Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
இந்த 4 ராசிக்காரங்க எந்த மோசமான சூழ்நிலையில் இருந்தும் வெளியே வரக்கூடிய அளவில்லாத வலிமை உள்ளவர்களாம்!
ஒவ்வொரு ராசிக்கும் ஒரு தனிப்பட்ட குணங்கள் உண்டு. சோதனை காலத்தில் சிலர் அதனை எதிர்கொள்ள முயலாமல் முடங்கி விடுவார்கள், ஆனால் சிலர் எதிர்நீச்சல் போட்டு அந்த மோசமான சூழ்நிலையில் இருந்து வெளிவந்து விடுவார்கள். அதற்கு அவர்களின் பிறந்த ராசி முக்கிய காரணமாக இருக்கலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் புத்திக்கூர்மையும், மனவலிமையும் அவர்களை மற்ற ராசிக்காரர்களை விட வலிமையானவர்களாக மாற்றுகிறது.

தனுசு
விஷயங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் சூழ்நிலை தவறாக இருந்தாலும் தனுசு ராசிக்காரர்கள் நம்பிக்கையுடன் இருப்பார்கள். எனவே தனுசு ராசியை நம்புங்கள், அவர்களைச் சுற்றியுள்ள அனைவரும் நம்பிக்கையை இழந்துவிட்டதாகத் தோன்றினாலும், வாழ்க்கையின் பிரகாசமான பக்கத்தைப் பார்க்க தனுசு ராசிக்காரர்கள் உதவுவார்கள். நம்பிக்கையின் ஒளிரும் கதிர்களைத் தேடுவதற்கும் மற்றவர்களின் உற்சாகத்தை அதிகரிப்பதற்கும் தனுசு ராசிக்காரர்கள் எப்போதும் முயற்சிப்பார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் காளை போன்ற மனவலிமைக் கொண்டவர்கள், எந்த சூழ்நிலையையும் அவர்களால் திறம்பட கையாள முடியும். இந்த ராசிக்காரர்கள் ஒரு வலுவான சர்வைவல் திறனைக் கொண்டுள்ளார்கள் மற்றும் எப்போதும் நேர்மறையான மனநிலையில் இருப்பார்கள். நீங்கள் ரிஷப ராசிக்காரர்களை நம்பி எந்த சவாலையும் சந்திக்கலாம் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் வலிமையின் தூணாக இருக்கலாம்.
கன்னி
அனைத்து விஷயங்களிலும் பரிபூரணவாதியாக இருக்கும் கன்னி ராசிக்காரர்கள் கடினமான சூழ்நிலைகளில் மிகவும் பிரகாசமானவர்களாக இருப்பார்கள். எவ்வளவு மோசமான நெருக்கடியாக இருந்தாலும் அதிலிருந்து தப்பிக்கும் தந்திரத்தை அறிவார்கள். அண்டார்டிகா பனிமலையில் சிக்கினாலும் அதிலிருந்து தப்பிக்கும் யுக்தியை அவர்கள் அறிவார்கள். பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டறிவதன் மூலமும், எதிர்மறை சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதன் மூலமும் அவர்கள் சிக்கல்களிலிருந்து வெளிவந்து விடுவார்கள்.
மேஷம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு மன உறுதி சம்பந்தமான விஷயங்களில் கடும் போட்டியை தரக்கூடிய மற்றொரு ராசி என்றால் அது மேஷ ராசிதான். இந்த அக்கினி ராசியைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் அது மிகவும் கடினமான சூழ்நிலைகளில் தன்னைத்தானே அவர்களால் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பதுதான். மேஷ ராசிக்காரர்கள் யாரையும் நம்பி இருப்பதில்லை தன்னை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று அவர்கள் நன்கு அறிவார்கள்.



Click it and Unblock the Notifications
