Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
விநாயகர் சதுர்த்தி 2024 எப்போது? வீட்டில் விநாயகர் சிலையை வைக்கும் போது கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள்..!
விநாயகர் பொதுவாகவே மகிழ்ச்சி மற்றும் செழிப்பை அளிப்பவர் என்று கூறப்படுகிறது. அவர் தம் பக்தர்களின் அனைத்துத் தடைகளையும் நீக்கி காத்து நிற்பவர்... எனவே, விநாயகப் பெருமானின் சிலையை வீட்டில் வைத்திருப்பது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் 2024 விநாயகர் சதுர்த்தி எப்போது? பூஜைக்கான உகந்த நேரம் எது? வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் எந்த மாதிரியான விநாயகர் சிலை வைக்க வேண்டும்? இதற்கும் சில விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. எந்த வகையான விநாயகப் பெருமானின் சிலை மங்களகரமானதாகக் கருதப்படுகிறது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

விநாயகர் சதுர்த்தி பொதுவாக கிரிகோரியன் நாட்காட்டியின்படி ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் வரும். 2024 ஆம் ஆண்டில், விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 6 ஆம் தேதி, மதியம் 03:01 மணிக்குத் தொடங்கி செப்டம்பர் 17 ஆம் தேதி செவ்வாய்கிழமை மாலை 05:37 மணிக்கு முடிவடைகிறது.. கணேஷ் விசர்ஜன் 2024 செப்டம்பர் 17 செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்டுள்ளது.. மத்தியான விநாயகர் பூஜை முஹுரத் , மிகவும் சாதகமான காலம், காலை 11:03 மணிக்கு தொடங்கி மதியம் 01:34 வரை 2 மணி நேரம் 31 நிமிடங்கள் வரை நீடிக்கும்.
பூஜைக்கான தேதி மற்றும் நேரம்
விநாயக சதுர்த்தி 2024: தொடங்கும் தேதி செப்டம்பர் 7 (சனிக்கிழமை)
விநாயக சதுர்த்தி 2024: பூஜை திதி ஆரம்பம்: செப்டம்பர் 6 (வெள்ளிக்கிழமை) மாலை 3:01 மணிக்கு
விநாயக சதுர்த்தி 2024: பூஜை திதி முடிவு: செப்டம்பர் 7 மாலை 5:37 மணிக்கு
விநாயக சதுர்த்தி 2024: பூஜை முஹுரத் செப்டம்பர் 7 காலை 11:03 முதல் மதியம் 01:34 வரை
விநாயக சதுர்த்தி 2024: முடிவு தேதி/விசர்ஜன்: செப்டம்பர் 17 (செவ்வாய்)
விநாயக சதுர்த்தியின் முக்கியத்துவம்:
விநாயக சதுர்த்தி இந்துக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பக்தர்கள் இந்த நாளை கொண்டாடுவார்கள்.. உண்ணாவிரதத்தை மேற்கொள்வது, விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்தல், முயற்சிகளில் வெற்றி பெறவும், தடைகள் நீங்கவும் ஆசிகளை பெறுவார்கள்.. கணபதி என்றும் அழைக்கப்படும் விநாயகர், அவருடைய ஞானம், சக்தி மற்றும் மங்களகரமான தன்மைக்காக வணங்கப்படுகிறார். விநாயக சதுர்த்தி அன்று மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்தால் வாழ்வில் செழிப்பு, மகிழ்ச்சி, அறிவு ஆகியவை கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
வீட்டில் விநாயகர் சிலையை வைக்கும் போது கண்டிப்பாக செய்ய வேண்டியவைகள்..
1. வீட்டின் பிரதான நுழைவாயிலில் விநாயகப் பெருமானின் சிலை வைப்பது நல்லது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, வெள்ளெருக்கு விநாயகர் சிலையை வீட்டில் வைக்க வேண்டும். அவரை தினமும் வழிபட வேண்டும். அத்தகைய சிலையை வீட்டில் வைப்பதினால் செல்வத்திற்கு பஞ்சம் இருக்காது.
2. வாஸ்து சாஸ்திரத்தில் படிகமானது சிறந்த உலோகமாகக் கருதப்படுகிறது. நம் வீட்டில் ஸ்படிகத்தால் ஆன விநாயகர் சிலையை நிறுவினால் அது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. விநாயகப் பெருமானுடன் ஸ்படிக லட்சுமியை வழிபட்டால் செல்வமும், நல்ல அதிர்ஷ்டமும் உண்டாகும்.
3. இது தவிர, வீட்டில் விநாயகர் சிலையை வைக்கும் போதெல்லாம், அதை எப்போதும் உட்கார்ந்த நிலையில் வைக்க வேண்டும். விநாயகர் சிலையை வீட்டின் கதவுக்கு வெளியே வைக்கக் கூடாது.
4. அப்படி நின்ற கோலத்தில் விநாயகர் சிலையை நிறுவ விரும்பினால், அதை உங்கள் அலுவலகத்தில்தான் வைக்க வேண்டும்.
5. விநாயகர் சிலை வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. முன்னேற்றத்திற்கு, வீட்டில் வெண்கல நிற சிலையை நிறுவ வேண்டும் அல்லது வெள்ளை நிற சிலை வைத்திருப்பதும் முன்னேற்றத்திற்கு மிகவும் நல்லது. இருப்பினும், வீட்டின் வாசலில் அத்தகைய சிலையை நிறுவக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications