரமாகவே குணமடைய இது தனித்துவமான சமநிலை அளவில் ஊட்டச்சத்துக்களை உடலுக்கு அளிக்கும். சளி அல்லது இருமலை உண்டாக்கும் தொற்றை விரட்ட, அதுவும் 6 மாதத்திற்கு குறைவான குழந்தை என்றால், அவர்களுக்கு தாய்ப்பால் கொடுத்தாக வேண்டும்.

நீர்மம்

நீர்மம்

உங்கள் குழந்தை நீர்ச்சத்தை இழந்து, நிலைமை மோசமடையாமல் இருக்க அவர்களுக்கு அளவுக்கு அதிகமான நீர் பானங்களைக் கொடுங்கள். நீர்ச்சத்துடன் இருந்தால் உடலில் இருந்து நீர் வெளியேறிக் கொண்டே இருக்கும். அதனால் உங்கள் குழந்தையின் உடலில் இருந்து கிருமிகள் வெளியேறி, நெருக்கடி குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies for Colds and Coughs in Babies

Dealing with a sick child can be really difficult for parents as well as caretakers. Here are the top 10 home remedies for colds and coughs in babies.
Desktop Bottom Promotion