Latest Updates
-
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்
ஆசியாவின் டாப் 7 பணக்காரர்களும்.. அவர்களின் சொத்து மதிப்பும்... இதுல முதலிடத்தில் யார்-ன்னு பாருங்களேன்..
Richest People In Asia: உலக பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதால், செல்வத்தை உருவாக்குவதற்கான குறிப்பிடத்தக்க மையமாக ஆசியா உருவெடுத்துள்ளது. உலகில் உள்ள கண்டங்களில் ஆசிய கண்டத்தில் தான் செல்வந்தர்கள் அதிகமாக உள்ளனர். மேலும் ஆசியாவில் உள்ள நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பு இந்த செல்வந்தர்களுக்கும் உள்ளன.
அந்த வகையில் 2024 ஆகஸ்ட் மாத நிலவரப்படி, ஃபோர்ப்ஸ் பில்லியனர்களின் நிகழ்நேர பட்டியலில் ஆசியாவின் டாப் 10 பணக்காரர்களை வெளியிட்டது. இப்போது ஆகஸ்ட் 2024 மாத நிலவரப்படி ஆசியாவின் டாப் 7 பணக்காரர்கள் யார்யார் மற்றும் அவர்களின் சொத்து மதிப்பு, தொழில்களில் அவர்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்பு ஆகியவற்றைக் காண்போம்.

7. ஜாங் யிமிங்
பைட் டான்ஸின் நிறுவனரான ஜாங் யிமிங், 1 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட பிரபலாமன செயலியான டிக்டாக்கை உருவாக்கியதில் பிரபலமானவர். இவரது சொத்து மதிப்பு 43.4 பில்லியன் டாலர் ஆகும். அமெரிக்காவில் சாத்தியமான தடைகள் காரணமாக சவால்களை எதிர்கொண்டாலும், பைட் டான்ஸ் செய்தி மற்றும் கேமிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செல்வாக்கு செலுத்துகிறது. சமீபத்தில் அமெரிக்க காங்கிரஸ் ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது, இது டிக்டோக்கை தடை செய்ய முயற்சிக்கும் அதிகாரத்தை அமெரிக்க அரசாங்கத்திற்கு வழங்கியது. TikTok இன் புகழுக்கு அப்பால், பைட் டான்ஸ் செய்தி, கல்வி மற்றும் கேமிங் போன்ற பல்வேறு துறைகளில் பிரபலமாக பரவியுள்ளது.
6. தடாஷி யானாய்
ஃபாஸ்ட் ரீடெய்லிங்கின் நிறுவனரான தடாஷி யானாய், யுனிக்லோ செயின் மற்றும் தியரி மற்றும் ஜே பிராண்ட் போன்ற பிற பிராண்டுகளை மேற்பார்வையிடுகிறார். இவரது சொத்து மதிப்பு என்றால் 45.6 பில்லியன் டாலர் ஆகும். இவர் சுமார் 25 நாடுகளில் 2,400-க்கு மேற்பட்ட கடையை கொண்டுள்ளார்.
5. கொலின் ஜெங் ஹுவாங்
உலக பணக்காரர்களின் பட்டியலில் 5 ஆவது இடத்தில் சீனாவைச் சேர்ந்த கொலின் ஜெங் ஹுவாங் உள்ளார். PDD ஹோல்டிங்ஸ் எனும் இ-காமர்ஸ் மூலம் இவர் சம்பாதித்த சொத்துக்களின் மதிப்பு 49.9 மில்லியன் டாலர் ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு தலைவர் பதவியில் இருந்து விலகிய போதிலும், ஹுவாங் இன்னும் இ-காமர்ஸ் நிறுவனத்தில் 28% பங்குகளை வைத்திருக்கிறார். இது அவரை பணக்காரர்களுள் ஒருவராக காட்டுகிறது.
4. ஜாங் ஷான்ஷன்
ஆசியாவின் பணக்காரர்களின் பட்டியலில் 4 ஆவது இடத்தில் சீனாவைச் சேர்ந்த ஜாங் ஷான்ஷன் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 49.9 மில்லியன் டாலர் ஆகும். இவர் Nongfu Spring என்னும் ஒரு பாட்டில் தண்ணீர் நிறுவனத்தின் தலைவர் ஆகார். 2022 ஆம் ஆண்டின் இறுதியில் மதிப்பீடுகளின்படி, Zhong Shanshan முந்தைய ஆண்டில் 62.3 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் சீனாவின் பணக்காரராக தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
3. பிரஜோகோ பங்கேஸ்து
ஆசிய பணக்காரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் பிரஜோகோ பங்கேஸ்து உள்ளார். இவர் ஆற்றல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் அதிபர் ஆவார். இவரது சொத்து மதிப்பு 68 பில்லியன் டாலர் ஆகும். இவர் மர வணிகத்துடன் தொடங்கினாலும், இன்று, அவரது நிறுவனம், PT Barito Pacific, பெட்ரோ கெமிக்கல், பிளாஸ்டிக் உற்பத்தி, சுரங்கம் மற்றும் இந்தோனேசியாவில் வெப்ப ஆற்றல் ஆகியவற்றில் முன்னணியில் உள்ளது.
2. கௌதம் அதானி
இரண்டாவதாக கவுதம் அதானி இந்தியாவின் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள அதானி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார் . இவரது சொத்து மதிப்பு என்றால் 86 பில்லியன் டாலர் ஆகும். இவரது நிறுவனம் துறைமுகங்கள், விமான நிலையங்கள், எரிசக்தி ஆகியவற்றை உள்ளடக்கியது. 1988 இல் வர்த்தக நிறுவனமாகத் தொடங்கிய இவர், ஆசியாவின் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.
1. முகேஷ் அம்பானி
ஆசிய கண்டத்திலேயே இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி 115.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராவார். அம்பானி கடந்த பத்து ஆண்டுகளாக ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையால் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராகத் தொடர்ந்து இடம் பிடித்துள்ளார்.



Click it and Unblock the Notifications