Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 5 ராசிக்காரங்க தங்களோட உணர்வுகள மத்தவங்ககிட்ட ஷேர் பண்ண பயப்படுவாங்களாம்... ஏன் தெரியுமா?
நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் குணநலம் மற்றும் பண்புகள் இருக்கலாம். இது நபருக்கு நபர் வேறுபடும். பொதுவாக நமக்கு மிகவும் பிடித்த அல்லது விரும்பும் நபரிடம் நாம் நன்மை பற்றிய விஷயங்கள் அனைத்தையும் கூறுவோம். நம் மனதில் உள்ள விஷயங்களை நெருங்கியவர்களிடம் பகிர்ந்துகொள்வோம்.
ஆனால், சிலர் யாரிடமும் தங்கள் உணர்வுகளையும் தங்களை பற்றிய விஷயங்களையும் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பார்கள். மற்றவர்கள் தங்களை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற பயம் அவர்களுக்குள் இருக்கிறது. இவர்கள் தைரியம் இல்லமால், விஷயங்களை கடந்து செல்ல முனைவார்கள். யாரிடமும் தங்கள் உணர்வுகளை பகிர மாட்டார்கள்.

இந்த நபர்களை ஜோதிடத்தின் மூலம் நீங்கள் அடையாளம் காணலாம். தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மிகவும் பயப்படும் ராசிக்காரர்களை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் தங்கள் உணர்திறன் மற்றும் வலுவான உணர்ச்சி ஆழத்திற்காக அறியப்படுகிறார்கள். இருப்பினும், நிராகரிப்பு அல்லது பாதிப்பு குறித்த பயம் காரணமாக அவர்கள் தங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் எச்சரிக்கையாக இருப்பார்கள்.
இந்த ராசிக்காரர்களின் பாதுகாப்பு இயல்பு பெரும்பாலும் உணர்ச்சிகளை அவர்களுக்குள் கட்டுப்படுத்த வழிநடத்துகிறது. இதனால் அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது சவாலானது. மற்றவர்கள் முன்பு தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த இவர்கள் அதிகம் பயப்படுகிறார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் பகுப்பாய்வு செய்து நடைமுறைக்கு ஏற்ற வகையில் செயல்படுவார்கள். இவர்கள் உணர்ச்சிகளைக் காட்டிலும் தர்க்கத்தை நம்புவதை விரும்புகிறார்கள். அதிகமாகச் சிந்திக்கும் போக்கு மற்றும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுமோ என்ற பயம் காரணமாக இந்த ராசிக்காரர்கள் தங்கள் உணர்வுகளை மற்றவர்கள் முன்பு ஒப்புக்கொள்ளத் தயங்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தங்களின் இயல்பான பண்பு மற்றும் சுய ஒழுக்கத்திற்காக அறியப்படுகிறார்கள். உறவுகளை கவனமாக அணுகுவதால் அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமப்படலாம். மகர ராசிக்காரர்கள் நிராகரிப்புக்கு அஞ்சுகிறார்கள் மற்றும் அவர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முன் சூழ்நிலைகளை கவனமாக மதிப்பிட விரும்புகிறார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சுதந்திரம் மற்றும் அறிவார்ந்த தொடர்பை மதிக்கிறார்கள். அவர்கள் தங்கள் உணர்வுகளை மற்றவர்களுக்கு முன்பு ஒப்புக்கொள்ளத் தயங்கலாம். ஏனென்றால் அவர்கள் தங்கள் சுதந்திர உணர்வை இழந்துவிடுவார்கள் அல்லது உணர்ச்சிபூர்வமான கடமைகளால் பிணைக்கப்படுவார்கள் என்று பயப்படுகிறார்கள்.
இந்த ராசிக்காரர்கள் பெரும்பாலும் தங்கள் தனித்துவத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள் மற்றும் ஒரு நபரின் முன் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்க அவர்கள் விரும்பவில்லை.
மீனம்
மீன ராசிக்காரர்கள் மிகுந்த இரக்கமும் கருணையும் கொண்டவர்கள். இருப்பினும், அவர்கள் புண்படுத்தப்படுவார்கள் அல்லது நிராகரிக்கப்படுவார்கள் என்ற பயம் காரணமாக இந்த ராசிக்காரர்கள் தங்கள் உணர்வுகளை ஒப்புக்கொள்ள பயப்படலாம். மீன ராசிக்காரர்கள் மற்றவர்களின் உணர்ச்சிகளுடன் ஆழமாக இணைந்திருக்கலாம். மேலும் இந்த உணர்திறன் அவர்கள் தங்கள் சொந்த உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்தத் தயங்கலாம்.
இதர ராசிக்காரர்கள்
மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ஆகிய ராசிக்காரர்கள் தங்களைப் பற்றி மிகவும் நம்பிக்கையுடன் உள்ளன. அவர்கள் தங்கள் உணர்வுகளை மிக எளிதாக வெளிப்படுத்த முடியும். மற்றவர்களின் நிராகரிப்புக்கு அவர்கள் பயப்பட மாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் உணர்வுகளை எளிதில் எல்லாரிடமும் வெளிப்படுத்துவார்கள்



Click it and Unblock the Notifications












