For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பூட்டிய காரில் குழந்தைகளை விடாதீங்க: உயிருக்கு உலைவைக்கும்!

By Mayura Akilan
|

Hot Cars A Danger Zone For Kids and Pets
குடும்பத்தினருடன் அதிக தூரம் பயணம் செய்த பின்னர் காரை நிறுத்த நேரிட்டால் காருக்குள் உள்ள குழந்தைகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில் பூட்டிய காருக்குள் குழந்தைகளை விடுவது அவர்களின் உயிருக்கு ஆபத்தாகிவிடும். ஏனெனில் பூட்டிய காரில் குழந்தைகள் இருப்பதனால் வெப்பநிலை அதிகரித்து அவர்களுக்கு வெப்பநிலை பக்கவாதம், மூளை பாதிப்பு போன்றவை ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

பூட்டிய காருக்குள் குழந்தைகள் இருப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள லா ட்ராப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

மூளை பாதிக்கும்

காரில் பயணம் செய்யும் போது வெளிப்புறத்தில் 29 டிகிரி வெப்பம் நிலவும் நாளில் காருக்குள் ஏர் கண்டிஷன் மூலம் 20 டிகிரி வெப்ப நிலையாக குறையும். அதேசமயம் கார் நின்ற அடுத்த 10வது நிமிடம் வெப்பநிலை 3 மடங்காக அதிகரிக்கும். இந்த திடீர் வெப்ப நிலை அதிகரிப்பால் குழந்தைகளின் மூளை பாதிக்கப்படலாம் என்று குழுவின் பேராசிரியர் பீட்டர் ஓ மெரா தெரிவித்துள்ளார்.

வெப்பமான காருக்குள் சிக்கும் குழந்தைகளுக்கு உடனடியாக உடலில் நீர் வற்றி போய் மூளை பாதிக்கப்படும். பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு விரைவாக சோர்வு ஏற்பட்டு உடல்நிலை சீர்கெடும். நீண்ட நேரம் காருக்குள் வெப்பத்தில் இருக்கும் குழந்தைகள் சுயநினைவிழந்து பிறகு மீள முடியாத கோமா நிலைக்கு செல்லும் ஆபத்தும் இருக்கிறது.

இதை தவிர்க்க சூடேறிய காருக்குள் இருந்து வண்டி நின்றதும் குழந்தைகளை உடனடியாக வெளியே கொண்டு வர வேண்டியது அவசியம். நீண்ட தூரம் ஓடிய பிறகு நிறுத்தப்படும் கார் கதவுகளை பூட்டி குழந்தைகள் ஏறி அமராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மைக்ரோவேவ் ஓவனுக்குள் இருப்பதுபோல் குழந்தைகள் வெந்துவிடும் என்றம் பீட்டர் ஓ மெரா தெரிவித்துள்ளார்.

செல்லப் பிராணிகளுக்கு ஆபத்து

நீண்ட தூரம் ஓடிய பிறகு நிறுத்தப்பட்ட காருக்குள் குழந்தை, செல்ல பிராணிகள் அதிக நேரம் இருக்க நேர்ந்தால் உயிரிழக்கும் அபாயம் உண்டு என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் காருக்குள் வெப்பத்தில் சிக்கிய 1,500 குழந்தைகள் ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary

Hot cars a danger zone for kids and pets | பூட்டிய காரில் குழந்தைகளை விடாதீங்க!

Hot cars a danger zone for kids and pets, and heat-sensitive items a risk in 'oven' environment. A child's body temperature rises three to five times faster than an adult's, putting kids at greater risk for heat stroke, a life-threatening emergency that can cause permanent brain damage or even death, especially in children.
Story first published: Tuesday, March 13, 2012, 15:07 [IST]
Desktop Bottom Promotion