இந்த 4 ராசிக்காரங்களுக்கு காதலில் பிரேக்கப் என்பதே கிடையாதாம்... உங்க ராசி இதுல இருக்கா?

நம்முடைய பிறந்த ராசி நம் ஆளுமையைப் பற்றி நிறைய கூறுகின்றன, ஆனால் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு நபர் எவ்வாறு நடந்துகொள்வார் என்பதைப் பற்றியும் அவை நமக்குத் தெரிவிக்கின்றன. ஒருவரின் ராசி மக்களின் குணாதிசயங்களை விளக்குகிறது, மேலும் அவர்கள் மன்னிக்கிறார்களா இல்லையா, அவர்கள் இரண்டாவது வாய்ப்புகளை வழங்குவதில் நம்பிக்கை உள்ளவர்களா என்பதை கூறுகிறது.

ஆச்சரியமளிக்கும் விதமாக, சில ராசிக்காரர்கள் எப்போதும் மற்றவர்களுக்கு இரண்டாம் வாய்ப்பை வழங்க தயாராக இருப்பார்கள் குறிப்பாக தங்கள் முன்னாள் காதலர்களுக்கு அவர்களே தவறு செய்திருந்தாலும் அவர்களுக்கு இரண்டாம் வாய்ப்பை கொடுக்க தயாராக இருப்பார்கள். மற்ற ராசிக்காரர்கள் பழிவாங்கத் முயற்சிக்கும் போது, இவர்கள் மன்னித்து ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பார்கள்.

Zodiac Signs Who Will To Give Second Chance To Their Ex in Tamil

ரிஷபம்
ரிஷப ராசிகாரர்கள் அவ்வளவு எளிதில் காதலில் விழுந்து விட மாட்டார்கள், ஆனால் அவர்கள் காதலில் விழுந்தவுடன் , அவர்கள் உங்களை உண்மையாகவும், நேர்மையாகவும் காதலிப்பார்கள். இது அவர்களை அவர்களின் துணையை தவிர்ப்பதை கடினமாக்குகிறது. பிரிந்து செல்வது கடினம் ஆனால் ரிஷப ராசியினருக்கு நேசிப்பவரை விட்டுவிடுவது இன்னும் கடினம். அவர்கள் தங்கள் துணையை மீண்டும் வாழ்க்கையின் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள்.

நினைவுகளை மறப்பது அவர்களுக்கு மிகவும் கடினமானது, அவர்கள் பழைய நினைவுகளை சுற்றியே வாழ்வார்கள். எனவே நீங்கள் ரிஷப ராசிக்காரர்களுடன் காதலை முறித்துக் கொண்டு மீண்டும் இணைய காத்திருந்தால் உடனடியாக செல்லுங்கள், அவர்கள் உங்களுக்காக காத்திருப்பார்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் முன்னாள் காதலருக்காக தங்கள் இதயத்தில் ஒரு இடத்தை வைத்திருப்பார்கள். அவர்கள் ஒருவரை நேசிக்கும்போது, அவர்கள் தங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் முழுமையாக தங்கள் காதலில் அர்ப்பணிக்கிறார்கள். அவர்கள் தங்கள் துணை இல்லாத ஒரு தனி உலகத்தை கற்பனை செய்வது கடினம், எனவே அவர்கள் பிரிந்து செல்லாமல் இருக்க முதலில் முயற்சிப்பார்கள், ஆனால் அது நடந்தால், அவர்கள் இரண்டாவது வாய்ப்பை வழங்க அல்லது எடுக்க தயாராக இருப்பார்கள். அவர்கள் அன்பைத் தவிர வேறு எதையும் விரும்பவில்லை, அதற்காக போராட தயாராக உள்ளார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் லாஜிக்காகவும், எதார்த்தமாகவும் சிந்திக்கக் கூடியவர்கள். எனவே அவர்களிடமிருந்து வரும் இரண்டாவது வாய்ப்பு, அவர்கள் முழு விஷயத்தையும் ஏற்கனவே யோசித்து முடிவு செய்துவிட்டார்கள் என்பதன் அடையாளமாகும். கன்னி ராசிக்காரர்கள் மனக்கிளர்ச்சி கொண்டவர்கள் அல்ல, அவர்கள் மன முதிர்ச்சியடைந்தவர்கள் மற்றும் கடந்த காலத்தில் செய்த அதே தவறை மீண்டும் செய்ய மாட்டார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முழுமை பெற பாடுபடுகிறார்கள், இருப்பினும் அவர்கள் காதலில் அவ்வாறு செய்யத் தவறிவிடுகிறார்கள், எனவே அவர்கள் தங்கள் உறவுகளை மீண்டும் புதுப்பிக்க முயற்சி செய்கிறார்கள். உங்கள் கன்னி ராசி காதலர் உங்களுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்க தயாராக இருந்தால், நீங்கள் உங்களை அதிர்ஷ்டசாலி என்று கருதலாம்.

துலாம்
மற்றவர்களை எப்போதும் மன்னிக்கும் வலுவான உணர்திறன் கொண்டவர்கள் துலாம் ராசிக்காரர்கள். அவர்கள் இதயத்தால் ஆளப்படுகிறவர்கள். எனவே அவர்கள் தங்கள் முன்னாள் காதலருடன் சமரசம் செய்ய எந்த வாய்ப்பையும் பயன்படுத்துவார்கள். துலாம் ராசிக்காரர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரிடமிருந்து பிரிந்து இருக்க விரும்ப மாட்டார்கள், அது நடப்பதைத் தவிர்க்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள்.

தங்கள் காதலுக்காக எந்த சூழலிலும் போராடுவார்கள் அவர்கள், பிரிந்து செல்வது அவர்களுக்கு கடினமானது, இதனால் அவர்கள் சரிசெய்து திரும்புவதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பார்கள். உங்கள் கடந்த காலத் தவறுகளை அவர்கள் உங்களுக்கு எதிராக பயன்படுத்த மாட்டார்கள், குறிப்பாக உங்கள் தவறுகளைப் பற்றி நீங்கள் வெளிப்படையாகச் சொல்லி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டிருந்தால். எனவே நீங்கள் துலாம் ராசிக்காரர்களை காதலித்து பிரிந்திருந்தால், மீண்டும் சமரசம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Story first published: Sunday, May 28, 2023, 12:00 [IST]
Desktop Bottom Promotion