Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிராத.. உலகில் உள்ள டாப் 10 வினோதமான பயங்கள்.. இதுக்கெல்லாமா பயப்படுவாங்க...
Strange Phobias: அனைவருக்குமே பயம் என்ற உணர்வு இருக்கும். பயம் என்பது அச்சத்தை வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடாகும். ஆனால் அனைவருமே ஒரே விஷயத்திற்கு பயப்படமாட்டோம். அது ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
ஆங்கிலத்தில் இதை ஃபோபியா என்று அழைப்பர். இந்த "ஃபோபியா" என்ற வார்த்தையானது "ஃபோபோஸ்" என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து வந்தது. ஃபோபோஸ் என்றால் பயம் என்று பொருள். கிரேக்க புராணங்களின் படி, ஃபோபோஸ் பயம் மற்றும் பீதியின் கடவுள். இவர் ஒருவரை பயமுறுத்தும் நபராக சித்தரிக்கப்படுகிறார்.

பயத்தில் பொதுவான பயங்கள் முதல் பலரும் கேள்விபட்டிராத அரிய பயங்கள் வரை உள்ளன. இவற்றில் சிலருக்கு உயரத்தைக் கண்டால் பயமாக இருக்கும், சிலருக்கு பல்லி, கரப்பான் பூச்சி போன்றவற்றைக் கண்டால் பயமாக இருக்கும். இவை பொதுவான பயங்கள் ஆகும்.
ஆனால் இன்னும் சிலருக்கு பொது கோழியைக் கண்டால், கண்ணாடியைக் கண்டால் பயமாக இருக்கும். இவை நிறைய பேர் கேள்விபட்டிராத பயங்களாக இருக்கலாம். இதுப்போன்று பலரும் அறிந்திராத உலகில் உள்ள சில அரிய ஃபோபியாக்கள் குறித்து இப்போது காண்போம்.
1. அலெக்டோரோபோபியா
அலெக்டோரோபோபியா என்பது கோழிகளைப் பற்றிய பயம். இந்த வகையான பயம் கடந்த காலத்தில் நடந்த அதிர்ச்சிகரமான அனுபவம் அல்லது மூடநம்பிக்கைகளுடன் தொடர்புடைய கலாச்சார நம்பிக்கைகளினால் ஏற்பட்டிருக்கலாம். உலகில் இந்த வகையான பயத்தைக் கொண்டவர்களும் உள்ளனர்.
2. எமடோஃபோபியா
எமடோஃபோபியா என்பது வாந்தி பற்றிய பயம். இந்த வகையான பயத்தைக் கொண்டவர்கள் தாங்கள் வாந்தி எடுத்தாலோ அல்லது தன்னைச் சுற்றியிருப்பவர்கள் வாந்தி எடுப்பதைக் கண்டாலே அதிகம் பயப்படுவார்கள். இப்படியான பயம் ஒருவருக்கு கடந்த காலத்தில் நடந்த அதிர்ச்சிகரமான அனுபவங்கள் அல்லது மரபணு காரணிகளால் ஏற்பட்டிருக்கலாம்.
3. ஸ்பெக்ட்ரோஃபோபியா
ஸ்பெக்ட்ரோஃபோபியா என்பது கண்ணாடியை பார்த்தாலே பயம். இப்படியான பயத்தைக் கொண்டவர்கள் குறைவான சுயமரியாதையை அனுபவிப்பார்கள். மேலும் இவர்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள அல்லது தங்களின் முகம் எப்படி இருக்கிறது என்பதை அறிய கண்ணாடியைக் கூட பார்க்க முடியாமல் அவதிப்படலாம். இந்த மாதிரியான பயத்தையும் உலகில் உள்ளவர்களுக்கு உள்ளது.
4. ஜெராஸ்கோபோபியா
ஜெராஸ்கோபோபியா என்பது வயதாவதைப் பற்றிய பயம். இந்த மாதிரியான பயத்தைக் கொண்டவர்கள் வயதாவதால் தங்கள் உடல் மற்றும் மனதில் ஏற்படும் மாற்றங்களை பற்றி நினைக்கும் போது மனதில் ஒருவித பதட்டம், மனச்சோர்வு, பீதி போன்றவற்றை அனுபவிப்பார்கள். தங்கள் வாழ்க்கையின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிடுவோமோ அல்லது மற்றவர்களை சார்ந்து வாழ வேண்டியிருக்குமோ என்ற பயமும் காரணமாக இருக்கலாம்.
5. டெசிடோஃபோபியா
டெசிடோஃபோபியா என்பது முடிவுகளை எடுப்பது குறித்த பயம். இந்த பயத்தைக் கொண்டவர்கள் ஒரு முடிவை எடுக்கும் போது கடுமையான மன அழுத்தம் மற்றம் பதற்றம் போன்றவற்றை அனுபவிப்பார்கள். பெரும்பாலும் இம்மாதிரியான பயமானது தவறான தேர்வு பயம் அல்லது தோல்வி பயம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கும். அதோடு இது தன்னம்பிக்கை குறைவு, சுய சந்தேகம் அல்லது துஷ்பிரயோகம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கும்.
6. அம்புலோபோபியா
அம்புலோபோபியா என்பது நடக்க, நிற்க பற்றிய பயம். இந்த பயத்தைக் கொண்டவர்களின் காரணங்கள் சரியாக புரிந்து கொள்ள முடியாதவாறு இருக்கும். ஏனெனில் இவர்களுக்கான இந்த பயம் கடந்த காலத்தில் சந்தித்த அதிர்ச்சிகரமான அனுபவங்கள், பதட்டத்திற்கான மரபணு காரணிகள், கவலை கோளாறுகள் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்க வாய்ப்புள்ளது.
7. அல்லியம்போபியா
அல்லியம்போபியா என்பது பூண்டு பற்றிய பயம். ஆம், இவ்வுலகில் பூண்டிற்கும் பயப்படுபவர்கள் உள்ளனர். இந்த பயத்திற்கான சரியான காரணங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் இந்த பயத்திற்கு மரபணுக்கள் மற்றும் ஒருவரது சூழல் ஆகிய இரண்டும் முக்கிய பங்கை வகிக்கலாம்.
8. ஹிப்போபொடோமோன்ஸ்ட்ரோசெஸ்கிபெடலியோபோபியா
ஹிப்போபொடோமோன்ஸ்ட்ரோசெஸ்கிபெடலியோபோபியா என்ற இந்த பெயருக்கு ஏற்ப இந்த பயமும் ஒரு வித்தியாசமான ஒன்று. அதாவது இது நீண்ட வார்த்தைகளைப் பற்றிய பயம். இந்த பயத்தைக் கொண்டவர்கள் நீளமாக பேசவே பயப்படுவார்கள்.
9. அனாடிடேபோபியா
அனாடிடேபோபியா என்பது வாத்துகளை பார்ப்பது பற்றிய பயம். இந்த பயம் உள்ளவர்கள் தாங்கள் இருக்கும் இடங்களை பொருட்படுத்தாமல், வாத்துகள் எப்போதும் தொடர்ந்து தங்களை கவனிக்கப்படுவது போல் அல்லது பின்தொடர்வது போன்ற பயத்தைக் கொண்டிருப்பார்கள்.
10. ஃபோபோபோபியா
ஃபோபோபோபியா என்பது பயத்தைப் பற்றிய பயம். என்ன வித்தியாசமாக உள்ளது தானே! ஆம், இந்த வகையான பயத்தைக் கொண்டவர்கள் பயங்களை உருவாக்கும் பயத்தை தொடர்ந்து அனுபவிக்கலாம். இந்த வகை பயம் கொண்டவர்கள் குளிர், வியர்வை மற்றும் வேகமான இதயத் துடிப்பு போன்றவற்றை பயத்தின் போது அனுபவிப்பார்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பயங்கள் அனைத்தும் மிகவும் அரிதான பயங்கள் மட்டுமின்றி, சற்று நகைச்சுவையாகவும் இருக்கலாம். ஆனால் இந்த மாதிரியான பயங்கள் அனைத்தும் தீவிரமான மன கவலையையும், மிகுந்த துன்பங்களையும் ஏற்படுத்தக்கூடிய மோசமான பயங்களாகும்.



Click it and Unblock the Notifications











