Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
பிளாஸ்டிக் நாற்காலிகளுக்கு பின்னால் ஓட்டைகள் இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
அனைத்து வீடுகளிலும் காஸ்டலியான பர்னிச்சர்கள் இருக்காது, ஆனால் கிட்டத்தட்ட அனைத்து இந்திய வீடுகளிலும் குறைந்தது ஒரு பிளாஸ்டிக் நாற்காலியாவது இருக்கும். அது உட்காருவதற்கு பயன்படுகிறதோ இல்லையோ நிச்சயம் பெரும்பாலான வீடுகளில் இருக்கும். கிட்டதட்ட அனைத்து நாற்காலிகளிலும் பின்புறத்தில் துளைகள் இருக்கும்.
ஒரு பிளாஸ்டிக் நாற்காலியின் பின்புறத்தில் எப்போதும் துளைகள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அந்த ஓட்டைகள் இருப்பதற்கு பின்னால் எந்த காரணமும் இல்லை என்று நினைக்கிறீர்களா? சொல்லப்போனால் அந்த துளைகளுக்குப் பின்னால் சில காரணங்கள் உள்ளது. அந்த துளை இருப்பதற்கு உண்மையில் இரண்டு நல்ல காரணங்கள் உள்ளன.

முதல் காரணம்
ஒரு காரணம் நாற்காலிகளை அடுக்கி வைப்பது தொடர்பானது. பிளாஸ்டிக் நாற்காலிகள் அடுக்கி வைக்கப்படும்போது, அவை நாற்காலிகளுக்கு இடையில் ஒரு காற்றுப் பையை உருவாக்குகின்றன, இதன் விளைவாக நாற்காலிகளுக்கு இடையில் "Suction" என்று விளைவு ஏற்படுகிறது. இதனால் நாற்காலிகளைப் பிரிப்பது மிகவும் கடினமாகிறது. இந்த துளை காற்று வெளியேற அனுமதிக்கிறது, எனவே நாற்காலிகள் ஒன்றாக "ஒட்டிக்கொள்ளாது" மேலும் அவற்றை எளிதாகப் பிரிக்கலாம்.
இரண்டாவது காரணம்
நாற்காலிகளுக்கு இடையில் துளைகள் இருப்பதற்கான இரண்டாவது காரணம், இது உற்பத்தியுடன் தொடர்புடையது. நாற்காலிகள் தயாரிக்கும் செயல்முறையானது சூடான பிளாஸ்டிக்கை அச்சுகளில் ஊற்றுவதன் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. இந்த துளை ஒரு நாற்காலி அச்சுகளிலிருந்து எளிதாக வெளியே வர அனுமதிக்கிறது, மேலும் அச்சுக்குள் இன்னும் சிறிது பிளாஸ்டிக் சிக்கியிருந்தால் நாற்காலிகள் உடைந்து போகக்கூடும். ஒட்டுமொத்தமாக, அந்த சிறிய துளை வடிவமைப்பின் ஒரு பகுதியாகும், இது தயாரிக்கப்பட்ட நாற்காலிகள் நடைமுறைக்குரியதாகவும், எளிதில் நகர்த்தக் கூடியதாகவும், நீண்ட காலம் உழைக்கவும் அனுமதிக்கிறது.
பிளாஸ்டிக் நாற்காலியில் உள்ள சிறிய துளை, நாற்காலியை நகர்த்துவதற்கு இலகுவாக மாற்றவும், குறைந்த பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தவும் உதவுகிறது, இது உற்பத்திச் செலவுகளை பெருமளவில் குறைக்கிறது. ஒரு நாற்காலியாக பார்க்கும் போது இதனால் சேமிக்கப்படும் பிளாஸ்டிக்கின் அளவு குறைவாகத் தோன்றினாலும், மில்லியன் கணக்கான நாற்காலிகள் செய்யப்படும்போது அது பெருமளவில் பணத்தை சேமிக்கிறது.
இந்த துளைகள் அமர்ந்திருப்பவருக்கு காற்றோட்டத்தை மேம்படுத்துகிறது, நீண்ட நேரம் அவர்களை குளிர்ச்சியாகவும், வசதியாகவும் உணர வைக்கிறது. நாற்காலியில் தண்ணீர் சிந்தினால், அது தேங்கி நிற்காது, துளை அதை எளிதில் வடிகட்ட அனுமதிக்கிறது.
நீண்ட காலம் உழைக்கும்
பிளாஸ்டிக் நாற்காலிகள் எடை குறைவானதாக இருக்கலாம், ஆனால் அவை அதிக சுமைகளைச் சுமக்க வேண்டும். துளைகள் இல்லாவிட்டால், பின்புறம் ஒரு திடமான பிளாஸ்டிக் துண்டாக மட்டுமே இருக்கும், இது குறிப்பிட்ட அழுத்தத்தின் கீழ் விரிசலடைய வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையில் துளைகள் நாற்காலி முழுவதும் அழுத்தத்தை சமமாக விநியோகிக்கிறது, நாற்காலிக்கு அதிக நெகிழ்வுத்தன்மையையும் வலிமையையும் தருகிறது. இது அடிப்படையில் பலவீனமான புள்ளிகளில் முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைப்பதன் மூலம் உடைப்பைத் தடுக்கிறது. அதனால்தான் இந்த நாற்காலிகள் மலிவானவை என்றாலும், அவை முறையாகக் கையாளப்பட்டால் பல ஆண்டுகள் நீடிக்க்கிறது.
தோற்றத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள்
இந்த துளைகள் நாற்காலியின் எடையில் மட்டுமின்றி, அழகியல் பார்வையில் கூட இவை நாற்காலி பருமனாகவோ அல்லது கனமாகவோ தோன்றுவதைத் தடுக்கிறது. இது வடிவமைப்பில் திறந்த உணர்வை உருவாக்குகிறது, பல்வேறு அமைப்புகளுக்கு பொருந்தக்கூடிய இலகுவான மற்றும் எளிமையான தோற்றத்தை அளிக்கிறது. வடிவமைப்பில் ஏற்படுத்தும் ஒரு சிறிய மாற்றம் கூட பல நடைமுறை பயன்பாடுகளைக் கொண்டிருக்கலாம் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும்.



Click it and Unblock the Notifications
