Latest Updates
-
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற டாப் 5 அரிசி வகைகள் இதாங்க.. எதுலாம்-ன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கிய விஷ யோகம்: அடுத்த 2 நாள் இந்த 5 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..! -
3 தக்காளியும், 4 கத்திரிக்காயும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
அக்டோபர் 24, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் வைச்சு செய்யப்போகுதாம் -
அதிசார குரு பெயர்ச்சி 2026: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கு எப்படி இருக்கும்? - ஜோதிடர் கணிப்புகள் -
குருபகவான் மகம் நட்சத்திரத்திற்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
டெல்லி ஸ்டைல் சன்னா மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பொடி வறுவல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - காரமா செமையா இருக்கும் -
மழைக்காலத்தில் பளிச்சுன்னு அழகாக இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளைப் போடுங்க.. -
கண்ணாடி போன்ற பளபளப்பான சருமம் வேணுமா? அப்ப இந்த 5 பழங்களில் ஒன்றை அடிக்கடி சாப்பிடுங்க
இந்த 4 ராசிகளில் பிறந்தவங்க அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் நண்பர்களாக இருப்பார்களாம்... உங்க நண்பர்கள் ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவரின் பிறந்த ராசி ஒருவரின் ஆளுமை மற்றும் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். நமது வாழ்க்கையில் உறவுகள் எவ்வளவு முக்கியமானதோ அதேயளவிற்கு நட்பும் முக்கியப்பங்கு வகிக்கிறது.
வாழ்க்கையில் நீடித்த நட்புறவுகளை உருவாக்கும்போது சில ராசிக்காரர்கள் இயல்பாகவே அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். துரியோதனன் மற்றும் கர்ணன் போல அவர்களின் நட்பு இறுதிமூச்சு வரை நிலைத்திருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் நட்பு விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷம் ராசிக்காரர்கள் ராசிச்சக்கரத்தின் சூப்பர்ஸ்டார்கள், மக்களை ஈர்க்கும் உள்ளார்ந்த கவர்ச்சி அவர்களிடம் உள்ளது. அவர்களின் ஆற்றல் மிக்க மற்றும் வெளிப்படைத்தன்மை அவர்களை சமூக வட்டங்களில் இயல்பான தலைவர்களாக ஆக்குகிறது.
மேஷத்துடன் நட்பு என்பது தன்னிச்சை, சாகசம் மற்றும் அசைக்க முடியாத விசுவாசம் ஆகியவற்றால் குறிக்கப்படுகிறது. உங்கள் வாழ்க்கையில் உற்சாகத்தை புகுத்தும் நண்பரை நீங்கள் தேடினால், அதற்கு நெருப்பு அறிகுறியான மேஷ ராசிக்காரர்கள்தான் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் ராசியின் சமூக பட்டாம்பூச்சிகளாக இருப்பார்கள், பல்வேறு சமூக வட்டங்களில் சிரமமின்றி செல்வதில் அவர்கள் கில்லாடிகள். அவர்களின் புத்திசாலித்தனம் மற்றும் சிறந்த தொடர்பு திறன் ஆகியவை அவர்களை சிறந்த தோழர்களாக மாற்றுகிறது.
மிதுன ராசிக்காரர்கள் உரையாடும் கலையை மதிக்கிறார்கள், அவர்கள் தங்கள் ஆர்வங்களின் அடிப்படையில் நட்பை உருவாக்குகிறார்கள் மற்றும் உரையாடலைத் தூண்டுகிறார்கள். வாழ்க்கையை சுவாரஸ்யமாக வைத்திருக்கும் நண்பரை நீங்கள் தேடுகிறீர்களானால், மிதுன ராசிக்காரர்கள் சிறந்த தேர்வாக இருப்பார்கள்.
துலாம்
அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசிக்காரர்கள் இயற்கையாகவே அமைதியை விரும்புபவர்கள். அவர்கள் இணக்கமான உறவுகளை உருவாக்க மற்றும் பராமரிக்க ஒரு உள்ளார்ந்த திறனைக் கொண்டுள்ளனர்.
துலாம் ராசிக்காரர்களின் நட்புகள் சமநிலை, ஒத்துழைப்பு மற்றும் மற்றவர்களைப் புரிந்துகொள்ளும் உண்மையான ஆசை ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்றன. உங்கள் வாழ்க்கையில் அமைதியையும் நேர்மையையும் கொண்டுவரும் ஒரு நண்பராக்க நீங்கள் விரும்பினால், ஒரு துலாம் ராசிக்காரர் அதற்கு சிறந்த தேர்வாக இருப்பார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள், எல்லையில்லா ஆர்வத்துடனும், புதிய விஷயங்களை ஆராய்வதற்கான விருப்பத்துடனும் இருக்கும் சாகச ராசிக்காரர்கள். அவர்களின் திறந்த மனது மற்றும் நம்பிக்கையான வாழ்க்கை அணுகுமுறை அவர்களை மகிழ்ச்சிகரமான நண்பர்களாக ஆக்குகிறது.
தனுசு ராசியுடனான நட்பு என்பது சிரிப்பு, புதிய அனுபவங்கள் மற்றும் சுதந்திரத்திற்கான பகிரப்பட்ட அன்பு ஆகியவை நிறைந்த பயணமாக இருக்கும். வாழ்க்கையின் சாகசங்களைத் தழுவுவதற்கு உங்களை ஊக்குவிக்கும் நண்பரை நீங்கள் தேடினால், தனுசு ராசிக்காரர்கள் அதற்கு சிறந்தவராக இருப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

