Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
உங்க தலைமுடி நீளத்தை வெச்சே.. உங்களோட குணாதிசயத்தை சரியா சொல்ல முடியும் தெரியுமா?
கூந்தல் அழகு என்பது ஒவ்வொருவருக்கும் தனிச் சிறப்பானது. கூந்தல் அழகாக இருந்தால் அது எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும். உங்கள் கூந்தல் குட்டையாக இருந்தால் கூட ஆரோக்கியமாக பளபளப்பாக இருந்தால் போதும் எளிதாக எல்லோரையும் ஈர்த்து விடும்.
உங்கள் கூந்தலின் நீளத்தை கொண்டு உங்களுடைய ஆளுமையை கண்டறிய முடியும். உங்களின் கூந்தலின் உங்களுடைய பர்னாசிலிட்டியை பிரதிபலிக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா. குட்டையான கூந்தலை கொண்டவர்கள் நம்பிக்கையானவர்களாக இருப்பார்களாம்.

இதுவே நீளமான கூந்தல் உடையவர்களிடம் முடியாது என்ற வார்த்தையே கிடையாதாம். எதையும் நடத்திக் காட்ட முடியும் என்ற நம்பிக்கை உடையவர்களாக இருப்பார்களாம். சரி வாங்க, உங்க கூந்தலுக்கு என்ன பர்னாசிலிட்டி என்பதைப் பற்றி நாம் காண்போம்.
குட்டையான கூந்தல் அல்லது பிக்சி கட்
பொதுவாக இப்ப இருக்கும் பெண்களுக்கு குட்டையான கூந்தல் தான் மிகவும் பிடிக்கிறது. இந்த மாதிரியான பிக்சி கட்டை பராமரிப்பது எளிது மேலும் கூந்தல் குட்டையாக இருந்தால் எளிதாக சிகை அலங்காரம் பண்ணிக்கலாம். பல மணி நேரம் ஷாம்பு போட வேண்டும் என்ற தொல்லை கிடையாது. பராமரிப்பது மிகவும் எளிது. எனவே பெரும்பாலான மாடர்ன் பெண்கள் இந்த பிக்சி கட்டையே விரும்புகின்றனர்.
இப்படி குட்டையான கூந்தல் உடையவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியான பர்னாசிலிட்டியாக இருப்பார்களாம். இவர்கள் எப்பொழுதும் ஜாலியான நபராகவும், நண்பர்களுடன் கூட்டாகவும், சுறுசுறுப்பாகவும், நம்பிக்கையுடன் இருக்கும் நபராக இருப்பார்களாம். குட்டையான கூந்தல் உடையவர்கள் அவர்களின் புத்திசாலித்தனத்தை எப்பொழுதும் காட்ட விரும்புகிறார்கள். சுயக் கட்டுப்பாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
தோள்பட்டைக்கு மேல் முடி நீளம் அல்லது பாப் கட்
பாப் கட் எல்லோருக்கும் விருப்பமான ஒரு ஹேர் கட் ஆகும். இந்த பாப் கட் எப்பொழுதுமே உங்களுக்கு ஸ்டைலிஷ் லுக்கை கொடுக்கும். பாப் கட் வைத்திருப்பவரின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்றால் இவர்கள் நேர்மையானவர்களாக நடந்து கொள்வார்களாம். உங்கள் வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே சரியான சமநிலையை ஏற்படுத்துவதில் நீங்கள் நல்லவர்களாக இருப்பீர்களாம். நீங்கள் கவனமாக இருக்கும் நபராக இருப்பீர்கள். புதிய விஷயங்களை முயற்சிப்பது உங்களுக்கு பிடிக்கும்.
தோள்பட்டை வரை முடி நீளம் அல்லது லோப்
இந்த ஹேர் கட் நடுத்தர நீளமான முடியை கொண்டது. இந்த ஹேர் கட் எல்லா முகத்திற்கும் ஏற்ற ஒன்றாக இருக்கும். முடி நடுத்தர அளவில் இருப்பதால் உங்களால் எளிதாக ஹேர் ஸ்டைலிங் செய்ய முடியும். நீங்கள் ஸ்டெப் கட்டிங் கூட செய்ய முடியும். தோள்பட்டை வரை முடி நீளம் உடையவர்கள் பெண்மையின் அழகை வெளிப்படுத்துகிறார்கள். எப்பொழுதுமே சிறந்த தோற்றத்துடன் இருப்பீர்கள்.
நீங்கள் எப்பொழுதுமே புதிய சவாலுக்கு தயாராக இருப்பீர்களாம். சிரமமின்றி எதையும் சந்தித்து அதில் வெற்றியும் காண்பீர்களாம். நீங்கள் மற்றவருடன் ஒரு நீண்ட கால உறவை பேணுவீர்கள். உறவை தக்க வைக்க வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டவராக இருப்பீர்கள். உங்களின் இந்த இயல்பே மற்றவர்களை உங்களுடன் நண்பர்களாக பழக வைக்கும்.
மிக நீளமான கூந்தல்
நீண்ட முடி பராமரிப்பு என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. நீண்ட கூந்தலை பராமரிக்க நினைப்பவர்கள் அதைச் சரியாக செய்ய வேண்டும். நீண்ட கூந்தலை அலசுவது என்பது அதிக நேரம் எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. நீண்ட கூந்தலை பராமரிக்கிறவர்களுக்கு பொறுமை அதிகமாக இருக்கும். ஏனெனில் சீக்கிரமாகவே சிக்கல்கள் விழ வாய்ப்பு உள்ளது. நீண்ட கூந்தல் உடையவர்களுக்கு கூந்தல் உதிர்தல் பிரச்சினைகளும் ஏற்படுகிறது.
இருப்பினும் நீண்ட கூந்தல் உடையவர்கள் அதை பொறுமையாக சமாளிப்பவராக இருக்கிறார்கள். நீண்ட கூந்தலை பராமரிப்பவர்கள் காதல் உறவில் இணக்கமாக இருப்பார்கள். எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இருப்பார்கள். சாத்தியமற்றது என்ற வார்த்தையே அவர்களது அகராதியில் கிடையாது. நீண்ட கூந்தல் உடையவர்கள் ஒரு விஷயத்தை முடிக்க கூடுதல் முயற்சிகளை எடுப்பார்கள். நீண்ட கூந்தலுக்கு விடாமுயற்சி என்று வைத்துக் கொள்ளலாம். நீங்கள் விரும்பியதை அடைவதை எதுவும் தடுக்க முடியாது.



Click it and Unblock the Notifications