ஆனந்த் ஸ்ரீனிவாசன் பகீர்.. தங்கம் விலை 1 கிராம் ரூ.1 லட்சம் வரை உயரும்.. பீதியில் மக்கள்.. ஆனா ஒரு டிவிஸ்ட்!!

By Prasanna Venkatesh

உலகளவில் தங்கம் விலை பெரும் உயர்வு காணும் என்ற விஷயம் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில் நீயா நானா கோபிநாத் தலைமையிலான ஒரு நேர்காணலில் தங்கமயில் ஜுவல்லரி நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷ், "ஒரு அவுன்ஸ் தங்கம் 23,000 முதல் 25,000 டாலர் வரை செல்லும்" என்று ஒரு பிரபல பொருளாதார நிபுணர் தனக்கு தெரிவித்ததாக கூறினார். மேலும், உலக பொருளாதாரத்தில் தேவையை விட அதிகமாக பணம் அச்சிட்டு சந்தையில் வெளியிடப்பட்டிருப்பது தங்கத்தின் நீண்டகால உயர்வுக்கு காரணமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விஷயத்தை பொருளாதார நிபுணராக அறியப்படும் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது வீடியோவில் விவாதித்தது மட்டும் அல்லாமல் அதிர்ச்சி அளிக்கும் கணிப்பை வெளிளியிட்டு பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.


gold price surge rs 1 lakh per gram anand srinivasan prediction gold investment twist dollar to rupee forecast long term gold rise global inflation impact gold ounce 25000 dollars india gold market future gold value shocking gold timeline currency devaluation gold as safe asset economic analyst warning gold price in 2035 rupee depreciation gold fourfold increase investor advice gold precious metal boom hyperinflation gold effect 1 1 25000 2035

ஆனந்த் ஸ்ரீனிவாசன் என்ன சொல்கிறார்?
தங்கமயில் ஜுவல்லரி உரிமையாளரின் கருத்துக்கு பதிலளித்த பொருளாதார ஆய்வாளர் ஆனந்த் ஸ்ரீனிவாசன், தனது வீடியோவில் "நான் எகனாமிஸ்ட் இல்லை" என்று முதலில் தெளிவுபடுத்தினார். தங்கம் 23,000 அல்லது 25,000 டாலர் செல்லும் வாய்ப்பு இருக்கலாம். ஆனால் அது எப்போது என்பது தான் முக்கியமான கேள்வி, அதேபோல் இந்த ஆண்டின் இறுதிக்குள் இது கட்டாயம் நடக்காது என்று அவர் குறிப்பிட்டார்.

தங்கம்: பழசுக்கு புதுசு வாங்கலாமா? பணமாக மாற்றி கொள்ளலாமா? எது பெஸ்ட் ?

தங்கம் விலை உயக்வு பயணம்
2012-13 காலகட்டத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 1,000 டாலர் இருந்தது. அங்கிருந்து 5,000 டாலர் ஆக உயர்வதற்கு சுமார் 6-7 ஆண்டுகள் பிடித்தது. அதாவது 1,000 டாலரிலிருந்து 5,000 டாலர் வரை நான்கு மடங்கு உயர்வு ஏற்பட்டது. அதே மாதிரியான நான்கு மடங்கு உயர்வு தற்போதை 5000 டாலர் விலையில் இருந்து நிகழ வேண்டுமெனில், 2025 முதல் 2035 காலப்பகுதிக்குள் மட்டுமே அது சாத்தியமாக இருக்கும் என அவர் விளக்கினார்.

தற்போதைய நிலை என்ன?
தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 5,000 டாலர் அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது. ஒரு டிராய் அவுன்ஸ் என்பது சுமார் 31 கிராம் வரை இருக்கும். கணக்கை எளிதாக பார்க்க 30 கிராம் என எடுத்துக் கொண்டால், 25,000 டாலர் என்றால் ஒரு கிராம் சுமார் 800 டாலர் ஆகும்.

இன்றைய மதிப்பில் 800 டாலர் என்பது இந்திய ரூபாயில் சுமார் ரூ.70,000க்கு சமமாகும். ஆனால் 10-12 ஆண்டுகளில் டாலர் மதிப்பு தற்போது இருக்கும் 90.73 ரூபாய் விலை 170-180 ரூபாயாக உயர்ந்தால், அதே 800 டாலர் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிடும் போது ஒரு கிராமுக்கு ரூ.1 லட்சத்தைத் தாண்டும் என்பதே ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன கணக்கு.

நகை கடன், வேளாண் கடன் தள்ளுபடி? அடுத்தடுத்த மெகா அறிவிப்புகளை வெளியிடுகிறாரா ஸ்டாலின்?

10 ஆண்டுகளில் டாலர் மதிப்பு
கணக்குப்படி பார்த்தால், தங்கம் டாலரில் உயர வேண்டும். அதே சமயம் டாலர்-ரூபாய் மதிப்பும் அதிகரிக்க வேண்டும். இந்த இரண்டும் ஒரே நேரத்தில் உயர்ந்தால் தான், ஒரு கிராம் தங்கம் ரூ.1 லட்சத்தைத் தாண்டும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இது உடனடியாக அல்ல; அடுத்த 10 முதல் 13 ஆண்டுகளில் தான் சாத்தியம் என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறினார்.

முதலீட்டாளர்களுக்கு என்ன புரிந்துக்கொள்ள வேண்டும்?
தங்கம் குறுகிய கால லாபம் தரும் முதலீடு அல்ல. அது நீண்டகால பாதுகாப்பு சொத்து. உலகளாவிய பணவீக்கம், அதிக பண அச்சு, நாணய மதிப்பு சரிவு போன்ற காரணிகள் நீண்டகாலத்தில் தங்கத்தை மேலே தள்ளும். ஆனால் 25,000 டாலர் என்ற இலக்கு உடனடி நிகழ்வு அல்ல; அது அடுத்த ஒரு தசாப்தத்தில் நிகழக்கூடிய சாத்தியமான நிலை எனவே பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், "ஒரு கிராம் தங்கம் ரூ.1 லட்சம்" என்பது தலைப்புச் செய்தியாக தோன்றினாலும், அது 10-12 ஆண்டுகளுக்குப் பிறகு தான் சாத்தியமாகும் என்றே தற்போதைய கணக்குகள் கூறுகின்றன. தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் குறுகியகால எதிர்பார்ப்பை விட நீண்டகால திட்டத்துடன் அணுகுவது அவசியம்.

இந்த இடைப்பட்ட காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் கவிழ்ந்து, டாலர் மதிப்பு தரை தட்டி, இந்திய பொருளாதாரம், ரூபாய் மதிப்பு அதிகமானால் 1 லட்சம் என்ற கணக்கு எட்ட வாய்ப்பே இல்லை.

Credit: Goodreturns

Story first published: Sunday, February 22, 2026, 12:40 [IST]
Desktop Bottom Promotion