Latest Updates
-
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நவம்பர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சாறு பிழிந்த எலுமிச்சை தோலை வீணாக்காதீங்க - இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க - ரொம்ப யூஸ்புல்லா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பருப்பை கடையாம, ஒருவாட்டி ஹோட்டல் ஸ்டைல் பருப்பு கடையல் செய்யுங்க.. -
டாக்டர்கள் ஆப்ரேஷன் செய்யும் போது ஏன் நீலம் அல்லது பச்சை நிற உடை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
தொடர்ந்து 30 நாட்கள் தினமும் பூசணி விதைகளை சாப்பிட்டால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும் தெரியுமா? -
செட்டிநாடு முருங்கைக்கீரை கொள்ளு குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - எடை புயல் வேகத்துல குறையும் -
6 பேர் மட்டுமே வசிக்கும் உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட தீவு - இந்த தீவில் என்ன அதிசயம் இருக்கு தெரியுமா? -
29 ஆண்டுகளுக்கு பின் மேஷம் செல்லும் சனிபகவான்: 2027-ல் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் கோதுமை ரவையும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. -
அக்டோபர் 30, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு சவால்களும், சாதனைகளும் நிறைந்த நாளாக இருக்குமாம்
33 பேர் மட்டுமே வசிக்கும் உலக வரைபடத்திலேயே இல்லாத அதிசய நாடு... இந்த நாட்டுக்கு ஜனாதிபதி கூட இருக்காராம்...!
இந்த பூமியில் பெரிய மற்றும் சிறிய நாடுகள் என பல நாடுகள் இருக்கின்றன. ஆனால் மிக சிறிய நாடு என பெயர் பெற்றும் தனித்து விளங்கும் ஒரு சிறிய நாடு இருக்கிறது. அதன் பெயர் மொலோசியா. அமெரிக்காவின் நெவாடா மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்த சிறிய நாடு வெறும் 33 மக்களை மட்டுமே கொண்டுள்ளது. இது மற்ற எந்த நாட்டினராலும் அங்கிகரிக்கப்படவில்லை என்றாலும், இது தனக்கென சொந்த கொடி, நாணயம், மரபுகள் மற்றும் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் ஒரு ஜனாதிபதியையும் கொண்டிருக்கிறது.

மொலோசியாவின் தோற்றம்
1977 ஆம் ஆண்டு தான் மொலோசியாவின் கதை தொடங்கியது. கெவின் பாக் என்ற நபரும் அவரது நண்பரும் சேர்த்து அவர்களது வீட்டை ஒரு சுதந்திர நாடாக அறிவிக்க முடிவு செய்தார்கள். உண்மைதான், அவர்கள் குடியிருந்த சாதாரண அமெரிக்க வீட்டை அவர்களாகவே அறிவித்து கொண்டு தனி நாடாக மாற்றினார்கள். இப்போது வரை மொலோசியா ஒரு சிறிய நாடாக பெருமையுடன் விளங்குகிறது.
உலக வரைபடத்தில் இல்லாத நாடு
மொலோசியா உலக வரைபடங்களில் இல்லை என்றாலும், அதற்கென தனி தூதரகம் இல்லை என்றாலும், இங்கு வருபவர்களுக்கு மொலோசியா ஒரு உண்மையான நாடு என்கிற எண்ணத்தை தருகிறது. இங்கு சுற்றுலா பயணிகளை வரவேற்கிறார்கள், ஆனால் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அங்கு இருக்க அனுமதி இல்லை. மற்ற நாடுகளை போலவே, சுற்றுலா பயணிகள் உள்ளே செல்லும் முன் அவர்களின் பாஸ்போர்ட்டில் முத்திரை பதித்து கொள்ள வேண்டும்.
குடும்ப ஆட்சி
கெவினின் ஆட்சிக்கு கீழ் தான் மொலோசியாவில் உள்ள அனைத்தும் இயங்குகிறது. அவர் தான் அங்கு ஜனாதிபதி. அங்கு இருக்கும் ஒவ்வொருவரும் அவரது குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். அங்கு தெருக்களை சுத்தம் செய்வது முதல் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டுவது வரை அனைத்தையும் அவர்கள் ஒன்றாக சேர்ந்து நிர்வகிக்கிறார்கள். இங்கு கடை, நூலகம், தபால் நிலையம் மற்றும் கல்லறை என அனைத்து அத்தியாவசிய வசதிகளும் இருக்கின்றன.
இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மொலோசியாவின் வரலாறு, கட்டிடங்கள் மற்றும் வினோதமான விதிகளை பற்றி ஜனாதிபதி கெவின் அவர்களே அழைத்து சென்று விளக்குகிறார். அந்த நாட்டின் தேசிய கீதம் மற்றும் சட்டங்களை அவரே எழுதியும் இருக்கிறார். மேலும் கொடியையும் அவரே வடிவமைத்திருக்கிறார்.
மொலோசியாவின் சிறப்புகள்
அதன் அளவு சிறிதாக இருந்தாலும், மொலோசியா ஆன்லைனில் பிரபலமாகிவிட்டது. "உலகின் மிகச்சிறிய நாடு" என்னும் வார்த்தைகளை பயன்படுத்தி கூகிளில் அதைத் தேடுகிறார்கள். பயண வலைப்பதிவர்கள் அதை பற்றி செய்திகளை வெளியிடுவதை விரும்புகிறார்கள். சமூக ஊடகங்களில் அதன் கொடி, பாஸ்போர்ட் முத்திரைகள் மற்றும் சுற்றுப்பயணங்களின் புகைப்படங்கள் பரவி, உலகெங்கிலும் இருக்கும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன.
தடைசெய்யப்பட்டுள்ள பொருட்கள்
மொலோசியாவில் வெங்காயம், வால்ரஸ்கள் மற்றும் கெளுத்தி மீன்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. இதற்கென அதன் சொந்த நேர மண்டலமும், தனி அளவீட்டு முறையும் உள்ளது. இங்கு குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே குடியுரிமை கொடுக்கப்படும்.
மொலோசியாவின் தனிச்சிறப்புகள்
மொலோசியாவில் ஆடம்பரமான வானளாவிய கட்டிடங்கள் அல்லது பெரிய வளங்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அது மக்களை பெரிதும் கவர்கிறது. கெவின் பாக் தன்னம்பிக்கை, எளிமை மற்றும் நம்பிக்கையின் வலுவான அடிப்படையில் ஒரு தேசத்தை உருவாக்கி இருக்கிறார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக மொலோசியா தொடர்ந்து அதன் தனித்துவத்தை கொண்டிருக்கிறது. ஒரு நாடாக இருப்பது என்பது அதன் நிலம் அல்லது அங்கீகாரம் பற்றியது மட்டுமில்லாமல், தொலைநோக்கு பார்வை மற்றும் மதிப்புகளைப் பற்றியது என்பதற்கு இது ஒரு சான்றாகிறது.



Click it and Unblock the Notifications

