Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
500 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் 2 ராஜயோகம்: மார்ச் முதல் இந்த 3 ராசிகளுக்கு ராஜயோகம் அடிக்கப்போகுது...
Two Rajyoga Made After 500 Years: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் சுமார் 500 ஆண்டுகளுக்கு பின் இரண்டு ராஜயோகங்கள் ஒரே வேளையில் உருவாகவுள்ளன.
அதுவும் நீதிமான் சனி பகவான் மற்றும் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனால் உருவாகவுள்ளன. அதில் சனி ஏற்கனவே சச ராஜயோகத்தை உருவாக்கியுள்ளனார். அதே வேளையில், சுக்கிரன் மாளவ்ய ராஜயோகத்தையும் உருவாக்கவும் உள்ளார். இப்படி இரண்டு மங்களகரமான ராஜயோகங்கள் மார்ச் மாதத்தில் உருவாகவுள்ளன.

இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் சூரியனைப் போல் பிரகாசிக்கப் போகிறது. எதிர்பாராத வகையில் நிதி நன்மைகளுடன், தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு மாளவ்ய மற்றும் சச ராஜயோகமானது நற்பலன்களை வழங்கும். முக்கியமாக குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும். எந்த ஒருவேலையிலும் முழு கவனத்தை செலுத்த முடியும். புத்திசாலித்தனமாக அனைத்து முடிவுகளையும் எடுப்பீர்கள். உங்களின் ஆளுமை மேம்படும். காதலிப்பவர்களுக்கு இக்காலம் இனிமையாக இருக்கும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த திருமண பேச்சுகள், இக்காலத்தில் வெற்றிகரகமாக முடிவடையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சச ராஜயோகம் மற்றும் மாளவ்ய ராஜயோகம் சாதகமான பலன்களை வழங்கும். முக்கியமாக ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். கூட்டு தொழில் செய்ய நீண்ட காலமாக திட்டமிட்டிருந்தால், இந்த யோக காலத்தில் அதைத் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத வகையில் நிதி நன்மைகள் கிடைக்கும்.
மிதுனம்
மாளவ்ய மற்றும் சச ராஜயோகமானது மிதுன ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல நன்மைகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றிகள் குவியும். புத்திசாலித்தனத்தால் பல காரியங்களில் வெற்றி காண்பீர்கள் மற்றும் நினைவாற்றல் மேம்படும். ஆனால் உங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். கடினமாக உழைத்தால், அந்த கடின உழைப்புக்கான பலன் நிச்சயம் உடனே கிடைக்கும். இந்த யோகத்தால் வாழ்க்கையில் புதிய உயரத்தை அடைவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
