For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புட்டிப்பால் வேண்டாம்! தாய்ப்பால்தான் செல்லங்களுக்கு ஏற்றது!

By Mayura Akilan
|

Breast Milk
தாயின் மார்பிலிருந்து சுரக்கும் தாய்ப்பால் குழந்தைகளின் பசியை மட்டும் போக்குவதில்லை குழந்தைகளுக்கு நோய் எதுவும் தாக்காமல் அரண்போல செயல்படுகிறது. அதனால்தான் பிறந்த நிமிடம் தொடங்கி ஒருவருடம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

பெரும்பாலான பெண்கள் தங்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதில்லை. மாறாக புட்டிப்பால் கொடுத்து பழக்கப்படுத்திவிடுகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் அழகு கெட்டுவிடும் என்பதே. தாய்ப்பால் கொடுப்பதால் மார்பின் அழகு கெட்டுப்போவதில்லை மாறாக மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தாய்மார்களை பாதுகாக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

விஞ்ஞான ரீதியான பார்த்தால் தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் தாயின் மனநலம் பாதுகாக்கப்படுகின்றது. இங்கு தாயின் அழகு கூடுமே தவிர குறையாது. கருப்பைப் புற்று நோய், மார்பகப் புற்று நோய் தாய்க்கு வருவது தடுக்கப்படுகிறது.

தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும் நிலையில்98 சதவீத அளவுக்கு கர்ப்பம் ஆவது தடுக்கப்படுகிறது. மேலும் தாயின் கர்ப்பப்பை சுருங்கி பழைய நிலைக்குத் திரும்ப தாய்ப்பால் உதவுகிறது. குழந்தை பிறந்த பின் ஏற்படும் அதிக ரத்தப் போக்கும் தடுக்கப்படுகிறது.

புட்டிப்பால் குடிக்கும் குழந்தைக்கு அடிக்கடி வாந்தி, பேதி மற்றும் காதில் சீழ் வடிவது போன்ற முக்கிய நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் பணமும் வீணாகச் செலவிடப்படுகிறது. எனவே தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் தாயும் ஆரோக்கியமாக வாழலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

English summary

For new moms, help is available to get started breast-feeding | புட்டிப்பால் வேண்டாம்! தாய்ப்பால்தான் செல்லங்களுக்கு ஏற்றது !

Breast-feeding provides babies with plenty of nutrients, proteins and fats that are essential for babies' growth and development. Only mothers' milk can provide antibodies, which are the keys to your baby having a strong immune system that protects against all kinds of illnesses.
Story first published: Monday, August 6, 2012, 16:33 [IST]
Desktop Bottom Promotion