Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
10 ஆண்டுகளுக்கு பின் மகரத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
Trigraha Yoga 2024: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றி, சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் 2024 ஜனவரி மாதத்தில் சூரியன் மகர ராசிக்குள் நுழைகிறார். அதைத் தொடர்ந்து சுக்கிரனும், செவ்வாயும் மகர ராசியில் நுழையவுள்ளன.
இப்படி மகர ராசியில் 3 கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த 3 கிரகங்களின் சேர்க்கையால் மகர ராசியில் உருவாகவுள்ள திரிகிரக யோகமானது 10 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது. இந்த யோகம் மங்களகரமான யோகம் மற்றும் இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக இந்த திரிகிரக யோகத்தால் 3 ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றியைப் பெறுவதோடு, நல்ல லாபத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது மகர ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகமானது நற்பலன்களை வழங்கவுள்ளது. பணிபுரிபவர்களுக்கும், வணிகர்களுக்கும் இக்காலம் பிரகாசமாக இருக்கும். பணம் தொடர்பான திட்டங்கள் வெற்றிகரமாக இருக்கும். தொழில் ரீதியாக நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு இந்த யோகத்தால் நல்ல வரன் அமையும்.
துலாம்
துலாம் ராசியின் 4 ஆவது வீட்டில் திரிகிரக யோகமானது உருவாகவுள்ளதால், இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நல்ல பொருள் இன்பங்களைப் பெறக்கூடும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாயுடனான உறவு நன்றாக இருக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். சிலர் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கலாம். சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு இந்த யோக காலத்தில் திறக்கும். முக்கியமான வேலைகள் வெற்றிகரமான முடிவடையும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள். சிலர் பயணங்களை மேற்கொள்ளலாம். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தெய்வீக பணிகளுக்கு செலவுகளை செய்வீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
