Latest Updates
-
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது?
முகேஷ் அம்பானி 15,000 கோடி மதிப்புள்ள ஆண்டிலியாவில் ஏன் 27 ஆவது மாடியில் தங்கியுள்ளார் தெரியுமா?
Mukesh Ambani: கடந்த மாதம் தான் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவரான முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு உலகமே வியந்து பார்க்கும் வகையில் மிகவும் கோலாகலமாக திருமணத்தை நடத்தினார். இந்த திருமணம் நடப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே அதிகம் பேசப்பட்டு வந்த நிலையில், திருமணம் முடிந்த பின்னரும் அத்திருமணம் குறித்து பேசப்பட்டு தான் வருகின்றன. அந்த அளவில் முகேஷ் அம்பானி தனது மகனுக்கு பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தியுள்ளார்.
பல்லாயிரம் கோடி மதிப்பிற்கு சொந்தக்காரரான முகேஷ் அம்பானி உலகின் இரண்டாவது மிகப்பெரிய மற்றும் ஆடம்பரமான வீடான ஆண்டிலியாவில் வாழ்ந்து வருகிறார். அம்பானியின் இந்த வீட்டின் மதிப்பு ரூ.15,000 கோடி ஆகும். இந்த வீடு 27 அடுக்குமாடிக் கொண்ட மிகவும் பிரம்மாண்டமான வீடாகும். இது மும்பையில் அமைந்துள்ளது.

இவ்வளவு பெரிய வீட்டில் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் 27 ஆவது மாடியில் தான் தங்கியுள்ளார்கள் என்று தெரியுமா? சரி, இந்த 27 ஆவது மாடியில் இவர்கள் வசிக்க என்ன காரணம் என்று எப்போதாவது யோசித்துள்ளீர்களா? இக்கட்டுரையில் அதற்கான காரணம் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆண்டிலியாவில் யாரெல்லாம் தங்கியுள்ளார்கள்?
இந்த பிரம்மாண்டமான ஆண்டிலியாவின் 27 ஆவது மாடியில் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி, மற்றும் அவர்களது பிள்ளைகளான மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, அவரது மனைவி ஸ்லோகா மேத்தா மற்றும் அவர்களின் குழந்தைகள் பிருத்வி ஆகாஷ் அம்பானி மற்றும் வேதா ஆகாஷ் அம்பானியும், இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது மனைவி ராதிகா மெர்ச்சண்ட்டும் தங்கியுள்ளனர்.
ஆண்டிலியாவின் சிறப்பு
2012 ஆம் ஆண்டு தான் அம்பானி குடும்பத்தினர் இந்த ஆண்டிலியாவில் வசிக்கத் தொடங்கினர். இந்த வீடு 2008 ஆம் ஆண்டு கட்ட தொடங்கி 2010 ஆம் ஆண்டில் முடிவடைந்தது. இந்த வீட்டின் சிறப்பம்சங்கள் என்றால், இங்கு 3 ஹெலிபேடுகள் உள்ளன. மேலும் இந்த வீடு 37,000 சதுர மீட்டர் பரப்பளவில் 173 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த உயரமான கட்டிடத்தில் சுமார் 27 மாடிகள் உள்ன. அதோடு பல மாடி கார் பார்க்கிங், 9 அதிவேக லிப்ட்டுகள் மற்றும் ஊழியர்களுக்கான பிரத்யேக அறைகள் உள்ளன.
அதோடு ஆண்டிலியா வீடு 8.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தாங்கும் அளவில் கட்டப்பட்டுள்ளது. அந்த அளவு இந்த கட்டிடம் வலுவாக கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டில் ஸ்பா, சலூன், 3 பெரிய நீச்சல் குளங்கள், நடன ஸ்டூடியோக்கள், ஐஸ் க்ரீம் பார்லர், பெரிய தொங்கும் தோட்டம் ஆகியவை உள்ளன. மேலும் இந்த வீட்டை பராமரிக்க சுமார் 600 பணியாளர்கள் உள்ளனர்.
எதற்காக 27 ஆவது மாடியில் தங்கியுள்ளனர்?
அறிக்கைகளின் படி, ஆண்டிலியாவின் 27 ஆவது மாடியில் உள்ள ஒவ்வொரு அறையிலும் போதுமான சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் கிடைக்கும் என்பதற்காக நீதா அம்பானி 27 ஆவது மாடியை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த 27 ஆவது மாடிக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களைத் தவிர வேறு யாரும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் ஆண்டிலியா ஒரு குடியிருப்பு மட்டுமல்ல, முகேஷ அம்பானி மற்றும் அவர்களது குடும்பத்தினரின் அசாதாரண வாழ்க்கை முறையின் பிரதிபலிப்பு.



Click it and Unblock the Notifications