Latest Updates
-
1 கப் ரவையும், 1/2 கப் அவலும் இருந்தா.. காலையில் 10 நிமிடத்தில் இந்த டிபன் காம்போவை செய்யுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்.. -
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ
இந்த கிராமம்தான் இந்தியாவின் பேய்களின் கிராமமாம்... இது எங்க இருக்கு தெரியுமா? நீங்க போவீங்களா இங்க?
நாம் மக்கள் சூழ்ந்த கிராமங்களிலும், நகரங்களிலும் வசித்து வருகிறோம், ஆனால் இந்த சூழ்நிலையிலும் இரவில் நாம் தனியாக இருக்கும் போதோ அல்லது இரவில் சிறிய சத்தம் கேட்டாலோ நாம் நிச்சயம் பயப்படுவோம். ஆனால் காலியான வீடுகள், வெறிச்சோடிய தெருக்கள் மற்றும் மனித நடமாட்டமே இல்லாத ஒரு இடத்தில் வசிப்பதைப் பற்றி கற்பனை செய்து பாருங்கள்.
நினைக்கவே பயமாக இருக்கிறதா? ஆனால் உண்மையில் அப்படி ஒரு மர்மமான இடம் நம் இந்தியாவிலேயே உள்ளது. அதுதான் குல்தாரா கிராமம், இந்த கிராமம் "இந்தியாவின் பேய் கிராமம்" என்று அழைக்கப்படுகிறது. குல்தாரா கிராமத்திற்கு இந்த பெயர் வரக்காரணம் அதற்கு பின்னால் உள்ள மர்மம்தான். குல்தாரா கிராமத்திற்கு பின்னால் உள்ள பயமுறுத்தும் மர்மம் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

குல்தாரா கிராமத்தின் கதை
ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மருக்கு அருகில் உள்ள ஒரு கைவிடப்பட்ட கிராமம்தான் குல்தாரா. இது ஒரு காலத்தில் பாலிவால் பிராமணர்களின் குடியிருப்பாக இருந்தது, அவர்கள் வணிகத்தில் சிறந்து விளங்கினார்கள். இருப்பினும், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, விசித்திரமான சம்பவம் நடந்தது. குல்தாராவில் இருந்த அனைத்த மக்களும், அருகிலுள்ள கிராமங்களுடன் சேர்ந்து எந்த தடயமும் இல்லாமல் ஒரே இரவில் மர்மமான முறையில் காணாமல் போனார்கள், .
குல்தாராவின் இந்த மர்மத்திற்குப் பின்னால் உள்ள மிகவும் பிரபலமான கதை, உள்ளூர் ஆட்சியாளரான சலீம் சிங் பற்றியது, அவர் நல்ல ஆட்சியாளராக அறியப்படவில்லை. அவர் ஒரு பாலிவால் பிராமணரின் அழகான மகளைக் காதலித்து, அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாக அந்த கதை கூறுகிறது. கிராமவாசிகள் அதை மறுத்து, அந்த பெண்ணை வேறொருவருக்கு ஏற்கனவே வாக்குறுதி அளித்ததாகக் கூறியதாகவும், அதனால் சலீம் சிங் கோபமடைந்து, அவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால் கிராமத்தையே அழிப்பதாக மிரட்டினார்.
சலீம் சிங்க்-ன் மிரட்டலுக்கு அடிபணிவதற்குப் பதிலாக, கிராம மக்கள் நம்பமுடியாத ஒரு முடிவை எடுத்தனர். மாலை வந்ததும், அவர்கள் எல்லாவற்றையும் மூட்டை கட்டிக்கொண்டு காணாமல் போனார்கள். ஆனால் அது மட்டுமல்ல, வெளியேறுவதற்கு முன்பு, அவர்கள் அந்த நிலத்தை சபித்ததாகக் கூறப்படுகிறது. அந்த கிராமத்தில் ஒருபோதும் மக்கள் மீண்டும் வாழ முடியாது என்று சபித்ததாகக் கூறப்படுகிறது. அவர்களின் சாபத்தின் படி, கிராம மக்கள் வெளியேறிய பிறகு, குல்தாரா அன்றிலிருந்து காலியாகத்தான் உள்ளது.
இங்கு பயமுறுத்துவது என்ன?
இந்த கதை கேட்பதற்கு சுவாரஸ்யமானதாக இருந்தாலும், கிராமத்தின் அமானுஷ்ய சூழல்தான் அதை மிகவும் சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது. அங்கிருந்த வீடுகள் இன்னும் அப்படியே உள்ளன, ஆனால் எல்லாமே காலப்போக்கில் உறைந்தது போல இருக்கிறது. அங்கு மக்கள் வாழ்வதற்கான என்ற அறிகுறிகளும் இல்லை, தாவரங்களும் இல்லை, விலங்குகளும் இல்லை, ஒரு பெரும் அமைதி மட்டுமே நிலவுகிறது.
சிலர் இங்கு காற்று ஒரு விசித்திரமான சக்தியுடன் அடர்த்தியாக இருப்பதாகக் கூறுகின்றனர், மேலும் சிலர் இரவுகளில் மக்களின் குரல்கள் கேட்பதாகக் கூட தெரிவிக்கின்றனர். ஆனால் உண்மையான மர்மம் என்னவென்றால், பாலைவனமாக்கப்பட்ட போதிலும், குல்தாராவின் கல் கட்டமைப்புகள் இன்னும் வலுவாகவே நிற்கின்றன.
பேய் நடமாட்டம் உள்ளதா?
பக்கத்து கிராமத்தினரும், பார்வையாளர்களும் கைவிடப்பட்ட கிராமத்தில் விசித்திரமான ஒலிகளைக் கேட்டதாகவும், நிழல்கள் நகர்வதைப் பார்த்ததாகவும் கூறியுள்ளனர். சிலர், பழைய கிராமவாசிகளின் ஆவிகள் இன்னும் தெருக்களில் சுற்றித் திரிவதாகவும், இரவில் நீங்கள் அங்கு சென்றால், ஆவிகளைப் பார்க்கலாம் என்றும் கூறுகிறார்கள். இந்த பயங்கரமான அதிர்வு கிராமத்தின் வெறுமை மற்றும் அது ஏன் கைவிடப்பட்டது என்பதைச் சுற்றியுள்ள மர்மத்திலிருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த பேய் கிராமத்திற்கு ஏன் செல்ல வேண்டும்?
இந்த கிராமத்தை சுற்றி நிறைய மர்மங்கள் இருந்தாலும், குல்தாரா உண்மையில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பிரபலமான இடமாக மாறிவிட்டது. இது பேயைப் பார்க்க விரும்புவோருக்கு மட்டுமல்ல, வரலாற்று ஆர்வலர்களுக்கும், ராஜஸ்தானின் தனித்துவமான கலாச்சாரத்தைப் பற்றி ஆர்வமுள்ளவர்க்ளுக்கும் ஏற்ற இடமாக உள்ளது. பாலிவால் பிராமணர்களின் கைவினைத்திறனை தெரிந்து கொள்ளவும் பழைய கட்டிடங்களைப் பார்க்கவும், ஒரு காலத்தில் அங்கு வாழ்ந்த சமூகத்தின் மரபுகளைப் பற்றி அறியவும் மக்கள் வருகிறார்கள்.
ஒருவேளை நீங்கள் திகில் அனுபவத்தை விரும்பினால், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு குல்தாராவை பார்வையிட வேண்டும. சூரியன் மறையும் போது மற்றும் நீண்ட நிழல்கள் கிராமத்தில் நீண்டு செல்லும்போது, அந்த இடம் ஏன் இந்தியாவின் பேய்களின் கிராமம் என்று அழைக்கப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications
