Latest Updates
-
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா?
திமுகவில் இன்று இணைகிறாரா ஓபிஎஸ்? பின்னணி காரணம் என்ன? பரபரக்கும் களம்
சென்னை: தான் நம்பியிருந்த அனைவரும் கைவிட்ட நிலையில், தற்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுக பக்கம் சாய்ந்திருக்கிறார். இந்நிலையில் இன்று அவர் திமுகவில் இணையலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவில் இருந்த ஒ.பன்னீர்செல்வம், கடந்த 2022ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இருப்பினும் எப்படியாவது மீண்டும் அதிமுகவில் இணைந்துவிட வேண்டும் என்பதில் ஓபிஎஸ் குறியாக இருந்தார். ஆனால், கடைசிவரை அதற்கான வாய்ப்பை எடப்பாடி பழனிசாமி கொடுக்கவில்லை.

சட்டமன்ற தேர்தல்
இப்படி இருக்கையில், பாஜக உதவியுடன் தனது நோக்கத்தை நிறைவேற்றிட வேண்டும் என்று ஓபிஎஸ் திட்டமிட்டிருந்தார். காலங்கள் சென்ன. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்று இயங்கி வந்த ஓபிஎஸ் விரைவில் தனிமைப்படுத்தப்பட்டார். அவருடன் டிடிவியும் இல்லை, சசிகலாவும் இல்லை. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், ஜே.சி.டி பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைகள் இருந்தனர். ஆனால், சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க, களம் மாறியது.
திமுகவில் ஐக்கியம்
பாஜக கூட்டணியை கடுமையாக எதிர்த்த எடப்பாடி பழனிசாமி, கடைசியில் அக்கட்சியுடன் கூட்டணியை வைத்துக்கொண்டார். எடப்பாடி வந்த பின்னர், ஒபிஎஸ்-ஐ பெரியதாக பாஜக கண்டுக்கொள்ளவில்லை. இருப்பினும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தார் ஓபிஎஸ். வழி பிறந்தது, ஆனால் அது ஓபிஎஸ்-க்காக இல்லை. அவருடன் இருந்த மனோஜ் பாண்டியன் மற்றும் ஆர்.வைத்திலிங்கத்திற்கதான் அந்த வழி பிறந்தது. இருவரும் திமுகவில் ஐக்கியமாகினர்.
தர்மர் எம்பி
என்னங்க தை மாசமே முடிஞ்சு போச்சு இன்னும் என்ன வழி பிறக்கப்போகுது? என்று கேள்வி எழுந்தது. பொறுத்திருங்கள் வழி பிறக்கும் என்று சொன்னார் ஓபிஎஸ். அவர் சொன்னது நடந்தது. ஆனால், இந்த முறையும் அவருக்கு வழி பிறக்கவில்லை. மாறாக அவருடன் இருந்த கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோருக்குதான் வழி பிறந்தது. இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்தனர். கடைசியாக தர்மர் எம்பி எடப்பாடி பழனியுடன் சேர்ந்துக்கொண்டார். இவருக்கு எம்பி சீட் வாங்கி கொடுத்ததே ஓபிஎஸ்தான்.
ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ
இப்படியாக அனைவரும் கைவிட, தை மாதம் முடிந்து மாசியும் தொடங்கிவிட்டது. இன்னும் கொஞ்சம் நாட்களில் தேர்தலும் அறிவிக்கப்பட இருக்கிறது. எனவே தான் தனித்து விடப்பட்டதை உணர்ந்த ஓபிஎஸ் இறுதியாக திமுக பக்கம் சாய்ந்திருக்கிறார். நேற்று சட்டமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன்,
முதல்வருக்கு பாராட்டு
"பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக முதல்வர் கொண்டுவந்த காலை உணவு திட்டம் அருமையான திட்டம். குழந்தைகளுக்கு தாயாக இருந்து காலையில் சுடச்சுட உணவை வழங்குகிறார் முதல்வர். நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றிபெற்று எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆசியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழக முதல்வராக வருவார்" என்று பேச, அதை முதலமைச்சர் வெகுவாக ரசித்தார்.
ஓபிஎஸ் சப்போர்ட்
அதேபோல, சட்டமன்ற நிகழ்வுகளை முடித்துக்கொண்டு வெளியே வந்த ஓபிஎஸ், "திமுக ஆட்சி சிறப்பாக நிறைவுபெற்றதன் காரணமாக முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதைத் தான் ஐயப்பன் சொன்னார். இன்றைய அரசியல் சூழ்நிலை, 5 ஆண்டுகால ஆட்சியின் நிலை, நாட்டுக்கு செய்த சாதனை மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளன. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு திமுகவுக்கு உள்ளது" என்று கூறி, முதலமைச்சரை இரண்டு முறை சந்தித்தார்.
இந்த சந்திப்புகள் மற்றும் பேச்சுக்கள், ஓபிஎஸ் திமுக பக்கம் இணைவதை உறுதி செய்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று அநேகமாக ஓபிஎஸ் திமுகவில் இணைவார் என்றும் சொல்லப்படுகிறது.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications











