50 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட இந்தியாவின் மிகவும் வலிமையான அரசர் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா?

இந்தியா உலகின் மிகவும் தனித்துவமான நாடுகளில் ஒன்றாக இருக்க காரணம் அதன் சிறந்த வரலாறுதான், இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பல வம்சத்தை சேர்ந்த ஆட்சியாளர்கள் பல சக்திவாய்ந்த அரசுகளை உருவாக்கியுள்ளனர். இந்த சக்திவாய்ந்த ஆட்சியாளர்களின் ஆட்சிக் காலங்கள் இந்தியப் பண்பாடு, மதம், அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை நீண்ட காலம் ஆட்சி செய்த பேரரசர் யார் என்ற கேள்வி நீண்ட காலமாக இந்தியாவை சுற்றி வருகிறது. ஒரு மன்னர் ஆட்சி செய்த ஆண்டுகளின் எண்ணிக்கை, ஒரு மன்னராக அவரது வலிமை, ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தின் மீது கட்டுப்பாட்டைப் பேணுவதில் அவர் எவ்வளவு நிலையானவராக இருந்தார் போன்றவை அவர் எப்படிப்பட்ட வலிமையான அரசராக இருந்தார் என்பதை விளக்குகிறது.

Who Is India s Longest-Reigning Emperor

இந்திய வரலாற்றில் பல மன்னர்கள் நீண்ட காலத்திற்குத் தங்களை அரசர்களாக/ராணிகளாக நிலைநிறுத்திக் கொண்டாலும், அவர்களில் பெரும்பாலானோர் பல தலைமுறைகளை கடந்தும் தாக்கம் செலுத்தும் அளவிற்கு உண்மையான ஆட்சி அதிகாரத்தை நீண்ட காலம் கொண்டிருக்கவில்லை.

முகலாய வம்சம்

இந்தியாவை ஆங்கிலேயர்களுக்கு முன் பல நூற்றாண்டுகள் ஆட்சி செய்தது முகலியர்கள்தான். இந்திய வரலாற்றில் முகலாயர்களின் பங்கு என்பது மிகவும் முக்கியமானது. முகலாயர்களின் தாக்கம் இன்று வரை இந்தியாவில் நிலவுகிறது. எனவே இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த அரசர் என்று வரும்போது அது முகலாய அரசராகத்தான் இருக்கும்.

பல முகலாய அரசர்கள் இந்தியாவை ஆண்டிருந்தாலும் அதில் நீண்ட காலம் ஆட்சி செய்தவர் ஒளரங்கசீப்தான். ஒளரங்கசீப்பின் நீண்ட கால ஆட்சி இந்திய வரலாற்றை எவ்வாறு வடிவமைத்து மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒளரங்கசீப் எப்படி இந்தியாவின் நீண்ட காலம் ஆட்சிபுரிந்த அரசராக மாறினார் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஒளரங்கசீப்

ஷாஜகானின் மகனான ஒளரங்கசீப் நீண்ட வாரிசுரிமைப் போரில் தனது சகோதரர்களைத் தோற்கடித்து முகலாயப் பேரரசராகப் பதவியேற்ற பிறகு, கிட்டதட்ட ஐம்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் அறிக்கையின் படி, புவியியல்ரீதியாக இந்தியாவின் மிகப்பெரிய பரப்பளவில் இருந்த ஒரு பேரரசை அவர் நீண்ட காலம் ஆட்சி செய்தார். அந்த காலகட்டத்தில் முகலாயப் பேரரசு ஏறக்குறைய இந்தியா முழுவதையும் உள்ளடக்கியிருந்தது.

இதன் விளைவாக, ஒளரங்கசீப் தனது பிராந்திய விரிவாக்கத்திற்காக பல இராணுவப் போர்களிலும், தனது குடிமக்கள் மீது கடுமையான சட்ட ஒழுங்கை அமல்படுத்துவதிலும் ஈடுபட்டார். ஒளரங்கசீப்பின் பல்வேறு நடவடிக்கைகளால் அவர் இடைக்கால இந்தியாவின் கலாச்சாரம், அரசியல் மற்றும் மதம் ஆகியவற்றில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

ஒளரங்கசீப்பின் ஆட்சி ஏன் மிகவும் தனித்துவமானது?

இந்தியாவின் எந்தவொரு வம்சத்தையும் சேர்ந்த பேரரசரை விடவும் ஒளரங்கசீப் நீண்ட காலம் மன்னராக இருந்தார், அவர் கிட்டதட்ட 49 ஆண்டுகள் மன்னராக இருந்தார். முகலாயப் பேரரசை இந்தியாவின் அனைத்து பிராந்தியத்திலும் பரப்பியது அவர்தான். அவர் ஒரு வலுவான மையப்படுத்தப்பட்ட நிர்வாகத்தை நிறுவினார் மற்றும் சட்டங்களில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்தார். இந்திய வரலாற்றில் நீண்ட கால போரில் ஈடுபட்டதும் அவர்தான். கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்காணப் பகுதியுடன் அவர் போரிட்டு வந்தார், மேலும் அவர் பல முக்கியப் போர்களை வழிநடத்தினார்.

நீண்ட காலத்திற்கு ஆட்சி செய்த பல குறுநில மன்னர்கள் இந்திய வரலாற்றில் இருந்தாலும், பேரரசின் செல்வாக்கிலும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த ஒளரங்கசீப்பின் ஆட்சியின் பரப்பளவிலும் அவரை மிஞ்சிய அரசர் யாரும் இந்தியாவில் இல்லை. ஒளரங்கசீப் முகலாயப் பேரரசின் உச்சத்தையும், அதன் வீழ்ச்சியின் தொடக்கத்தையும் பிரதிபலிக்கிறார். அவருக்குப் பின் முகலாய பேரரசு படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியது. முகாலய வம்சம் மட்டுமின்றி இந்திய வரலாற்றிலும் ஒளரங்கசீப் மிகவும் செல்வாக்கு மிக்க ஆட்சியாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

Story first published: Sunday, December 14, 2025, 10:48 [IST]
Desktop Bottom Promotion