Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
குழந்தைகளின் நுண்ணறிவுத்திறனை அதிகரிக்கும் தாய்ப்பால்

புட்டிப்பால் குடித்த வளர்ந்த குழந்தைகளை விட தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தைகளின் நுண்ணறிவித்திறன் பல மடங்கு அதிகரித்திருப்பதாக கனடிய பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது.
14,000 குழந்தைகள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். முதல் 3 மாதங்கள் தொடங்கி 12 மாதங்கள் வரை தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகளில் 5.9% அதிக நுண்ணறிவுத்திறன் வெளிப்பட்டிருக்கிறது கண்டறியப்பட்டது. தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட குழந்தைகள் ஆறு வயதை அடையும் நிலையிலேயே தமது நுண்ணறிவுத்திறனைக் காண்பிக்க ஆரம்பித்து விடுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்குக் காரணம் தாய்ப்பாலின் கட்டமைப்பில் மூளை வளர்ச்சிக்கு அவசியமான கொழுப்பமிலங்கள்தான் என்கின்றனர். அவற்றின் பங்களிப்பே குழந்தைகளின் நுண்ணறிவுத்திறன் வளர்ச்சிக்கு உதவிபுரிகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
உறவை அதிகரிக்கும் ஸ்பரிசம்
பாலூட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் உடல்ரீதியான தொடுகைகள் மற்றும் குரல் (சொற்கள்) பரிமாற்றங்கள் கூட இதில் மாயத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்..! அதனால் தான் கடந்த காலங்களில் தாய்மார்கள் பாலூட்டும் போதும் உறங்க வைக்கும்போதும் குழந்தைகளுக்கு தாலாட்டுப் பாடுவதை மரபாக வைத்திருந்தனர்.
ஆனால் குழந்தைகளின் நுண்ணறிவு வளர்ச்சியானது தாய்ப்பாலின் நேரடி விளைவால் ஏற்படுகிறதா அல்லது தாய்ப்பால் ஊட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பலமான உறவுப்பாலம் மூலம் ஏற்படுகிறதா என்பதை ஆய்வாளர்களால் உறுதியாக தெரிவிக்க முடியவில்லை.
நோய் எதிர்ப்பு சக்தி
குறைந்தது 6 மாதங்களாவது குழந்தைகளுக்குப் பாலூட்டுவது நுண்ணறிவுத்திறனை மட்டுமன்றி நோயெதிர்ப்பு சக்தியையும் குழந்தைக்கான அடிப்படை ஊட்டச்சத்து வழங்கலையும் அதிகரிக்கும்..! பாலூட்டும் பெண்களுக்கு மார்ப்பகப் புற்றுநோய் ஏற்படுவதும் குறைவு என்பது பல ஆய்வுகளில் முன்னர் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்றைய காலத்தில் தாய்ப்பால் ஊட்டுவதற்கே நேரமில்லாத போது தாலாட்டுப்பாடி தூங்கவைக்க நேரமேது என்கின்றனர் வேலைக்குப்போகும் தாய்மார்கள். எதுஎப்படியோ நவநாகரிக உலகில் பாலூட்டுதலால் தங்களின் கவர்ச்சி விரைந்து இழக்கப்பட்டு விடும் என்று கருதி பாலூட்டலைத் தவிர்க்கும் பெண்கள் அவசியம் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டவேண்டும் என்பதை இந்த ஆய்வு முடிவு எடுத்துக்காட்டுகிறது.



Click it and Unblock the Notifications