Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
2023-ல் இந்தியாவில் சூடான வாக்குவாதங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்திய டாப் 5 விஷயங்கள்!
Year Ender 2023: தற்போது 2023 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் பயணித்து வருகிறோம். இன்னும் சில நாட்களில் 2024 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். இந்த ஆண்டில் இந்தியாவில் சர்ச்சைக்குரிய பல விஷயங்கள் நடந்தன. அதில் பல மறக்க முடியாத அளவில் பல நாட்களாக விவாதத்திற்கு உள்ளானதோடு, போராட்டங்களை ஏற்படுத்தும் வகையில் இருந்தன.
அதோடு தொடர்ந்து பல நாட்களாக தலைப்புச் செய்திகளையும், சமூக வலைதளங்களிலும் பல சூடான விவாதங்களை தூண்டின. அப்படி 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் மக்களிடையே பல சூடான விவாதங்களைத் தூண்டி பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்திய சில விஷயங்களை இப்போது காண்போம்.

1. 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம்
விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கிய 'தி கேரளா ஸ்டோரி' என்னும் திரைப்படம் 2023 ஆம் ஆண்டில் வெளியானது. இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளிவந்த போதே, இந்த திரைப்படத்தை வெளியிட தடை செய்யுமாறு இந்தியாவின் பல மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஏனெனில்
இந்த திரைப்படத்தில் கேரளாவில் சுமார் 32, 000 பெண்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டதாக கூறி, கட்டாய மத மாற்றத்தை மையமாக கொண்டிருப்பதோடு, ஐஎஸ்ஐஎஸ்-ஆளப்பட்ட சிரியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் இஸ்லாமியர்களை மோசமாக வெளிப்படுத்திக் காட்டும் வகையில் இருந்ததால், இந்த படம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. நீதிமன்றத்தில் கூட இந்த படத்தை வெளியிடக்கூடாதென வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும், அனைத்தையும் மீறி இந்த திரைப்படம் வெளியிடப்பட்டது.
2. இந்தியா Vs பாரத் சர்ச்சை
2023 ஆம் ஆண்டின் G20 உச்சிமாநாட்டில் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட பார்ட்டி அழைப்பிதழில், திரௌபதி முர்மு அவர்களை 'இந்திய ஜனாதிபதி' என்பதற்கு பதிலாக பாரதத்தின் ஜனாதிபதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை அறிந்த எதிர்கட்சியை சேர்ந்தவர்கள், இந்த அழைப்பிதழ் இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றுவதற்கான முயற்சிகளை எடுப்பதை சுட்டிக் காட்டுவதாக கூறி சர்ச்சை எழுந்தது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களிலும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
3. மல்யுத்த வீரர்களின் எதிர்ப்பு
இந்தியாவின் புகழ்பெற்ற மல்யுத்த வீரர்களான சாக்ஷி மாலிக், வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா போன்றோர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தருவதாக குற்றம் சாட்டி போராட்டத்தில் குதித்தனர்.
இந்த போராட்டம் பல நாட்களாக நடந்தது. பிரிஜ் பூஷன் ஷரன் சிங் 2011 ஆம் ஆண்டு முதல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். இவர் பாஜகவின் கீழ் ஐந்து முறை எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
4. டீப்ஃபேக் சர்ச்சை
பிரபல தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ 2023 ஆம் ஆண்டில் பெரிய சர்ச்சையை கிளப்பிய மற்றொரு சம்பவமாகும். சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை பார்க்கும் போது, உண்மையில் அது எடிட்டிங் செய்யப்பட்டது போன்றே தெரியவில்லை.
அந்த அளவு அந்த டீப்ஃபேக் வீடியோ ரியலானது போன்றே காணப்பட்டது. இம்மாதிரியான வீடியோவைப் பார்க்கும் போது கவலை தான் அதிகரிக்கிறது. ராஷ்மிகாவிற்கு முன் நடிகைகளான கஜோல், கத்ரீனா கைஃப் போன்றவர்களும் இந்த டீப்ஃபேக் டெக்னாலஜியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5. பிபிசியின் ஆவணப்படம்
பிரதமர் மோடியின் பிபிசியின் ஆவணப்படம் 2023 ஆம் ஆண்டில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஆவணப்படம் ஜனவரி 17 முதல் ஜனவரி 24 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு வெளியிட இருந்தது. ஆனால் இந்த ஆவணப்படம் பெரிய தடையை எதிர்கொண்டது. சமூக வலைத்தளத்தில் பரவி அதிகம் வைரலானது.
இந்த ஆவணப்படத்தை பிபிசி எடுத்தால் அதை தடை செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆவணப்படம் ஏன் திரையிடக்கூடாது என்று கூறப்பட்டது தெரியுமா? ஏனெனில் இந்த ஆவணப்படம் 2002-ல் நிகழ்ந்த குஜராத் முஸ்லீம் எதிர்ப்பு கலவரத்தை சுற்றியுள்ள நிகழ்வுகளைக் கொண்டது. இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டதால், பல இடங்களில் பலர் கைது செய்யப்பட்டனர்.



Click it and Unblock the Notifications











