Latest Updates
-
நாளை நடக்கும் எம நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தலைவிதி மாறும், செல்வம் பெருகும்.. -
உங்களுக்கு வெற்றி, பணம் குவியணுமா? அப்ப சாணக்கியர் கூறும் இந்த 4 காலை பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
முட்டையும், குடைமிளகாயும் இருந்தா.. ஒருடைம் இத ட்ரை பண்ணுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
ஜூலை 15-ல் குரு அஸ்தமனமாவதால் இந்த 5 ராசிக்கு பண மழை பொழியும், பதவி உயர்வு கிட்டும்! -
சிக்கன் மலாய் கபாப் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
சீரக நீர் Vs சியா விதை நீர் - இவற்றில் உடல் எடையை குறைக்க சிறந்தது எது? -
12 ஆண்டுகள் கழித்து ஜூலை 16-ல் உருவாகும் 'குரு ஆதித்ய ராஜயோகம்': இந்த 6 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்க போகுது! -
மணமணக்கும்.. ஆட்டுக்குடல் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்படப் போறாங்களாம்
டிசம்பர் 22 ஆம் தேதி பகல் நேரம் குறைவாகவும், இரவு நேரம் அதிகமாகவும் இருக்குமாம்.. ஏன் தெரியுமா?
Winter Solstice 2023: சங்கிராந்தி என்பது பெரும்பாலும் "ஆண்டின் குறுகிய நாள்" என்று அழைக்கப்படுகிறது. இது வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலத்தின் முதல் நாளைக் குறிக்கிறது. இந்த குளிர்கால சங்கிராந்தி பொதுவாக ஆண்டுதோறும் டிசம்பர் 20 அல்லது 21 ல் நடைபெறுகிறது. மிகவும் அரிதான காலங்களில் டிசம்பர் 23 ல் நடைபெறுகிறது. 1903 ஆம் ஆண்டு இந்த குளிர்கால சங்கிராந்தி டிசம்பர் 23ல் நடைபெற்றது.
இந்த காலத்தில் சூரியன் வானத்தில் குறுகிய பாதையில் பயணிக்குமாம். இந்த ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி காலை 8:57 மணிக்கு குளிர்கால சங்கிராந்தி நடைபெறுகிறது. இந்த குளிர்கால சங்கிராந்தி நாளில் தெற்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாளாகவும், குறுகிய இரவாகவும் இருக்கும்.

இதுவே வடக்கு அரைக்கோளத்தில் குறுகிய பகலாகவும், நீண்ட இரவாகவும் இருக்கும். இந்த சமயத்தில் தெற்கு அரைக்கோளம் நேரடி சூரிய ஒளியைப் பெறுகிறது. எனவே இது தெற்கு அரைக்கோளத்தில் கோடைக்கால ஆரம்பமாக அமைகிறது.
குளிர்கால சங்கிராந்தி பற்றி கூடுதல் சுவாரஸ்யமான விஷயங்கள்:
இந்த குளிர்கால சங்கிராந்தி நாளில் வடக்கு அரைக்கோளம் குளிர்ந்த வெப்பநிலையையும், அதே நேரத்தில் தெற்கு அரைக்கோளம் வெப்பமான வெப்பநிலையை பெற்று இருக்கும். இந்த சங்கிராந்தி என்ற சொல்லானது லத்தீன் மொழியில் உள்ள "சோல்ஸ்டிடியம்" என்பதிலிருந்து உருவாகியுள்ளது. இதற்கு "சூரியன் அசையாமல் நிற்கிறது" என்பது பொருள்.
வடக்கு அரைக்கோளத்தில் குளிர்கால சங்கிராந்தி நிகழும்போது, வட துருவமானது சூரியனிலிருந்து சில அச்சு தொலைவில் சாய்ந்திருக்கும். அதே நேரத்தில் சூரியனின் கதிர்கள் அதே அளவு பூமத்திய ரேகையிலிருந்து தெற்கு நோக்கி நகர்வதால், செங்குத்து நண்பகல் கதிர்கள் மகர டிராபிக் இல் நேரடியாக மேல்நோக்கிச் செல்கின்றன. அதாவது பூமியின் அச்சில் 23.4 டிகிரி சாய்வதால் வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளங்கள் வெவ்வேறு அளவு சூரிய ஒளியைப் பெறுகின்றன. இதன் விளைவாக நமக்கு வெவ்வேறு பருவங்கள் உருவாகின்றன என்கிறார்கள் நிபுணர்கள்.
குளிர்கால சங்கிராந்திக்கு சில வாரங்களுக்கு பிறகு நம்முடைய பூமி சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகத்தின் சுற்றுப்பாதையில் உள்ள பெரிஹேலியனை அடைகிறது. எனவே டிசம்பர் சங்கிராந்தி என்பது வடக்கு அரைக்கோளத்தில் ஆண்டின் மிகக் குறுகிய நாளையும், தெற்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாளையும் குறிக்கிறது. எனவே சூரியனின் நண்பகல் ஆனது சங்கிராந்தியில் வருவதை விட கடிகாரத்தால் சுமார் 10 நிமிடங்கள் முன்னதாக வருகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இதனால் சூரிய நேரமும் நம்முடைய கடிகார நேரமும் வேறுபடுகிறது. எனவே வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளத்தில் குளிர்கால சங்கிராந்திக்கு முன்னதாகவே சூரிய அஸ்தமனமும், சூரிய உதயமும் கணக்கிடப்படுகிறது.
இந்த மாதிரி ஏற்படுவதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. அதற்கு சூரியனைச் சுற்றியுள்ள பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதை காரணம் ஆகும். டிசம்பர் சங்கிராந்தி நேரத்தில் பூமி சூரியனுக்கு மிக அருகில் அமைந்திருப்பதால் நம்முடைய பூமி வேகமாகச் சுழல்கிறது. இதனால் சூரிய நேரத்திற்கும் கடிகார நேரத்திற்கும் இடையே வேறுபாடு ஏற்படுகிறது. இது ஆண்டின் மற்ற நேரங்களை விட நெருக்கமான நேரங்களாக உள்ளது.
குளிர்கால சங்கிராந்தியின் முக்கியத்துவம்:
குளிர்கால சங்கிராந்தி என்பது குளிர்காலத்தின் தொடக்கமாக பார்க்கப்பட்டு நம் முன்னோர்கள் பல்வேறு பண்டிகைகளை கொண்டாடி வந்துள்ளனர்.
யூல் நோர்ஸ் மக்களாலும், ஆங்கிலோ-சாக்சன் பேகன்களாலும் இந்த குளிர்கால சங்கிராந்தி கொண்டாடப்பட்டது. யூல் மரக்கட்டைகள் மற்றும் மரங்களை அலங்கரித்து தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.
மகர சங்கராந்தி என்ற பெயரில் இது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இது குளிர்கால சங்கிராந்தி மற்றும் நீண்ட நாட்களின் தொடக்கத்துடன் மாதத்தின் முடிவைக் குறிக்கிறது.
ஈரானியர்கள் குளிர்கால சங்கிராந்தியை யால்டா இரவாகக் கொண்டாடுகிறார்கள். இது ஆண்டின் இருண்ட இரவாக அவர்கள் பார்க்கிறார்கள்.
குளிர்கால சங்கிராந்தி குறித்த கட்டுக்கதைகள்:
ஃபின்னிஷ் புராணத்தில் குளிர்கால சங்கிராந்தி குறித்த கட்டுக்கதை ஒன்று உள்ளது. அதாவது லூஹி சூரியனையும் சந்திரனையும் திருடி ஒரு மலைக்குள் சிறைபிடித்து வைப்பதால் குளிர்கால சங்கிராந்தி நடைபெறுகிறது என்ற கட்டுக்கதைகள் உள்ளன.
சில நாடுகளில் குளிர்கால சங்கிராந்தியை நினைவுச் சின்னங்களாகவும் பொரித்துள்ளனர். இந்த குளிர்காலத்தில் விலங்குகளை வதைத்தல், உணவுக்கு பஞ்சம் போன்றவை ஏற்பட்டது.



Click it and Unblock the Notifications