Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
50 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் விபரீத ராஜயோகம்: இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Vipreet Rajyoga: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கம் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கிரகங்களின் சேர்க்கை மற்றும் அதன் இருப்பிடத்தைப் பொறுத்து யோகங்கள் உருவாகும். அந்த யோகங்கள் குறிப்பிட்ட சக்தியைக் கொண்டிருக்கும். இதனால் அந்த யோகங்களின் தாக்கம் ஒவ்வொரு ராசிகளிலும் காணப்படும்.
பல்வேறு யோகங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு யோகம் தான் விபரீத ராஜயோகம். சரி, விபரீத ராஜயோகம் எப்படி உருவாகிறது மற்றும் எதனால் இது விபரீத ராஜயோகம் என்று அழைக்கப்படுகிறது மற்றும் இந்த ராஜயோகம் வழங்கும் பலன்கள் என்னவென்பது குறித்து இனி காண்போம்.

விபரீத ராஜயோகம் எப்படி உருவாகிறது?
ஒரு ஜாதகத்தில் 6, 8 மற்றும் 12 ஆம் வீடுகளின் அதிபதிகள் ஒரே நேரத்தில் மற்ற இரண்டு கிரகங்களின் வீடுகளில் இருக்கும் போது விபரீத ராஜயோகம் உருவாகிறது. அதாவது 6 ஆவது வீட்டின் அதிபதி, 8 அல்லது 12 ஆவது வீட்டில் இருந்தால் அல்லது 12 ஆவது வீட்டின் அதிபதி 6 அல்லது 8 ஆவது வீட்டில் இருக்கும் போது உருவாகும்.
விபரீத ராஜயோகம் எந்த மாதிரியான பலன்களை அளிக்கும்?
கிரக மாற்றங்களால் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகும் விபரீத ராஜயோகம் நீண்ட காலம் நீடித்திருக்கும். அப்படி உருவாகும் காலத்தில் அந்நபர் குறிப்பிடத்தக்க வெற்றியையும், செழிப்பையும் பெறுவார்கள். இப்போது 50 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் விபரீத ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்கள் நிதி ஆதாயம், முன்னேற்றம், வருமானத்தில் உயர்வு போன்றவற்றைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகமானது நற்பலனை வழங்கும். முக்கியமாக இந்த யோகத்தால் இந்த ராசிக்காரர்கள் தங்களின் முயற்சிகளில் நல்ல வெற்றியை பெறுவார்கள். பணியிடத்தில் செல்வாக்கும், சம்பள உயர்வும் கிடைக்கும். இக்காலத்தில் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தால், எதிர்பாராத லாபத்தைப் பெறக்கூடும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் விபரீத ராஜயோகத்தால் அற்புதமான தொழில் வாய்ப்புக்களைப் பெறுவார்கள் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தையும், சாதகமான முடிவுகளையும் பெறுவார்கள். சமூகத்தில் மரியாதையும், மதிப்பும் அதிகரிக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் நல்ல அதிர்ஷ்டத்தை வாரி வழங்கப் போகிறது. இதுவரை தொழிலில் நிதி இழப்பை சந்தித்திருந்தால், இழந்த செல்வத்தை மீண்டும் பெறுவதோடு, தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும். வெளிநாடு செல்ல முயற்சித்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பங்குச் சந்தையில் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் விபரீத ராஜயோகத்தால் எதிர்பாராத பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் வாயய்ப்புள்ளது. இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணை இக்காலத்தில் அனைத்து முயற்சிகளிலும் உதவியாக இருப்பார். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சமூக அந்தஸ்து உயரும். உங்களின் கருத்துக்கள் இக்காலத்தில் மிகவும் மதிக்கப்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications