For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தையின் அழுகையானது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை குறிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

By Boopathi Lakshmanan
|

உங்களுடைய குட்டிக் குழந்தை அவ்வப்போது அடிவயிற்றிலிருந்து குரல் கொடுத்து அழுவது என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால், இவ்வாறு அழுவதன் காரணமாக குழந்தை தன்னுடைய தேவைகளைக் குறிப்பிடுவதுடன், தாயின் எண்ணங்களுடனும் இணைய முடிகிறது. 'இவ்வாறு அழுது குழந்தை தன்னுடைய தேவையை வெளிப்படுத்தவும், அதை உணர்ந்து தாய் குழந்தையை கவனிக்கவும் செய்யும் போது, அவர்களுக்கு இடையிலான பந்தம் மேம்படுகிறது', என்கிறார் குழந்தைகள் நல மருத்துவரான டாக்டர் ஷா.

இரவில் படுக்காமல் அழுது கொண்டே இருக்கும் குழந்தையை தூங்க வைக்க சில வழிகள்!!!

அழும் குழந்தைக்கு ஆறுதல் தேவைப்படும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அந்த அழுகையை எப்படி அடக்கலாம் என்று நீங்கள் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கும் போது, அழுகையானது குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை குறிப்பிடுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? என்ன ஆச்சரியமாக உள்ளதா? தொடர்ந்து படித்து பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் அழுகையின் முக்கியத்துவம்

முதல் அழுகையின் முக்கியத்துவம்

நீங்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சத்தம் தான் இது. இந்த அழுகை உங்களுடைய குழந்தையின் வருகையை தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், உங்களுடைய வாழ்க்கையின் புதிய பரிணாமத்தையும் பறைசாற்றுகிறது. 'இந்த அழுகை குழந்தை காற்றை உள்ளிழுத்து சுவாசிக்கவும் மற்றும் குடல்கள் காற்றைப் பெறும் வகையில் திறக்கவும் செய்ய உதவுகிறது. அழுவதன் மூலம் குடல் பகுதி உறுதியடைவதை அனைத்து பெற்றோர்களும் அறிந்திருந்தாலும், மேற்கண்ட ‘ட்ரிக்' நடப்பது முதல் அழுகையில் மட்டுமே. பிற நேரங்களில் இந்த அறிகுறிகள் குழந்தையின் துயரத்தையே வெளிப்படுத்துகின்றன', என்றும் சொல்கிறார் டாக்டர் ஷா. எனவே, உங்களுடைய குழந்தை தன்னுடைய முதல் அழுகையை தொடங்கும் போது, அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது என்று நீங்கள் பெருமூச்சு விடலாம்.

தொடர்பு கொள்ள உதவுதல்

தொடர்பு கொள்ள உதவுதல்

குழந்தையிடம் அழுகை இல்லாத போது அவர்களுக்கு என்ன தேவை என்பதை உங்களால் கண்டுணர முடியாது. 'அழுகை பல்வேறு காரணங்களுக்காகவும் மற்றும் மாறுபட்ட சத்தங்களுடனும் வருகிறது. காலப்போக்கில் குழந்தையின் அழுகையை வைத்து என்ன தேவை என்று தாயினால் கண்டறிய முடியும்', என்கிறார் டாக்டர் ஷா. எனவே, உங்களுடைய குழந்தை அழும் போது, அவர்கள் பசிக்காக அழுகிறார்களா, டையாபரை மாற்றுவதற்காக அழுகிறார்களா, சூடு அல்லது குளிரை உணர்ந்து அழுகிறார்களா, அவர்களுக்கு அரவணைப்பு தேவைப்படுகிறதா அல்லது கவனத்தை ஈர்ப்பதற்காக அழுகிறார்களா என்பதை கவனியுங்கள். 'அவர்களுடைய அழுகை, உங்களுடன் அவர்கள் தொடர்பு கொள்ள உதவும் ஊடகமாக இருப்பதால், அழுகையைக் கொண்டு மட்டுமே அவர்களுடைய ஆரோக்கியத்தை உங்களால் அறிய முடியும், இது குழந்தையின் அன்பான மொழியாகும்', என்று விளக்கம் தருகிறார் டாக்டர் ஷா.

மனரீதியான ஆரோக்கியத்திற்கு உதவுதல்

மனரீதியான ஆரோக்கியத்திற்கு உதவுதல்

உங்களுடைய குழந்தையை நீங்கள் ஆற்றுப்படுத்தும் போது, அவன் தனியாக இல்லை என்ற செய்தியை அவனுக்கு நீங்கள் கொடுக்கிறீர்கள். 'பெரியவர்களில் நிறைய பேர் குழந்தையிடம் ஒழுக்கத்தை கொண்டு வரும் பொருட்டாக, அழும் குழந்தையை கவனிக்கக் கூடாது என்பார்கள். ஆனால், குழந்தையின் ஆரம்ப மாதங்களில் ஒழுக்கத்தை விட, அவனை கவனிப்பது தான் முக்கியமான தேவையாகும். இதன் மூலம் குழந்தை பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறார்கள்; இவ்வாறான கவனிப்பு மற்றும் அன்புடன் வளரும் குழந்தை ஒரு நல்ல மனிதனாக உருவாகிறார்கள். ஒவ்வொரு முறை அழும் போதும் கவனத்தைப் பெறாமல் இருக்கும் குழந்தை அமைதியாக படுத்திருந்தாலும், காலப்போக்கில் அவர்களுடைய மனரீதியான ஆரோக்கியம் பாதிக்கப்படும். உண்மையில், அமைதியாக இருக்கும் குழந்தைகள் மனரீதியாக உள்ளுக்குள் பாதிக்கப்பட்டிருப்பார்கள்', என்கிறார் டாக்டர் ஷா.

தசையை நீட்சியடைச் செய்ய உதவுதல்

தசையை நீட்சியடைச் செய்ய உதவுதல்

அழும் குழந்தையை நீங்கள் சற்றே கவனமாகப் பார்த்தால், நிறைய தசைகள், மூட்டுகள் அல்லது உடல் முழுமையும் முறுக்கிக் கொண்டும் மற்றும் திரும்பிக் கொண்டும் இருக்கும். உண்மையில், இது குழந்தைக்கான உடற்பயிற்சி எனலாம்! ஆனால், குழந்தைகள் எப்பொழுதுமே இவ்வாறு தங்களை நீட்டிக் கொண்டிருப்பதில்லை. எனவே, இவ்வகையில் முறுக்கிக் கொண்டு அழும் போது, அதற்கு மருத்துவ ரீதியான காரணங்கள் அல்லது வயிற்று வலி இல்லை உன்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். அதே போல, நீண்ட நேரம் அழும் குழந்தையை அப்படியே விட்டுச் செல்ல வேண்டாம்,' என்கிறார் டாக்டர் ஷா.

அதிகமான உணர்வுகளை வெளிப்படுத்த உதவுதல்

அதிகமான உணர்வுகளை வெளிப்படுத்த உதவுதல்

குழந்தைகளின் உணர்வுகளையும் கூட கண்ணீர் வெளிப்படுத்தும் என்பதில் ஆச்சரியம் இல்லை. அவர்கள் கோபமாக இருக்கும் போது மற்றும் உங்களுடைய லிட்டில் மாஸ்டரின் ஆணைக்கு நீங்கள் இணங்க மறுக்கும் போது, அந்த ஏமாற்றத்தை அழுகையாக வெளிப்படுத்த குழந்தை முயற்சி செய்யும். இதற்காக பயப்பட வேண்டாம், இதன் மூலம் குழந்தையின் உணர்வுகள் வெளிப்படும். 'உங்களுடைய குழந்தை அழுவதை மற்றும் தேவை அல்லது ஆசையை வெளிப்படுத்துவதைக் கேளுங்கள், குறிப்பாக தவழும் குழந்தைகளிடம். அதன் பின்னர் அவர்களுடன் பேசுங்கள் மற்றும் கவனத்தை திசைத் திருப்புங்கள். இதன் மூலம் குழந்தையின் கோபத்தைக் குறைக்கவும் மற்றும் உணர்ச்சிகளை சமநிலைப்படுத்தவும் முடியும்,' என்கிறார் டாக்டர் ஷா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Reasons Why Crying Is Actually Good For Your Baby!

Often you don’t know why your little one is in tears and disturbed to the core. But the good thing about crying is that baby’s indication about his needs and mother’s instincts work together.
Desktop Bottom Promotion