தென்னிந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகைகள் இவர்கள்தான்... முதலிடத்தில் உள்ள நடிகை யார் தெரியுமா?

Top 10 Richest South Indian Actresses In 2025: திரைபிரபலங்கள் மீது எப்போதுமே அனைவருக்கும் ஒரு ஆர்வம் இருக்கும், குறிப்பாக நடிகைகள் மீது கூடுதல் ஆர்வம் இருக்கும். தென்னிந்திய நடிகைகள் தங்களின் வெற்றிகளாலும், செல்வத்தாலும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகின்றனர். சில தென்னிந்திய நடிகைகள் தற்போது பாலிவுட்டில் வெற்றிகரமாக தடம் பதித்து வருகின்றனர்.

தங்களின் நடிப்பாலும், திறமையாலும் நடிகைகள் புகழை மட்டுமல்ல பல கோடிகளையும் சம்பாதித்து வருகின்றனர். இந்த திறமையான நடிகைகள் 45 கோடி முதல் 200 கோடி வரை சொத்துக்களுடன் தென்னிந்தியாவின் பணக்கார நடிகைகளில் ஒருவராக மட்டுமல்லாமல், தென்னிந்தியாவின் திரைப்படக் கலாச்சாரத்தை இந்தியா முழுவதும் கொண்டு செல்லும் தூதுவராகவும் உள்ளனர். இந்த பதிவில் தென்னிந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகைகள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

Top 10 Richest South Indian Actresses In 2025

ஜோதிகா

தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மிகவும் பிரபலமான மற்றும் அனுபவம் வாய்ந்த நடிகைகளில் ஒருவரான ஜோதிகாவின் சொத்து மதிப்பு சுமார் ₹331 கோடி என Lifestyle Asia தெரிவித்துள்ளது. திருமணத்திற்கு பிறகு சிறிய இடைவெளி எடுத்த ஜோதிகா மீண்டும் 36 வயதினிலே படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன்பின்னர் தமிழ், ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் பல வெற்றிப்படங்களில் நடித்தார். மேலும் பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

நயன்தாரா

"லேடி சூப்பர் ஸ்டார்" என்று அழைக்கப்படும் நயன்தாரா, இணைய அறிக்கைகள் மற்றும் GQ இந்தியா படி, சுமார் ₹200 கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளார். கடந்த ஆண்டு ரிலீசாகி 1000 கோடிக்கு மேல் வசூலித்த ஜவான் திரைப்படம் மூலம் பாலிவுட் சினிமாவிலும் வெற்றிகரமான நடிகையாக நுழைந்துள்ளார். அவரது இந்தி திரைப்பட அறிமுகத்திலேயே, அவர் ₹10 கோடி சம்பாதித்ததாக கூறப்படுகிறது. ஒரு சிறந்த நடிகையாக அவர் ஐந்து பிலிம்பேர் விருதுகளையும், ஏராளமான மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

அனுஷ்கா ஷெட்டி

தனது மிரட்டும் நடிப்பால் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான அனுஷ்காவின் மொத்த சொத்து மதிப்பு 130 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பாகுபலி முதல் பாகம், பாகுபலி 2, அருந்ததி மற்றும் மிர்ச்சி ஆகிய படங்களில் அவர் நடித்ததன் மூலம் அவர் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார். அவரது பிளாக்பஸ்டர்கள் அவரை தென்னிந்தியாவையும் தாண்டி பான்-இந்திய பார்வையாளர்களிடையே அவர்களை பிரபலமாக்கியது.

தமன்னா பாட்டியா

Lifestyle Asia மற்றும் பிற இணைய அறிக்கைகளின் படி, தமன்னா ₹120 கோடி சொத்து மதிப்புடன் பாலிவுட், தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். திரைப்படங்களையும் தாண்டி தற்போது வெப் சீரிஸ்களில் நடிப்பதன் மூலம் அவர் பான்-இந்திய ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சமந்தா

தெலுங்கு சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான சமந்தாவின் சொத்து மதிப்பு தற்போது சுமார் ₹100 கோடிக்கும் மேல். தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமாக இருந்த சமந்தா ​​தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸ் மூலம் பான்இந்திய ரசிகர்களை கவர்ந்தார். அவர் தனது நடிப்பிற்காக பல SIIMA மற்றும் பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்.

த்ரிஷா கிருஷ்னன்

தென்னிந்தியாவில் 20 ஆண்டுகளுக்கும் மேல் வெற்றிகரமான நடிகையாக இருந்து வரும் த்ரிஷாவின் சொத்து மதிப்பு ₹85 கோடி என்று கூறப்படுகிறது. ஆரம்ப காலத்தில் கில்லி, சாமி போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த த்ரிஷா தற்போது 96, லியோ திரைப்படங்கள் மூலம் தற்போதும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரு வெற்றிகரமான திரைப்பயணத்தைக் கொண்டுள்ளார், அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு ₹80 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மகதீரா, மிஸ்டர் பெர்ஃபெக்ட், துப்பாக்கி மற்றும் மெர்சல் போன்ற படங்களில் அவரது நடிப்பிற்காக அனைவராலும் பாராட்டப்பட்டார்.

ராஷ்மிகா மந்தனா

"நேஷனல் க்ரஷ்" என்று அழைக்கப்படும் ராஷ்மிகா, ₹66 கோடி சொத்து மதிப்புடன் வேகமாக வளர்ந்து வரும் பிரபலங்களில்நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்க். கீதா கோவிந்தம், புஷ்பா திரைப்படம் மூலம் பிரபலமான ராஷ்மிகா அனிமல் திரைப்படம் மூலம் பாலிவுட்டிலும் தனது வெற்றிப்பயணத்தைத் தொடங்கினார்.

ராஷி கன்னா

ராஷி கன்னாவின் சொத்து மதிப்பு ₹59 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. பல தென்னிந்திய வெற்றிப்படங்கள் மூலம் பிரபலமான ராஷி கன்னா இந்தியா முழுவதும் பிரபலமான Farzi வெப் சீரிஸ் மூலம் பான்-இந்தியா பிரபல நடிகையாக மாறினார்.

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டேவின் சொத்து மதிப்பு ₹55 முதல் ₹60 கோடி வரை இருக்கும் என்று நம்பப்படுகிறது. புட்ட பொம்மா பாடல் மூலம் சர்வதேச புகழ் பெற்ற பூஜா சமீபத்தில் வெளிவந்த கனிமா பாடல் மூலமும் அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

சாய் பல்லவி

சாய் பல்லவி தனது இயல்பான நடிப்பிற்காகவும், வசீகரமான நடனத்திற்கும் பெயர் பெற்றவர், மேலும் ₹45 முதல் ₹50 கோடி வரை சொத்து மதிப்பு கொண்டவர். பிரேமம் படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது, மேலும் அவர் ஃபிடா, மாரி 2, அதிரன் மற்றும் ஷியாம் சிங்கா ராய் ஆகிய படங்களில் நன்கு அறியப்பட்ட வேடங்களில் நடித்தார். கவர்ச்சியில் கவனம் செலுத்தாமல் கதாபாத்திரத்தில் கவனம் செலுத்தும் சாய் பல்லவி தற்போது பலருக்கும் பிடித்த நடிகையாக மாறி வருகிறார். இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படமாக வரப்போகும் ராமாயணாவில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக சீதா தேவி கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் பாலிவுட்டில் அறிமுமாகவிருக்கிறார்.

Story first published: Wednesday, July 9, 2025, 12:33 [IST]
Desktop Bottom Promotion