சிம்மம் செல்லும் சுக்கிரன்: இன்று முதல் அடுத்த ஒரு மாதம் இந்த ராசிகளுக்கு பண மழை கொட்டப் போகுது...

Venus Transit In Leo On 02 October 2023: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, காதல், ஆடம்பரம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர்.

மேலும் சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இத்தகைய சுக்கிரன் 2023 அக்டோபர் 02 ஆம் தேதி, அதாவது இன்று சூரியன் ஆளும் சிம்ம ராசிக்கு செல்கிறார். இந்த சிம்ம ராசியில் சுக்கிரன் நவம்பர் 02 ஆம் தேதி வரை இருந்து, பின் கன்னி ராசிக்கு செல்வார்.

Venus Transit In Leo On 02 October 2023: Effects On 12 Zodiac Signs In Tamil

சுக்கிரனின் ராசி மாற்றத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் நல்ல பண வரவையும், அதிர்ஷ்டத்தின் ஆதரவையும் பெற்றாலும், சில ராசிக்காரர்கள் வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இப்போது சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் அடுத்த ஒரு மாத காலம் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் காதலில் வெற்றி பெறுவார்கள். பொழுதுபோக்கு அல்லது மீடியாவில் பணிபுரிபவர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். விளையாட்டு துறையில் இருப்பவர்கள் சுக்கிரனின் அருளால் பிரபலமாவார்கள். திருமணமாகாதவர்கள், இக்காலத்தில் காதலில் விழ வாய்ப்புள்ளது.

ரிஷபம்

ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். இருப்பினும், தாய் அல்லது வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் மருத்துவ செலவுகள் சற்று அதிகமாக இருக்கும். இருப்பினும், குடும்ப சூழலை நன்கு வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இன்று முதல் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். பணியிடத்தில் அறிவாற்றலுடன் செயல்படுவீர்கள். இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் இக்காலத்தில் கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண பல வாய்ப்புகள் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

கடகம்

கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அடுத்த ஒரு மாத காலம் பல்வேறு ஆதாரங்களில் இருந்து நல்ல வருமானத்தைப் பெறுவார்கள். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்க்கையை வாழ்வார்கள். வாழ்க்கை முறை மேம்படும். திருமணமாகாத சிலர் இக்காலத்தில் தங்கள் துணையைக் காணலாம். மேலும் நீண்ட நாட்களாக காதலிப்பவர்கள் திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் மகிழ்ச்சியையும் வெற்றியையும் காண்பார்கள். காதல் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இருப்பினும், இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்காலம் பற்றிய கவலையால் இரவு தூங்க முடியாமல் அவதிப்படுவார்கள்.

கன்னி

கன்னி ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைககும். வழக்கத்தை விட அதிகமாக செலவுகளை சந்தித்தாலும், வருமானம் சீராக இருக்கும். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சி நிறைந்தும் இருக்கும். கூடுதலால வேலை தேடுபவர்களுக்கு இக்காலத்தில் புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

துலாம்

துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வங்கி, நிர்வாகம் போன்றவற்றில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். சிலர் தங்கள் அலுவலகத்தில் உயர் பதவியைப் பெற வாய்ப்புள்ளது. சிலருக்கு செல்வாக்கு மிக்கவர்களின் நட்பு கிடைக்கலாம். பணியிடத்தில் நீங்கள் எதிர்பாலினத்தவர்களிடையே மிகவும் பிரபலமாக வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்கார்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். ஃபேஷன், நடிப்பு, இசை, விளம்பரம், மார்க்கெட்டிங் அல்லது எழுத்து ஆகியவை துறையில் இருப்பவர்கள், தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவார் அடங்கும். மொத்தத்தில் இந்த மாதம் நன்றாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனல் இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இக்காலத்தில் கடினமாக உழைத்தால், சமூகத்தில் செல்வாக்கு அதிகரிப்தோடு, நிதி நிலையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும்.

மகரம்

மகர ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் பண வரவும் நன்றாக இருக்கும். முக்கியமாக வேலை செய்பவர்கள் அலுவலகத்தில் சில சிறப்பான நடவடிக்கைகளால் , நல்ல பண ஆதாரயத்தை பெறுவார்கள். எதிர்பாராதத பண வரவைப் பெறுவார்கள். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாயப்ப்கள் இம்மாதத்தில் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள். உங்கள் திருமணத்தில் நீங்கள் அதிக அன்பையும், நெருக்கத்தையும் அனுபவிக்கலாம், முக்கியமாக ஒ)ரு புதிய முயற்சியைத் தொடங்கினால், அதற்கு இக்காலம் பயனுள்ளதாக இருக்கும். திருமணமாகாதவர்களக்கு இக்காலத்தில் நல்ல பலன் கிகக்கும்.

மீனம்

மீன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களுக்கோ அல்லது உங்கள் வீட்டில் உள்ளோருக்கோ பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் எதிரிகளிடமிருந்து சில சவால்களை நீங்கள் சந்திக்க நேரிடும். ஆனால் அவற்றை திறம்பட எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு அங்கீகாரமும் வெற்றியும் கிடைக்கும். நிதி ரீதியாக, நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, October 2, 2023, 9:04 [IST]
Desktop Bottom Promotion