இந்த 4 ராசிக்காரங்க சைக்கோ அல்லது மனநோயாளி போல நடந்துக்குவாங்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க!

ஒவ்வொரு நபர்களும் ஒவ்வொரு குணநலன்களை கொண்டிருப்பார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், சிலரின் செயல்கள், நடத்தைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாததாக இருக்கலாம்.

பைத்தியக்காரத்தனம் இல்லாத மனிதர்கள் யார் இருக்கிறார்கள்? நாம் எந்த வகையான பைத்தியக்காரத்தனமான உலகத்தில் வாழ்கிறோம் என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். இந்த மக்களை நாம் இரண்டு வகைகளாக பார்ர்க்கலாம். பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்ளும் சிலரின் செயல்களால், யாருக்கும் எந்த பாதிப்புக்கும் இருக்காது.

Zodiac signs who are like psychopaths in tamil

அவர்கள் ஒரு மகிழ்ச்சிக்காகவும் விளையாட்டிற்காகவும் சில விஷயங்களை செய்யலாம். ஆனால், சிலர் மிகவும் பைத்தியக்காரத்தனமாக அல்லது சைக்கோத்தனமான விஷயங்களை செய்யலாம். இவர்கள் மனநோயாளிகள் போல நடந்துகொள்ளலாம். இந்த நபர்களை சுற்றியுள்ள மக்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இவர்களை ஜோதிடத்தின் மூலம் அடையாளம் காண முடியும். ராசி அறிகுறிகளின் அடிப்படையில் மனநோயாளிகள் போல் நடந்துகொள்ளும் சிலரைப் பற்றி இக்கட்டுரையில் பட்டியலிட்டுள்ளோம். நீங்கள் அவர்களில் ஒருவரா? அல்லது உங்களுடைய துணை அவர்களில் ஒருவரா? என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

மனநோயாளி என்பதன் மூலம் நாம் மிருகத்தனமான மற்றும் வெறித்தனமான செயல்களில் ஈடுபடுவர்களை பற்றி குறிக்கவில்லை. இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள மனநோயாளிகளுக்கு என்று சில பண்புகள் உள்ளன. மற்றவர்களின் உணர்வுகளைப் பற்றி அலட்சியமாக இருத்தல் மற்றும் மற்றவர்களை வெறுப்படையச் செய்யும் விஷயங்களை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது.

அவமானம், குற்ற உணர்வு, சங்கடம் போன்ற உணர்வுகள் இல்லாமை, அவர்கள் செய்யும் தவறுகளுக்கு அல்லது செயல்களுக்கு பொறுப்பேற்கவில்லை, அவர்கள் கூறும் வார்த்தைகளை ஒருபோதும் கடைப்பிடிப்பதில்லை மற்றும் நேர்மையாக நடந்துகொள்வதில்லை. உடல் மற்றும் மனரீதியான வன்முறையில் ஈடுபடுவது போன்றவை மனநல நோயாளிகளுக்கான அறிகுறிகள்.

மேஷம்
மிகக் குறைந்த அளவு ஆபத்தை ஏற்படுத்தும் மனநோயாளியாக மேஷ ராசிக்காரர்கள் இருக்கிறார்கள். இவர்களால், தங்கள் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியாது. இந்த ராசிக்காரர்கள் அதிக ஆபத்துள்ள செயல்களை செய்ய விரும்புகிறார்கள். இதனால், பயங்கரமான பின்விளைவுகள் கூட ஏற்படலாம். இவர்கள் சிலிர்ப்பைப் பெறும் வரை, அவர்கள் யாரை ஆபத்தில் ஆழ்த்துகிறார்கள் என்பதைப் பற்றி அரிதாகவே கவலைப்படுகிறார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசி நேயர்கள் அவர்களின் சொந்த சூழ்நிலையில் உள்ள வெறுமையை ஈடுசெய்ய மற்றவர்களை கஷ்டப்படுத்தலாம். அவர்களால் முடிந்தவரை மற்றவர்களுக்கு சிக்கல்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம்.

இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சிறப்பாக உணர வேண்டும் என்பதற்காக எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யத் தகுதியுடையவர்கள் என்ற மனப்பான்மை அவர்களுக்கு இருக்கிறது. இது ஒருவிதமான மனநோய் அல்லது சைக்கோத்தனமான மனப்பான்மை.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அதிக பொய் சொல்லும் மனநோயாளியாக இருப்பார்கள். இவர்களால் ஒவ்வொரு முறை சுவாசிக்கும்போதும் பொய் சொல்ல முடியும், எல்லா நேரத்திலும் பொய் சொல்ல முடியும். உண்மையான காரணத்திற்காக அல்லாமல், தொடர்ந்து பொய் கூறிக்கொண்டே இவர்கள் இருக்கலாம்.

உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வேறுபாட்டை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதுபற்றி அவர்கள் தங்களையோ அல்லது தங்கள் மனசாட்சியையோ கேள்வி கேட்பதில்லை. தொடர்ந்து பொய் கூறி வரும் மிதுன ராசிக்காரர்கள், மனநோயாளி போல நடந்துகொள்ளலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள், ஆற்றல் மிக்கவர்கள் மற்றும் சூழ்நிலைகளை அல்லது யாரையாவது கையாளும் அல்லது கட்டுப்படுத்தும் போது தந்திரமானவர்களாக இருக்கலாம். இவர்கள சைக்கோ அல்லது சாடிஸ்ட் என்றும் அழைப்பதற்கு ஏற்ப நடந்துகொள்வார்கள். அதீத சாத்தியக்கூறுகளுடன் கூடிய காட்சிகளை கற்பனை செய்யும் போக்கு அவர்களிடம் உள்ளது.

அவர்களின் அதீத கற்பனையால், பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இந்த ராசிக்காரர்களால் ஒரு குற்றத்தை மட்டும் செய்ய முடியாது, குற்றவாளிகளின் குழுவை வழிநடத்தவும் முடியும். இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களும் சில மனநோயாளிகளுக்கான நடத்தைகளைக் கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் மேற்கூறிய வகையான மனநோயாளிகள் இல்லை.

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலானது. இதன் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.

Story first published: Friday, May 12, 2023, 14:51 [IST]
Desktop Bottom Promotion