Latest Updates
-
இந்த 4 நபர்களை தூக்கத்திலிருந்து எழுப்புவது உங்களை ஆபத்தில் சிக்க வைக்குமாம் - சாணக்கிய தந்திரம் -
ஜூலை 27-ல் சனி பகவான் வக்ரமடைவதால் டிசம்பர் வரை இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காயும், 2 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 13 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கேட்ட வரம் கிடைக்கும் அதிர்ஷ்ட நாளாக இருக்குமாம் -
நாளை நடக்கும் எம நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தலைவிதி மாறும், செல்வம் பெருகும்.. -
உங்களுக்கு வெற்றி, பணம் குவியணுமா? அப்ப சாணக்கியர் கூறும் இந்த 4 காலை பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
முட்டையும், குடைமிளகாயும் இருந்தா.. ஒருடைம் இத ட்ரை பண்ணுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
ஜூலை 15-ல் குரு அஸ்தமனமாவதால் இந்த 5 ராசிக்கு பண மழை பொழியும், பதவி உயர்வு கிட்டும்! -
சிக்கன் மலாய் கபாப் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
எக்காரணம் கொண்டும் இந்த நாட்களில் கடன் வாங்கவோ, கொடுக்கவோ செஞ்சுடாதீங்க.. இல்லன்னா கஷ்டப்படுவீங்க...
நம் அனைவருக்குமே எப்போதும் பணத் தேவைகள் இருந்தவாறு இருக்கும். என்ன தான் பணம் சம்பாதித்தாலும், நாம் சம்பாதிக்கும் பணம் போதுமானதாக இருக்காது. இதனால் நமது தேவைகளை பூர்த்தி செய்ய மற்றவர்களிடம் கடன் வாங்குவோம்.
அதுவும் தற்போது கிரெடிட் கார்டு என்ற ஒன்று பலரை வாழ்நாள் முழுவதும் கடனாளியாக இருக்க வைக்கிறது. இது தவிர நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் கடன் வாங்கி சமாளித்து வருவோம்.

ஆனால் ஜோதிடத்தின் படி, ஒருவரிடம் கடன் வாங்குவதாக இருக்கட்டும் அல்லது கடன் கொடுப்பதாக இருக்கட்டும், அதை தவறான நாட்களில் செய்தால், அதன் விளைவாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்காது மற்றும் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்படக்கூடும்.
எனவே நீங்கள் அடிக்கடி கடன் வாங்கி வாழ்க்கை ஓட்டுபவரானால், ஜோதிடத்தின் படி கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்களில் மட்டும் கடன் வாங்கிவிடாதீர்கள் அல்லது கடன் கொடுத்துவிடாதீர்கள்.
செவ்வாய் கிழமை
செவ்வாய் கிழமைகளில் கடன் கொடுக்கவோ அல்லது வாங்கவோ செய்யக்கூடாது. ஜோதிடத்தின் படி, இந்த கிழமையில் கடன் கொடுத்தால், அந்த பணம் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு குறையும். அதே சமயம் கடன் வாங்கினால், கடன் வாங்கிய பணம் எதற்கும் உதவாமல் தண்டமாக செலவாகும். எனவே இந்த நாளில் மறந்தும் கடன் வாங்கவோ, கொடுக்கவோ செய்யாதீர்கள்.
வியாழக்கிழமை
வியாழக்கிழமையும் கடன் கொடுக்கவோ, வாங்கவோ உகந்த நாள் அல்ல. இந்நாளில் கடன் கொடுத்தால், அந்த பணம் திரும்ப கிடைக்காது. அதேப் போல் கடன் வாங்கினால், அந்த பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்படக்கூடும். எனவே வார நாட்களிலேயே வியாழக்கிழமைகளில் மட்டும் கடன் வாங்கவோ, கொடுக்கவோ செய்யாதீர்கள். இல்லாவிட்டால் நஷ்டம் தான் மிஞ்சும்.
சனிக்கிழமை
சனிக்கிழமைகளில் கூட கடன் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது. இல்லாவிட்டால் இழப்பை சந்திக்க நேரிடும் ஜோதிடத்தின் படி, சனிக்கிழமைகளில் கடன் கொடுத்தால், அந்த பணம் திரும்ப வராது. மறுபுறம் கடன் வாங்கினால், அந்த பணத்தை திரும்ப செலுத்தவே முடியாது. எனவே இந்த நாளிலும் பணத்தை யாரிடம் வாங்கவோ, கொடுக்கவோ செய்யாதீர்கள்.
எந்த நாளில் பணத்தை கடன் கொடுக்கலாம் மற்றும் வாங்கலாம்?
உங்களுக்கு பணத் தேவை இருந்து கடன் வாங்குவதாக இருந்தால், ஜோதிடத்தின் படி, அந்த பணத்தை திங்கள், புதன் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் செய்யலாம். இதனால் பணத்தை விரைவில் திரும்ப செலுத்துவதோடு, நிதி நிலையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும்.
அமாவாசை நாட்களில் கூடாது
எவ்வளவு நெருங்கிய நண்பராகவோ அல்லது உறவினராக இருந்தாலும், அமாவாசை நாளில் கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது. இல்லாவிடடால், அச்செயலால் வாழ்நாள் முழுவதும் பணப் பிரச்சனையில் சிக்கக்கூடும் மற்றும் பணம் கையில் நிற்காது.
மாலை வேளையில் கொடுக்கக்கூடாது
மாலை வேளையில், அதுவும் சூரியன் அஸ்தமனமான பின், எக்காரணம் கொண்டும் வீட்டில் இருந்து மற்றவருக்கு பணத்தை கடனாக கொடுப்பதையோ அல்லது கடன் வாங்குவதையோ செய்யக்கூடாது. அப்படி செய்தால், கடன் இன்னும் அதிகமாவதோடு, கையில் பணம் சேரவே சேராது. மாலை வேளையில் பணத்தை மட்டுமின்றி, பால், தயிர், எண்ணெய், உப்பு போன்றவற்றையும் மற்றவருக்கு கொடுக்கக்கூடாது.



Click it and Unblock the Notifications