அரசு ஊழியர்களுக்கு 7 ஆண்டுகளில் இல்லாத அகவிலைப்படி உயர்வு? வெளியானது முக்கிய தகவல்!!

By Devika Manivannan

அரசு ஊழியர்கள் தங்களுக்கான அகவிலைப்படி உயர்வு எப்போது வெளியாகும் என காத்திருக்கிறார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் இரண்டு முறை அகவிலைப்படி என்பது உயர்த்தி வழங்கப்படுகிறது.

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்கிறது. வாழ்க்கை செலவினங்கள் அதிகரிக்கின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு அடிப்படை சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை அகவிலைப்படியாக சேர்த்து வழங்குகிறார்கள்.


DA government employees pay commission

அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஆறு மாத காலத்திற்கும், ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஆறு மாத காலத்திற்கும் என இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். வழக்கமாக ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் வெளியாகும். ஜனவரி மாதத்தில் இருந்து அரியர் தொகையாக அகவிலைப்படி சேர்த்து வழங்கி விடுவார்கள்.

உங்க Fastag-இல் ரூ.1000 இலவச ரீசார்ஜ் வேணுமா? இந்த ஒரு போட்டோவ அரசுக்கு அனுப்புனா போதும்!!

இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. ஏனெனில் ஏழாவது சம்பள கமிஷன் முடிவுற்று எட்டாவது சம்பள கமிஷன் தற்போது நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் எட்டாவது சம்பள கமிஷன் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. இந்த சூழலில் அதிருப்தியில் இருக்க கூடிய மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு மிக சிறந்த அகவிலைப்படி உயர்வை வழங்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்திற்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 58% தொகையை அகவிலைப்படியாக பெறுகிறார்கள். தற்போது அவர்களுக்கு இது இரண்டு சதவீதமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதத்திற்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அத்துடன் அண்மையில் வெளியான பணவீக்க தரவுகளும் எதிர்பார்க்கப்பட்ட அளவை விட குறைவாகவே இருக்கிறது.

தங்கத்திலும் கை வைக்க ஆரம்பித்த Gen Z தலைமுறை!! டியர் 90ஸ் கிட்ஸ் உஷாரா இருங்க!!

எனவே 2% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால் மொத்த அகவிலைப்படி 60%ஆக உயரும். இப்போது அடிப்படை சம்பளம் 30000 ரூபாயாக இருக்கும் அரசு ஊழியருக்கு அகவிலைப்படி 18000 ரூபாயாக இருக்கும். இதற்கு முன்பு 2000ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்கு ஜனவரியில் 1% தான் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டது. அதன் பின்னர் 2018, 2025 ஆகிய ஆண்டுகளில் ஜனவரியில் 2% அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. மற்ற சமயங்களில் எல்லாம் 2%க்கும் மேல் தான் அகவிலைப்படி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு எவ்வளவு அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்ற தகவல் ஹோலி பண்டிகைக்கு முன்னதாக தெரிந்துவிடும்.

Credit: Goodreturns

Story first published: Sunday, February 15, 2026, 10:19 [IST]
Desktop Bottom Promotion