Latest Updates
-
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை
தென் கொரியாவில் சிவப்பு பேனா யூஸ் பண்ணக்கூடாதாம்.. ஏன் தெரியுமா?
Red Ink Is Banned In South Korea: மூடநம்பிக்கைகள் என்பது இந்தியாவில் மட்டுமில்லை. உலகம் முழுவதும் அந்தந்த பகுதிகளின் கலாச்சாரத்திற்கு ஏற்ப மூடநம்பிக்கைகள் நிலவி வருகிறது. மூடநம்பிக்கைகள் பொதுவாக நம்பிக்கை மற்றும் அறிவீனத்தின் விளைவால் ஏற்படுகிறது.
உலகில் நாம் எந்த மூலைக்குச் சென்றாலும், ஒவ்வொரு கலாச்சாரத்திலும் மூட நம்பிக்கைகள் இருக்கும். இந்தியாவில் வெளியே செல்லும் போது கருப்பு பூனை குறுக்கே வந்தால், அது துரதிர்ஷ்டத்தைத் தரும் என்பது மிகவும் பொதுவான மூடநம்பிக்கையாகும். அதேபோல அமெரிக்காவில் ஏணியின் கீழ் நடப்பது துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. அதேபோல சில நாடுகளில் சிவப்பு நிற மையால் எழுதுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் சிவப்பு மையை பயன்படுத்தி எழுதுவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனெனில் தென் கொரியாவில், சிவப்பு மையில் யாராவது எழுதினால் அவர்கள் என்று நம்பப்படுகிறது. ஆனால் இந்த மூடநம்பிக்கைக்கு பின்னால் உள்ள காரணம் என்ன? தென் கொரியாவில், சிவப்பு மை தீமையின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
எனவே சிவப்பு நிற பேனாக்கள் குழந்தைகளிடமிருந்து விலக்கி வைக்கப்படுகின்றன. ஒருவரின் பெயரை சிவப்பு பேனாவால் எழுதினால் அவர் இறந்துவிடுவார் என்பது மூடநம்பிக்கை. எனவே தென் கொரியர்கள் சிவப்பு நிற பேனாக்களை வீட்டில் கூட வைத்திருப்பதில்லை. இந்த மூடநம்பிக்கை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் சிவப்பு மையில் பெயர் எழுதினால் அவர் இறந்து விடுவாரா? நிச்சயமாக இல்லை.
சிவப்பு நிற மையில் எழுதுவது ஒருவருக்கு நிச்சயம் மரணத்தை ஏற்படுத்தாது. இருப்பினும், பாரம்பரிய கொரிய கலாச்சாரத்தில், இறந்தவர்களின் பெயர்கள் சிவப்பு நிற மையில் எழுதப்படுகின்றன. எனவே உயிருள்ளவர்களின் பெயர்களை எழுத மக்கள் இந்த நிற பேனாவைப் பயன்படுத்துவதில்லை. ஒருவேளை யாராவது ஒருவரின் பெயரை சிவப்பு மையால் எழுதினால், அவர்கள் அந்த நபரை வெறுக்கிறார்கள் அல்லது கொல்ல விரும்புகிறார்கள் என்று நம்பப்படுகிறது.
தென்கொரியார்களின் கலாச்சாரம் மட்டுமின்றி வரலாற்றுரீதியாகவே சிவப்பு நிறம் தென் கொரியாவில் மரணத்தை குறிக்கிறது, எனவே அது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த மூடநம்பிக்கை பற்றிய மற்றொரு கோட்பாடு என்னவெனில் கொரியாவின் ஜோசன் வம்சத்தின் ஏழாவது மன்னர், கிங் செஜோங்கின் இரண்டாவது மகன் கிராண்ட் இளவரசர் சூயாங், அவரது மருமகன் கிங் டான்ஜோங்கிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டினார்.
கிராண்ட் இளவரசர் சூயாங் தனது எதிரிகளின் பட்டியலை உருவாக்க சிவப்பு மையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் மற்றொரு கோட்பாடு கொரியப் போரின் போது, இறந்த பொதுமக்கள் அல்லது வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்களை அகற்ற சிவப்பு மை பயன்படுத்தப்பட்டது என்று கூறுகிறது. சிவப்பு நிறம் விரைவில் மரணம் போன்ற மோசமான நிகழ்வுகளுடன் தொடர்புடையது. சிவப்பு மையை தடை செய்துள்ளது தென்கொரியா மட்டுமல்ல.
சிவப்பு மை போர்த்துகீசியாவில் முரட்டுத்தனத்தின் அடையாளமாக இருக்கிறது. போர்ச்சுகலில் சிவப்பு மை எதிர்மறையான செயலைக் குறிக்கிறது. இந்தியா உட்பட மற்ற நாடுகளில் சிவப்பு நிறத்தில் எழுதுவது மிகவும் சகஜமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் போர்ச்சுக்கலில் இது அவசியம் தவிர்கைப்பட வேண்டிய ஒன்றாகும். இதற்கு மதரீதியாகவோ அல்லது கலாச்சாரரீதியாகவோ எந்த தொடர்பும் இல்லை, மாறாக அதற்கு காரணம் சிவப்பு நிறத்தின் வேகமாக ஒளிரும் தன்மை.
சிவப்பு நிறம் ஒரு பிரகாசமான நிறம் என்பதில் சந்தேகமில்லை. இது படிப்பவர்களுக்கு மிகவும் எளிதாக முக்கியமான வரிகளை உயர்த்திக் காட்டுகிறது, ஆனால் சிவப்பு மைகளின் குறுகிய ஆயுள் காரணமாக, வணிகங்கள் மற்றும் சட்டப் பணிகளில் அவற்றைப் பயன்படுத்துவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
நீலம் மற்றும் சிவப்பு இரண்டும் பிரகாசமான மற்றும் பயனுள்ள வண்ணங்கள் ஆனால் கருப்பு நிறம் மற்ற நிறங்களை விட நீண்ட காலம் நீடிக்கும். எனவே ஆவணங்களின் நீண்ட காலப் பாதுகாப்பிற்கு, நீலம் அல்லது கருப்பு நிறத்தை அனைவரும் பயன்படுத்துகிறார்கள்.
அறிவியல் காரணத்தைத் தவிர, போர்த்துகீசிய மொழியில் சிவப்பு மை என்பது ஆபத்தின் அடையாளம். எனவே சிவப்பு நிற மையில் எழுதப்பட்டவை துரதிர்ஷ்டவசமானவை மற்றும் எதிர்மறையான முடிவுகளை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. சிவப்பு நிறம் வழக்கமான பணிகளுக்கோ அல்லது வாசிப்புக்கோ பயன்படுத்தப்படுவதில்லை.
ஒரு நபர் சிவப்பு மையைப் பார்க்கும்போது முதல் நொடியில் அது எப்போதும் எதிர்மறையான எண்ணத்தை அளிக்கிறது. சிவப்பு என்பது தோல்வி அல்லது தோல்வியின் அடையாளம், போர்ச்சுகலில் சிவப்பு முரட்டுத்தனமாக கருதப்படுகிறது. போர்ச்சுகல் மட்டுமின்றி ஜப்பானிலும் இது தடைசெய்யப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
