Latest Updates
-
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம்
இந்த மரங்களை வீட்டில் வளர்ப்பது துரதிர்ஷ்டம் மட்டுமின்றி உங்கள் பாவத்தையும் அதிகரிக்குமாம்... உஷார்!
அனைத்து வீடுகளிலும் செடிகள் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இது உங்கள் வீட்டிற்கு அழகான தோற்றத்தைக் கொடுப்பதுடன் காற்றை சுத்திகரிக்கும் வேலையையும் செய்கின்றன. இவை மட்டுமின்றி மரங்களும், செடிகளும் உங்கள் வீட்டின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டத்தை நிர்ணயிக்கவும் உதவும்.
மரங்களும் செடிகளும் வாஸ்துவுக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. ஆனால் வீட்டில் சில செடிகளை நடுவது உங்கள் வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தை அழைத்துவரும். இந்த செடிகளை நடுவதால் ஏற்படும் வாஸ்து தோஷத்தால் உங்கள் வீட்டில் பல பிரச்சினைகள் ஏற்படலாம்.

ஒவ்வொருவரும் தங்கள் வீட்டிலும் புல்வெளி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். வீட்டின் அழகை அதிகரிக்க புல்வெளியில் பல அழகான மரங்கள் மற்றும் செடிகள் இருக்க வேண்டும். ஆனால் சில மரங்கள் வீட்டின் வாஸ்துவை கெடுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த செடிகளை வீட்டில் நடுவது பல இன்னல்களை ஏற்படுத்தும். அவை என்னென்ன மரங்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
புளியமரம்
நமது சமூகத்தில் பல காலமாக கட்டமைக்கப்பட்டுள்ள நம்பிக்கைகளின்படி, புளிய மரங்கள் எதிர்மறை ஆற்றலை மிக விரைவாக ஈர்க்கின்றன. அதனால் தான் வீட்டில் புளியமரம் நடக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் விரும்பினால், கோயில் போன்ற ஏதாவது வழிபாட்டு தலத்தில் அல்லது பொது இடத்தில் இதனை.நடலாம்.
அகாசியா அல்லது வேல மரம்
ஆயுர்வேதம் மற்றும் பல்வேறு மத நூல்களின் படி, வேல மரம் மிகவும் புனிதமான மரம். சில இடங்களில் இது ஷமி மரம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் முட்கள் இருப்பதால் அதை வீட்டில் நடக்கூடாது. அகாசியா மட்டுமின்றி அனைத்து வகையான முள் செடிகளையும் வீடுகளில் இருந்து தள்ளி நட வேண்டும். ஏனெனில் இவை எதிர்மறை ஆற்றலை ஈர்த்து உங்கள் வீட்டில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
அரச மரம்
இந்திய மக்களின் ஆன்மீக நம்பிக்கைகளின் படி அரச மரம் மிகவும் புனிதமான மரமாக கருதப்படுகிறது. பத்து அசுவமேத யாகங்கள் நடத்துவதால் கிடைக்கும் பலன்களை ஒரு அரச மரம் வளர்ப்பது கொடுக்கும் என்று வேதங்கள் கூறுகின்றன. ஆனால் இந்த மரத்தை வீட்டில் நடக்கூடாது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, அரச மரத்தை நடுவதால் எந்த பாதிப்பும் இல்லை, ஆனால் அது வளர்ந்து வீட்டின் அடித்தளத்தை சேதப்படுத்தும். அந்த சூழலில் அதனை வெட்ட வேண்டிய நிலை ஏற்படும், அரச மரத்தை வெட்டுவது மிகப்பெரிய பாவமாகும். அதை வெட்டி பாவத்தைச் சேர்ப்பதை விட நடாமலே இருப்பது நல்லது.
வாழை மரம்
வாழை மரம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது, எனவே அதை கோவிலில் நடுவது மிகவும் பொருத்தமானது. இந்த மரத்தை வீட்டில் நட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இம்மரத்தின் புனிதம் கருதி கோவில் இருக்கும் இடத்தில் நடுவது பொருத்தமாக கருதப்படுகிறது.
போன்சாய் மரம்
துரதிர்ஷ்டவசமாக, வாஸ்து சாஸ்திரத்தின் படி, போன்சாய் செடி உங்கள் வீட்டு அலங்காரத்திற்கு ஒரு மோசமான செடியாக இருக்கும். இவை பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், இந்த செடிகள் மங்களகரமானவை அல்ல. இந்த செடியை வீட்டில் வைப்பதை தவிர்ப்பது நல்லது. இது மெதுவான அல்லது வளர்ச்சியின்மையைக் குறிக்கிறது மற்றும் மக்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்தில் தடைகளை ஏற்படுத்தக்கூடும்.



Click it and Unblock the Notifications
