இந்த நாட்டில் உங்க கையில் இந்திய பணம் 2000 இருந்தால் நீங்க கோடீஸ்வரராம்... ஏன் தெரியுமா?

அமெரிக்க டாலர், யூரோ மற்றும் பிற முக்கிய கரன்சிகள் உலகளவில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன, இந்த கரன்சிகள்தான் உலக பொருளாதாரத்தை நிர்ணயிப்பதாகவே உள்ளன. இந்த கரன்சிகள் எப்படி சக்திவாய்ந்ததாக இருக்கிறதோ, அதேபோல உலகளவில் மிகவும் பலவீனமான கரன்சிகளும் உள்ளன.

இந்த பலவீனமான கரன்சிகள் கடுமையான பணமதிப்பிழப்புடன் போராடி வருகின்றன. உலகில் "பலவீனமான" அல்லது "குறைந்த மதிப்புள்ள" நாணயங்கள் என்று அடிக்கடி குறிப்பிடப்படும் இந்த நாணயங்கள், குறிப்பிடத்தக்க பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

Why Iranian Rial Became the Weakest Currency in the World

தற்போது உலகில் மிகவும் பலவீனமான கரன்சியாக கருதப்படுவது ஈரானின் ரியால்தான். ஈரான் உலகிலேயே மிகவும் பலவீனமான கரன்சியைக் கொண்ட நாடாக அறியப்படுகிறது. Forbes இன் அறிக்கையின்படி, மார்ச் 2024 நிலவரப்படி, ஈரானின் நாணயமான ஈரானிய ரியால் (IRR), மற்ற நாணயங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் பலவீனமாக உள்ளது.

ஈரானிய ரியால் இந்திய ரூபாயை விட சுமார் 500 மடங்கு பலவீனமாக இருப்பதாகவும், இங்கு இந்தியாவின் 1 ரூபாய் என்பது சுமார் 504 ஈரானிய ரியால்களுக்கு சமமானதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வெறும் 5,000 இந்திய ரூபாய் ஈரானில் 2524551 ரூபாயாகும், உங்களிடம் இந்திய ரூபாய் வெறும் 2000 இருந்தால் நீங்கள் ஈரானில் கோடீஸ்வரர், ஈரானில் அதன் மதிப்பு 1009820 க்கு சமம்.

ஈரான் கரன்சி பலவீனமாக காரணம் என்ன?

ஈரானின் கரன்சி இவ்வளவு பலலவீனமக இருக்க பல காரணிகள் கூறப்படுகிறது. 1979 இல் இஸ்லாமியப் புரட்சியைத் தொடர்ந்து, ஈரான் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வத்தில் சரிவைச் சந்தித்தது, இது நாணயத்தின் மதிப்பிழப்புக்கு பங்களித்தது. கூடுதலாக, ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் ஈரான்-ஈராக் போர் ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தையும். கரன்சியின் மதிப்பைக் குறைப்பதிலும் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் ஈரானின் கரன்சியை நேரடியாகப் பாதித்து மற்றும் அதன் மதிப்பை அதள பாதாளத்திற்கு தள்ளியது.

வியட்நாமும் ஈரானைப் போல பொருளாதார சவால்களை எதிர்கொள்கிறது. அதன் நாணயமான வியட்நாமிய டாங் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்தியாவின் ஒரு ரூபாயின் வியட்நாம் டாங் மதிப்பு 301 ஆகும், இது பலவீனமான நாணயம் கொண்ட நாட்டின் மற்றொரு நிகழ்வைக் குறிக்கிறது.

குவைத் தினார் (KWD), உலகளவில் அதிக மதிப்புள்ள நாணயமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இது குவைத்தின் அசைக்க முடியாத பொருளாதார வலிமையைக் குறிக்கிறது. குவைத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மை காரணமாக, குவைத் தினார் உலகின் மிக உயர்ந்த நாணயமாக இன்றும் தொடர்கிறது.

இந்த நாட்டின் பொருளாதாரம் முதன்மையாக எண்ணெய் ஏற்றுமதியை நம்பியுள்ளது, ஏனெனில் இது உலகின் மிகப்பெரிய இருப்புக்களில் ஒன்றாகும். குவைத் அங்கு பணிபுரியும் மக்கள் மீது வரி விதிக்கவில்லை என்பது மிகவும் முக்கியமானது.

இந்திய ரூபாயைப் பொறுத்தவரை இது தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தைக் கண்டு வருகிறது. இருப்பினும், இந்திய ரூபாய் வலிமையானதாகத்தான் இருந்து வருகிறது. உலக அளவில் இந்திய ரூபாய் 15 வது வலிமையானதாக உள்ளது.

Story first published: Saturday, June 29, 2024, 10:12 [IST]
Desktop Bottom Promotion