Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை.. இனி இப்படி செய்தால் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியாதாம்..!
உலகப்பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்தாலும் கோடை விடுமுறை மாதங்களான ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் நாட்டின் மூலை முடுக்ககளிலிருந்தும் திருமலைக்கு வருகை தருவார்கள்..
அதனால் திருமலை முழுக்கவும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இப்போது கோடை விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவிற்கு இருந்து வருகிறது. திருப்பதியில் அளவுக்கு அதிகமாக கூட்டம் இருப்பதால் ஏழுமலையானை பார்க்க பல மணி நேரம் ஆவதாக பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில் ஏழுமலையானை சிலர் தரிசனம் செய்ய முடியாமலும் போகிறது.. சில காரணங்களால் தினமும் நூற்றுக்கணக்கானோர் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். சமீபத்தில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த பக்தர்கள் கூட சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அவர்களை கோவில் ஊழியர்கள் உள்ளேக் கூட செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏன் அனுமதிக்கப்படவில்லை? காரணம் என்ன? ஏழுமலையானை தரிசிக்க செல்லும் போது என்ன செய்யக்கூடாது? என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
உண்மையில் நடந்தது என்னவென்றால், விசாகப்பட்டினத்தை சேர்ந்த பக்தர்களில் ஒருவரான ஸ்ரீனிவாஸ், தனது நண்பர் மூலம் ரகுசாய் தேஜா என்ற புரோக்கரை அணுகினார். அந்த புரோக்கர் 4 விஐபி பிரேக் டிக்கெட்களுக்கு ரூ.17,000 வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டார். அதற்கு ஸ்ரீனிவாஸ் ஏழுமலையானை எப்படியும் தரிசிக்க வேண்டும் என்று அந்த பணத்தை ஓகே சொல்லி அனுப்பியும் வைத்தார். அதன் பிறகு விஐபி பிரேக் டிக்கெட்டுகளை ஸ்ரீநிவாஸ் பெற்றுக்கொண்டார்.
அதன் பிறகு தனது நணர்களுடன் தரிசனத்திற்கு புறப்பட்டார். வைகுந்தம் வரிசை வளாகத்தில் உள்ள டிக்கெட் ஸ்கேனிங் பகுதிக்கு சென்றதும்.. ஸ்ரீநிவாஸ்.. அவர்களின் டிக்கெட்டுகளை கொடுத்தார். அவை ஸ்கேன் செய்யப்படவில்லை. கோவில் ஊழியர்கள் மீண்டும் முயற்சித்தும் ஸ்கேன் தோல்வியடைந்தது. உடனே தேவஸ்தானத்தின் ஊழியர்கள் டிக்கெட் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது என்று கூறி டிக்கெட்டுகளை கவனமாக கவனித்தனர்.
அப்போதுதான் விஷயம் தெரிந்தது. பழைய விஐபி பிரேக் டிக்கெட்டுகளின் பெயர் மற்றும் தேதியை மார்பிங் செய்து, ஸ்ரீனிவாஸுக்கு இதுபோன்ற போலி டிக்கெட்டுகளை புரோக்கர் கொடுத்துள்ளார் என்று.... தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலென்ஸ் பிரிவை அணுகினர். திருமலை ஒன் டவுனில் வழக்குப் பதிவு செய்த தேவஸ்தானத்தின் விஜிலென்ஸ் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு அதிகாரிகள், பக்தர்கள் யாரும் புரோக்கர்களை நாட வேண்டாம் என்றும் ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். எனவே திருப்பதி செல்லும் பக்தர்கள் அதற்கான டிக்கெட்களை தேவஸ்தானத்தின் அதிகார பூர்வ தளமான ttdevasthanams.ap.gov.in என்ற இணையத்தள முகவரியில் டிக்கெட் புக் செய்துக் கொள்ளலாம் அல்லது நேரடியாக தேவஸ்தானத்தில் வந்து வாங்கிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதை தவிர நடுவில் புரோகர்கள் என்று சொல்லி வருபவர்களையும் தேவஸ்தான ஊழியர் என்று சொல்லி வருபவர்களையும் நம்பி டிக்கெட் வங்கி ஏமாற வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.



Click it and Unblock the Notifications