For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிறந்த குழந்தைகளிடம் நாம் விரும்பும் சிறந்த 10 விஷயங்கள்!!!

By Ashok CR
|

சமீபத்தில் பிறந்த உங்கள் குழந்தையை தற்போது கையில் தூக்கியுள்ளீர்களா? அப்படியானால் அதனிடம் உங்களுக்கு பிடித்த 10 சிறந்த விஷயங்களை மட்டும் எப்படி எழுவது என நீங்கள் குழம்பி போயுள்ளீர்களா? கண்டிப்பாக அவர்கள் அடிக்கடி சுச்சா போவதும், கக்கா போவதும், அழுவுவதும் உங்கள் தூக்கத்தை கெடுக்கும்.

இரட்டையர்களைப் பற்றி நீங்கள் அறிந்திராத 5 உண்மைகள்!!!

ஆனால் அதையும் மீறி புதிதாக பிறந்த குழந்தையிடம் ரசிப்பதற்கு பல விஷயங்கள் உள்ளது. அவர்களைப் பற்றிய அனைத்தும், பஞ்சு போன்ற தலை முடி முதல் சிறிய கால் நகங்கள் வரை போதையை ஏற்படுத்தும்.

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை தான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

குழந்தை பிறந்த புதிது என்றால் கண்டிப்பாக மற்ற நாட்களை விட இந்த காலம் உங்களுக்கு சுலபமானதாக இருக்கும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நீங்கள் சோர்ந்திருக்கும் போது உங்கள் பிஞ்சு குழந்தையின் ஆட்டம் உங்களை உற்சாகப்படுத்தும். சரி புதிதாக பிறந்த உங்கள் குழந்தையிடம் ரசிக்ககூடிய 10 விஷயங்களைப் பற்றி பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதங்கள்

பாதங்கள்

தூய்மையான பட்டுத் துணியை விட மென்மையானது மற்றும் உலகத்தில் வேறு எதையும் விட அழகானது என்று ஒன்று இருக்க முடியும் என்றால் அது பிறந்த குழந்தையின் பாதமாக தான் இருக்க முடியும். அந்த பிஞ்சு பாதங்களை தடவிக் கொடுத்தே நீங்கள் பல மணி நேரங்களை செலவழித்திருப்பீர்கள். இந்த பூமியில் இன்னும் நடைபோட தொடங்காத அழகிய பாதங்கள் அவை. பாதங்களுக்கு கீழ் இருக்கும் மணல் அல்லது சக்தி அல்லது கற்களைப் பற்றி அந்த குழந்தைக்கு தெரியாது. அதற்கு எல்லாமே பட்டு போன்றவை தான். அதனால் இப்போதே ஆசை தீர அதன் கால்களை வருடி விடுங்கள்!

மணம்

மணம்

புதிதாக பிறந்த குழந்தைகளின் மணத்தை விட வேறு ஒரு சிறந்த சுகம் உங்கள் மூக்கிற்கு கிடைக்குமா? குழந்தைகள் மீது இருந்து வரும் மயக்கும் வாசனையால், உங்களுக்கு அதன் தலை முதல் பாதம் வரை காதல் பொங்கும். அது உங்கள் குழந்தையாக இல்லாமல் போனாலும் கூட அது ஒரு அருமையான வாசனையாகவே இருக்கும். இந்த வாசனையை நாம் என்று நுகரப் போகிறோம் என நீங்கள் ஆவலாக காத்திருப்பீர்கள். கவலையை விடுங்கள்! அனைவருக்கும் இந்த சந்தர்ப்பம் கிடைக்கும். குழந்தை வாசனை கட்டத்தை உங்கள் குழந்தையை கடந்து விட்டால், பிற குழந்தைகளுடன் சென்று அந்த வாசனையை நுகர முற்படுவீர்கள்.

பின்புறம்

பின்புறம்

குழந்தையின் சிறிய அழகிய பின்புறம். இது போதாதா இதைப் பற்றிக் கூற!

மழலை இரைச்சல்கள்

மழலை இரைச்சல்கள்

புதிதாக பிறந்த குழந்தைகள் சிறந்த இரைச்சல்களை உண்டாக்குவார்கள். அவர்களின் மிகச்சிறந்த வாசனை, அழகு மற்றும் காதலை தூண்டும் தோற்றம் போன்றவைகள் மட்டுமல்லாது அவர்களிடம் வரும் சத்தங்களும் இரைச்சல்களும் கூட அனைவரையும் மயக்கும். சின்ன சின்ன சத்தங்களும், உண்ணும் போது அவர்கள் முனங்குவதும், காலை 4 மணிக்கு அழுவதும், சுவாசிக்கும் போது அவர்கள் எழுப்பும் பெருமூச்சும், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

விக்கல்

விக்கல்

இந்த சத்தத்திற்கென தனி வகை உண்டு. புதிதாக பிறந்த குழந்தையின் விக்கலைக் காட்டிலும் அழகான விஷயம் எதுவும் இருக்க முடியாது. கண்டிப்பாக குழந்தை விக்கல் எடுக்கும் போது கவலைக் கொள்ள தான் செய்வீர்கள். அதுவும் முதல் முறை விக்கல் என்றால் என்னவோ ஏதோ என பதறி தான் விடுவீர்கள். ஆனால் அதற்கு பிறகு, எவ்வளவு அழகாக என் குழந்தை விக்கல் எடுக்கிறது என ரசிக்க ஆரம்பித்து விடுவீர்கள். குறிப்பாக விக்கலின் சத்தத்தை ரசிப்பதோடு மட்டுமல்லாது, ஒவ்வொரு முறை விக்கல் எடுக்கும் போது குழந்தையின் ஆச்சரியம் கலந்த முகத்தையும் ரசிக்க தொடங்குவீர்கள்.

முக பாவனைகள்

முக பாவனைகள்

நீங்கள் சிறு வண்டாக, புதிதாக பிறந்த குழந்தை என்றால், இந்த உலகமே உங்களுக்கு புதிதானது. அப்படிப்பட்ட சூழலில் புதிதான உலகத்தை பார்க்கும் அந்த மழலையின் முக பாவனங்களை கற்பனை செய்து பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு அது புது அனுபவமாக இருக்கும். புதிதாக பிறந்துள்ள குழந்தையின் முக பாவனை கிட்டத்தட்ட ஒரு ஆமையை போன்று இருக்கும்; சிறு வண்டுகள் தங்கள் தலையை உயர்த்தும் போது, முகத்தை வெளியே நீட்டி, உங்களை நோக்கி பார்ப்பார்கள். பார்ப்பதற்கு ஓட்டை விட்டு ஆமை தலையை வெளியே நீட்டுவதை போலவே இருக்கும். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு மிகச்சிறந்த ஆச்சரியமான முகங்கள், பரந்த கண்கள், பரந்து விரிகின்ற வாய்கள் போன்றவையையும் கண்டு மகிழலாம்.

தூக்கம்

தூக்கம்

இரவில் அவர்கள் தூங்காமல் விழித்திருக்கும் போது கண்டிப்பாக நமக்கு எரிச்சலாக தான் இருக்கும். ஆனால் அவர்கள் உறங்கும் போது இந்த உலகத்திலேயே அவர்கள் தான் மிகவும் அழகானவர்கள். பிறந்த குழந்தையின் மூடிய இமைகள், நீண்ட அழகிய கண் இமை மயிர் போன்றவைகளுக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது. தூங்கும் போது அவர்கள் விடும் அழகிய பெருமூச்சுகளைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. அது ஒரு பொக்கிஷம்! சத்தமாக சொல்லாதீர்கள், குட்டியின் தூக்கம் களைந்து விடப்போகிறது.

உங்கள் மீது தூக்கம்

உங்கள் மீது தூக்கம்

காலை 3 மணிக்கு நீங்கள் சோர்வாக இருக்கும் போது, கண்டிப்பாக இது உங்களுக்கு சிறந்ததாக தெரியாது. இந்த பட்டியலில் சேர்க்கவும் விரும்ப மாட்டீர்கள். ஆனால் இதுவே மதியம் 1 மணிக்கு சோஃபாவில் படுத்தப்படி தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போது, உங்கள் குழந்தை உங்கள் அரவணைப்பில் உங்கள் மீது படுத்திருந்தால் அதை விட சுகம் வேறு என்னவாக இருக்க முடியும்? மூச்சிரைக்கும் அந்த வாசனையை உணர்ந்திடுங்கள்!

உங்களை அவர்கள் உணரச் செய்யும் வழி

உங்களை அவர்கள் உணரச் செய்யும் வழி

இந்த உலகத்தில் நீங்கள் பிறந்து, வளர்ந்து, ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து, அதை காண்பதை விட உங்களை ஊக்கப்படுத்தும் நம்பிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது. இதை விட வேறு என்ன முக்கியமாக இருக்க முடியும், சொல்லுங்கள்? நீங்கள் அருமையான ஒன்றை செய்திருக்கிறீர்கள். அதற்கான உயிருள்ள சான்று தான் புதிதாக பிறந்துள்ள உங்கள் குழந்தை. குழந்தையை கைகளோடு அரவணைத்து கொள்ளும் போது, பெருமைப்படும் விஷயத்தை நீங்கள் சாதித்து விட்டதாக ஒரு கர்வம் உங்களுக்குள் ஏற்படும்.

உங்களை அவர்கள் விரும்புவது

உங்களை அவர்கள் விரும்புவது

முழுமையாக, முற்றிலும், நிபந்தனையின்றி, தன் நாடி நரம்பு முழுவதும், புதிதாக பிறந்த குழந்தை தன் பெற்றோரை விரும்பும். சொல்லப்போனால், பிறந்த 6 மாத காலம் வரை தான் ஒரு தனி நபர் என்பதே குழந்தைகளுக்கு புரியாது. நீங்களும் அதுவும் ஒன்று என்று தான் குழந்தை நினைத்துக் கொள்ளும். உங்கள் கருப்பையில் இருந்த போது உங்கள் பேச்சை கேட்டிருப்பதால், அதற்கு உங்கள் குரல் நன்றாக தெரியும். உங்கள் வாசனையையும் அது விரும்பும். உங்களுக்கு உங்கள் குழந்தையின் மீது எந்தளவிற்கு அன்பும் காதலும் உள்ளதோ, உங்கள் குழந்தைக்கும் உங்கள் மீது அதே அளவிலான காதலும் அன்பும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Things About Newborns – 10 Things We Love

If you’re in the midst of the newborn days, you’re probably finding some days easier than others. On the days where you feeling physically and emotionally drained, as you go through the motions meeting the needs of that beautiful baby of yours, but secretly feeling sorry for yourself, this list is for you. Here are 10 of the best things about newborns.
Story first published: Saturday, July 4, 2015, 16:33 [IST]
Desktop Bottom Promotion