Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நினைக்கிறீங்களா? முழு விவரம் இதோ!
Wayanad Landslides: கேரளாவில் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கும் வேளையில், வயநாட்டில் திடீரென்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 159-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தங்கள் வீடு, உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடியை அடுத்த சூரல்மலை பகுதியில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அடுத்தடுத்து 2 நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதனால் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெளேரிமலை, பொத்துகலு ஆகிய கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது என்பதை விட புதைந்துவிட்டன என்றே கூறலாம்.

முக்கியமாக இந்த நிலச்சரிவானது அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் நள்ளிரவில் ஏற்பட்டதால், அதை உணரக்கூட முடியாமல் மண்ணில் பலர் புதைந்து இறந்துவிட்டனர்.இதை அறிந்ததும் மீட்டு படையினர் முழு வீச்சில் இறங்கி அங்குள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சேர்த்துள்ளனர். இருப்பினும் கனமழையும் பெய்து வருவதால் மீட்பு பணியில் பெரும் சிரமத்தை சந்திப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கேரளாவிற்கு உதவுவதற்கு தமிழ்நாட்டில் இருந்து ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுவும் வயநாட்டிற்கு விரைந்து மீட்டு பணிகளில் இறங்கியுள்ளது. மேலும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வயநாடு நிவாரண பணிக்காக ரூ.5 கோடி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார். அதோடு 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையும் பெங்களூருவில் இருந்து வயநாட்டிற்கு விரைந்து மீட்டு பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும் கோவையில் உள்ள சூலூர் விமானப்படை மையத்தில் இருந்து 2 விமானப்படை ஹெலிகாப்டர்களும் மீட்பு பணிகளுக்கு உதவ அனுப்பப்பட்டுள்ளன.
மேலும் பல கட்சிகளும், தன்னார்வ அமைப்புக்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு வேண்டிய உணவு, உடை, மருந்து உள்ளிட்ட பொருட்களை அனுப்பும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக பிரபலமான மலையாள நடிகை நிகிலா விமல், DYFI என்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய பொருட்களை சேகரித்து வரும் மையத்தில் தன்னார்வளராக பணிபுரிந்து வருகிறார். இதை DYFI தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்தது. தற்போது அது வைரலாக பரவி வருகிறது. சமூக வலைதளத்தில் இருந்து வெறும் போஸ்ட் மூலம் குரல் கொடுக்காமல், களத்தில் இறங்கி வேலை பார்க்கும் இவரது செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 2024 ஜூலை 30 ஆம் தேதி வயநாடு நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தால் இழந்த உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களின் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கவும், இடம்பெயர்ந்தவர்களுக்கு மறுவாழ்வு வழங்கவும், அவர்களின் வாழ்விடங்களை புனரமைக்கவும் முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு (CMDRF) பங்களிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவலாம்.
நீங்களும் இந்த வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நினைத்தால், தனிநபராகவோ அல்லது குழுவாகவோ நன்கொடையை வழங்கி உதவலாம். அதற்கு இந்த முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதி இணையதள பக்கத்திற்கு சென்று, அங்கு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பி அனுப்பலாம்.
கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் ஹெல்ப்லைன் எண்கள்
வயநாடு நிலச்சரிவு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக பல கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டுள்ளன.
* சுகாதார அமைச்சர் அலுவலக கட்டுப்பாட்டு அறை: 8075401745
* மாநில கட்டுப்பாட்டு அறை: 9995220557, 9037277026, 9447732827
* NHM உதவி எண்: 8086010833, 9656938689
இது தவிர, சூரல்மலையில் தாலுகா அளவிலான கட்டுப்பாட்டு அறைகளும் செயல்படுகிறது. அவற்றின் எண்கள் பின்வருமாறு:
* துணை ஆட்சியர்: 8547616025
* தாசில்தார், வைத்திரி: 8547616601
* கல்பெட்டா கூட்டு பிடிஓ அலுவலகம்: 9961289892
* உதவி மோட்டார் வாகன ஆய்வாளர்: 9383405093
* தீயணைப்பு படை உதவி நிலைய அலுவலர்: 9497920271
* வைத்திரி தாலுகா அலுவலக துணை தாசில்தார்: 9447350688



Click it and Unblock the Notifications