Latest Updates
-
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்! -
லன்ச்பாக்ஸ்-க்கு தக்காளி சாதத்தை இப்படி செய்யுங்க.. பிரியாணி மாதிரி டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
கருவளையங்கள் உங்களை டல்லா காட்டுதா? அப்ப இந்த மாஸ்க்கை அடிக்கடி போடுங்க.. -
ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு - எப்படி செய்யணும் தெரியுமா? -
World Hepatitis Day 2026: இந்த அறிகுறி இருந்தா அசால்ட்டா இருக்காதீங்க.. அது ஹெபடைடிஸின் எச்சரிக்கை அறிகுறி! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கலாம்.. உஷார்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தை பாப்பீங்க..! -
இன்றைய ராசிபலன் 28 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சோதனைகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
இனி ஆண்டுதோறும் ரூ.2,000 கோடைக்கால சிறப்பு தொகை! அமைச்சர் கீதாஜீவன் சொன்ன குட் நியூஸ்
சென்னை: இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு நிதி வழங்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார். இந்த ஆண்டு ஏற்கெனவே கோடைக்கால சிறப்பு தொகை வழங்கப்பட்ட நிலையில், இனி ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மூன்று மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை மற்றும் கோடைக்கால சிறப்பு தொகையாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இனி ஒவ்வொரு ஆண்டும் மகளிருக்கு ரூ.2000 கோடைக்கால சிறப்பு தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மகளிர் உரிமைத் தொகை குறித்தும், கோடைக்கால சிறப்பு நிதி குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கோடைக்கால சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டிருப்பது, தோல்வி பயத்தை வெளிக்காட்டுவதாக விமர்சித்திருந்தார். இதற்கு அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்து பேசினார்.
அவர் பேசுகையில், இனி ஒவ்வொரு ஆண்டும் கோடைக்கால நிதியாக ரூ.2000 மகளிர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக எதிர்க்கட்சிகள் இந்த கோடைக்கால சிறப்பு தொகை குறித்து சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருந்தன. இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக்காலம் வருகிறதா? இதற்கு முன்னர் கோடைக்காலம் வரவில்லையா? ஏன் இந்த ஆண்டு மட்டும் கொடுக்கிறார்கள்? தேர்தல் அறிவிப்பை முன்னிட்டுதான் கொடுக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
இப்படி இருக்கையில், இனி ஆண்டு தோறும் கோடைக்கால சிறப்பு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது, திமுகவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்திருக்கிறது.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications